06 ஜூன் 2011

தமிழில் தட்டச்சு செய்ய கூகுள் தரும் மென்பொருள் !


தமிழில் தட்டச்சு செய்வது சிலருக்கு சவாலான விஷயமாக இருக்கும். முக்கியமாக பதிவு எழுதுபவர்களுக்கும் பதிவுகளில் கருத்துக்களை எழுதுபவர்களுக்கும் தமிழ் தட்டச்சு மிகவும் அவசியமானது .

இதற்கு பல மென்பொருட்கள் உள்ளன என்றாலும் கூகுள் தரும் GOOGLE IME எனும் இந்த இலவச மென்பொருள் மூலம் தட்டச்சு செய்வது மிகவும் எளிதாக உள்ளது .

இதை WINDOWS XP OS  ல் எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இப்போது பார்ப்போம் .

முதலில் இங்கே கிளிக் செய்து மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும் .

அதன் பிறகு control panel ஐ திறந்து Regional and language option ஐ திறக்கவும்.இதில் languages எனும் tab ஐ தேர்வு செய்து அதில் details ஐ சுட்டவும் .

அடுத்ததாக settings tab ல் Tamil ஐ தேர்வு செய்து ADD பட்டனை அழுத்தி OK அழுத்தி வெளியேறவும் .

இப்போது உங்கள் TASK BAR ல் TA என தமிழ் மொழிக்கான சுட்டி இணைந்திருக்கும் .

இனி நீங்கள் MICROSOFT WORD ஐ திறந்து TASK BAR  ல் உள்ள TA ஐ கிளிக் செய்து விட்டு தமிழில் தட்டச்சு செய்யலாம் .இதில் எழும் சந்தேகங்களை கருத்து பெட்டியில் தெரிவிக்கலாம் .

14 கருத்துகள்:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

அறிய தகவல்...
கண்டிப்பாக இது பலபேருக்கு பயன்படும்...

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

தெரிந்த விஷயமாக இருந்தாலும் விளக்கம் அருமை நண்பா..

கடம்பவன குயில் சொன்னது…

ஆரம்பகாலத்தில் நானும் தமிழில் கணிணியில் தட்டச்சுசெய்ய தவித்திருக்கிறேன். தங்கள் பதிவு அநேகருக்கு பயன்தரும் அருமையான பதிவு. தொடர்க.

பிரவின்குமார் சொன்னது…

மிகவும் தெளிவான படவிளக்கங்களுடன் பயனுள்ள தகவல் பகிர்வு நண்பரே..!

shanmugavel சொன்னது…

useful post.thanks

koodal bala சொன்னது…

@# கவிதை வீதி # சௌந்தர் கருத்துக்கு நன்றி சௌந்தர் அண்ணே .....

koodal bala சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *! OK அண்ணே .....

koodal bala சொன்னது…

@கடம்பவன குயில் நானும் கூட ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப் பட்டிருக்கிறேன் .அதனால்தான் கணினிக்கு புதியவர்களுக்காக இந்த பதிவு ...

koodal bala சொன்னது…

@பிரவின்குமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரவீன் .....

koodal bala சொன்னது…

@shanmugavel THANKS ALSO FOR YOU ........

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

அனைவருக்கும் பயன்படும் நல்ல பதிவு

Abdul Basith சொன்னது…

இப்பொழுதுதான் இதைப் பற்றி பதிவெழுதுவதற்காக Screenshot எல்லாம் எடுத்துவிட்டு, கூகிளில் தேடினால், முதல் பக்கத்தில் இந்த பதிவு. என்ன செய்ய?
:)

இருப்பினும் அவசியமான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா!

கிறிஸ்துராஜ் சொன்னது…

தங்களின் ஒவொரு பதிவும் மிகவும் சிறப்பாக இருக்கிறது.

deenmobileservice சொன்னது…

தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி