07 ஏப்ரல் 2012

கூடங்குளம் : சில திடுக்கிடும் சம்பவங்கள் !

இங்கே நான் பகிரப் போகும் சம்பவங்கள் பகுத்தறிவுக்கு அப்பார் பட்டவையாக இருக்கலாம் ....எனினும்  சிந்திக்க வைக்கும் சில சம்பவங்களைப் இங்கே பகிர்கின்றேன்.


கூடங்குளம் அணு உலை அமைக்க எப்போது திட்டமிடப் பட்டதோ அப்போதிருந்தே பல்வேறு தடைகள் நிகழ்ந்து வந்துள்ளன .கூடங்குளத்தில் அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் 20-9-1988 ல் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் சோவியத் யூனியன் அதிபர் மிக்கேல் கோர்பசேவுக்குமிடையே கையெழுத்தானது .

26 ஏப்ரல்  1986 ல் உலகின் மிக மோசமான அணு விபத்து செர்னோபிலில் நிகழ்ந்திருந்த நிலையில் இரு வருடத்திற்குள்ளாகவே இவ்வொப்பந்தம் நிகழ்ந்ததை சுற்று சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்துள்ளார்கள் . அவ்வொப்பந்தத்திற்கு பின் நிகழ்ந்த சில மோசமான சம்பவங்களை பகிர்கின்றேன் .

1 ) கூடங்குளம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 21-5-1991 ல் பலியானார் 

2) 1991  ஆகஸ்டில் சோவியத் யூனியன் பிளவுண்டது கூடங்குளம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கோர்பசேவ் பதவியிழந்தார் .அதனைத் தொடர்ந்து கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணிகள் நிறுத்தப் பட்டன.

3)பின்னர் தூக்கத்திற்கு புகழ் பெற்ற முன்னாள் பிரதமர் தேவ கவுடா மற்றும் ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ஸ்டின் ஆகியோர் மார்ச் 1997  கூடங்குளம் ஒப்பந்தத்தை புதுப்பித்தனர் .மீண்டும் கூடங்குளத்தில் பணிகள் தொடங்கின .அதன் பின்னர் தேவ கவுடா அரசியல் அநாதை ஆகிவிட்டார் 

4 ) 7-1-2008 ல் கூடங்குளம் அணு உலை இயக்குனராக இருந்த சுனில் குமார் அகர்வால் தனது 55  வது வயதில் திடீர் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார் 

5 ) 9-5-2010 ல் உசிலம்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தற்போது அணு மின் நிலைய இயக்குனராக இருக்கும் திரு காசிநாத் பாலாஜி பயணம் செய்த வாகனம் சிக்கியது.விபத்தில் அவர் மனைவி மரணமடைந்த துயரம் நிகழ்ந்தது.அவருக்கு படுகாயம் ஏற்பட்டது .

6) 21-6-2011 ல் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் தலைமை வடிவமைப்பாளராக இருந்த ரஷ்யாவைச் சேர்ந்த செர்கே ரிசொவ் விமான விபத்தில் பலியானார் .

இது பற்றி கூடங்குளம் பகுதியில் வசிக்கும் முதியவர்கள் கூறும்போது கூடங்குளம் அணு மின் நிலையம் அமைந்திருப்பது விஸ்வாமித்திரர் பூமிஎன்றும் இப்பகுதிக்கு அழிவு ஏற்படுவதை விஸ்வாமித்திரர் தடுக்கிறார் என்றும் கூறுகின்றனர்.

(பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்காக ராமர் ,லட்சுமணர் காவல் காக்க விஸ்வாமித்திரர் யாகம் செய்த இடமாகவும் யாகத்தைக் குலைக்க வந்த தாடகையை ராமர் வதம் செய்த இடமாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ள விஜயாபதி கூடன்குளத்திலிருந்து 4  கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.)

கடந்த 4-3-2012 ல் கூடங்குளம் பகுதி மக்கள் அணு உலையை மூடக்கோரி விஸ்வாமித்திரர் ஆலயத்திற்கு பால்குடம் ஏந்தி ஊர்வலம் சென்றனர் அதற்கு அடுத்த தினமே டில்லியில் நிலநடுக்கம் வந்து கட்டிடங்கள் குலுங்கியதும்  நினைவுகூறத் தக்கது.

22 கருத்துகள்:

மகேந்திரன் சொன்னது…

சிந்திக்க வேண்டிய விஷயம் தான்..

தறுதலை சொன்னது…

போட்டுத் தாக்குங்க. முள்ள முள்ளாளையும் எடுக்கலாம். தப்பே இல்ல

அனைத்து ஹிந்திய இந்துக்களே எழுமின் விழிமின்
ராமர் பாலத்தை இடிக்க தடை வாங்கியது போல் விஸ்வாமித்திரன் பூமியை காப்பற்றுங்கள்.


-----------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஏப்"2012)

பெயரில்லா சொன்னது…

அதான் தோத்து போய் உடம்பு எல்லாம் செம்புள்ளி கரும்புள்ளி புத்தின அப்புறமும் உனக்கு இன்னும் அடி வேண்டுமா போடா தறுதலை போய் வேறு வேலை இருந்தா பாரு

பெயரில்லா சொன்னது…

What are you trying to say.....tell directly. please...

பாரத்... பாரதி... சொன்னது…

அறிவியல் பூர்வமான யோசிக்க வேண்டும் என்று சொல்பவர்களையும், சஞ்சலப்படுத்திவிடும் நிகழ்வுகள். அணு உலை செயல்படும் நிலை உறுதியாகி விட்ட சூழ்நிலையில், இனியும் எந்த துக்க நிகழ்வும் நிகழ்ந்து விடக்கூடாது என்பது தான் எமது விருப்பம்.

chinna malai சொன்னது…

உண்மையில் யோசிக்க வேண்டும்...

koodal bala சொன்னது…

@பெயரில்லா\\\ What are you trying to say.....tell directly. please...\\\ Abandon kknpp and save our people and be safely yourself.

தமிழானவன் சொன்னது…

தறுதலையை வழிமொழிகிறேன்

kari kalan சொன்னது…

போச்சுடா! இன்னொரு ராமர் பூமியா?
எதுக்கும் சுப்பிரமணியசாமிக்கும் தகவல் கொடுத்துடுங்க, எல்லாம் பூரணமாயிடும் :))

//பின்னர் தூக்கத்திற்கு புகழ் பெற்ற முன்னாள் பிரதமர் தேவ கவுடா மற்றும் ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ஸ்டின் ஆகியோர் மார்ச் 1997 கூடங்குளம் ஒப்பந்தத்தை புதுப்பித்தனர் .மீண்டும் கூடங்குளத்தில் பணிகள் தொடங்கின .அதன் பின்னர் தேவ கவுடா அரசியல் அநாதை ஆகிவிட்டார் //
அதுக்கு முன்னர் மட்டும் அரசியலில் ஜொலித்து கொண்டிருந்தாரோ?
போங்க ஸார் ஜோக் பண்ணிகிட்டு....
அவர் PM ஆனதே ஒரு சூழ்நிலை அதிர்ஸ்டம் (accident)ஸார் (சூழ் நிலை கைதின்னு சொல்வது போலவே சூழ்நிலை அதிர்ஸ்டம் ஏன்று சொல்கிறேன்).

பெயரில்லா சொன்னது…

நீ செத்தப்புறம் உன் மூளையை எடுத்து ஆராய்ச்சி பண்ண அமெரிக்க திட்டம் போட்ருக்காம்..உட்றாதே பாலு.....மிகப்பெரிய அறிவுத்திலகத்தின் மூளையை அவனுக வச்சுகிட்டா அப்புறம் இந்தியா எப்படி வல்றசாவறது ?

Vairai Sathish சொன்னது…

நல்ல பதிவு அண்ணே

அங்கு அந்த கோவிலை இடித்துபார்த்தார்களாம்

இடிக்க முடியவில்லையாமே

சிவம் அமுதசிவம் சொன்னது…

\\\\\கூடங்குளம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 21-5-1991 ல் பலியானார் \\\\\\

21-5.2012 இல் நல்லது நடக்க வாழ்த்துகள்!

தவறினால், கோர்பாட்ச்சோவைக் கவுத்த ஆகஸ்டிலாவது அரங்கேறட்டும். பிரார்த்திப்போம்.

கபிலன் சொன்னது…

இனியும் இதெல்லாம் தேவையில்லாத விஷயம்.
அப்பகுதி மக்களை போராட்டம் என்கிற பெயரில் இத்தனை நாட்களாக கஷ்டப்படுத்துனீங்க. அவங்களுக்கு என்ன செய்யப் போறீங்க. உங்கள் மக்கள் தலைவர் உதயகுமாருக்கு பிரச்சினை இல்லை. இப்பொழுது கிடைத்திருக்கும் பாப்புலாரிட்டியை வைத்து இன்னும் பல கோடிகல் வெளிநாட்டில் இருந்து எளிதாக வரும்.
சரி...
அப்பகுதி மக்களுக்கு எந்த மாதிரியான வசதிகளை இந்திய அரசாங்கம் செய்து தரும் ?
500 கோடி ரூபாய் எவ்வாறு செலவிடப்படும் ?
அப்பகுதி வாழ் மக்களுக்கு கூடங்குளம் தொடர்புடைய வியாபார மற்றும் வேலை வாய்ப்புக்களில் எவ்வாறு முன்னுரிமை கொடுக்கவேண்டும் ?
அப்பகுதி மக்களின் வியாபாரம் / படிப்பு தொடர்பான கடன்களுக்கான வட்டியை குறைக்க வேண்டும் அல்லது வட்டியே இருக்கக் கூடாது.
மாநில அரசு பொறியியல் கல்லூரி ஒன்றை அப்பகுதியில் உருவாக்கில், அப்பகுதி வாழ் மக்களின் பிள்ளைகளுக்கு கல்வியில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

வெளிநாட்டுக் காரன் காசு கொடுத்து, போட சொன்ன கோஷத்தை மட்டும் போடாதீங்க...அங்கிருக்கும் பொது மக்களுக்கு நல்லது செய்யும் விதமாக இதெல்லாம் கேளுங்க சார்...நியாயம்.

koodal kanna சொன்னது…

அன்பு கபிலன் அவர்களுக்கு.
உங்கள் ஊரில் உள்ள அணைத்து வீடுகள் நிலங்கள் எங்களுக்கு தாருங்கள்............... எங்கள் வீடுகள் நிலங்கள் அனைத்தையும் நங்கள் உங்களுக்கு தருகிறோம் .....என்ன சரியா !எங்களுக்கு கிடைக்கும் இளபீடுத்தொகையை நீங்கள் வாங்கி கொள்ளுங்கள் ...

koodal kanna சொன்னது…

பாரத்...பாரதி ....அவர்களுக்கு.
உங்கள் ஊரில் உள்ள அணைத்து வீடுகள் நிலங்கள் எங்களுக்கு தாருங்கள்............... எங்கள் வீடுகள் நிலங்கள் அனைத்தையும் நங்கள் உங்களுக்கு தருகிறோம் .....என்ன சரியா !எங்களுக்கு கிடைக்கும் இளபீடுத்தொகையை நீங்கள் வாங்கி கொள்ளுங்கள் ...

பெயரில்லா சொன்னது…

போராட்டம் இவர்களுக்கும் சேர்த்து தான் என்பது இந்த மூடர்களுக்கு இன்னும் புரியாமல் தான் இருக்கிறது...

கபிலன் சொன்னது…

உங்கள் தலைவர் உதயகுமாரைப் போலவே சிறந்த கேள்விகளை கேட்கிறீர்கள் கூடல் கண்ணா : ) இந்த மாதிரியான அறிவுப் பூர்வமான கேள்விகளுக்கு, பதிலும் அவரால் மட்டுமே தர முடியும் !

"ரெவெரி கூறியது...
போராட்டம் இவர்களுக்கும் சேர்த்து தான் என்பது இந்த மூடர்களுக்கு இன்னும் புரியாமல் தான் இருக்கிறது..."

போராட்டத்திற்கு காசு வருவது என்பது ஒரு விஷயம். போராட்டமே காசுக்காகத் தான் என்பது தான் எங்கள் கருத்து. மூடனாக இருப்பது தப்பு கிடையாது. திருடனாக இருப்பது தான் தப்பு. மூடனாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே !

nakeeran சொன்னது…

கூடன்குளம் வாழ் மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்றார்கள் அதில் உள்ள ஆபத்தை போக்க யாராலும் முடியுமா? மனித காரியம் தானே சின்ன கவன சிதைவும் பெரிய இடரை ஏற்படுத்தா தா என்ன? வெங்காயம் உடைக்கும் போதே கண்ணை கசக்கும் மனிதன் அணுவை பிளக்கும் பொது ஆபத்து இல்லை என்றால் புத்திசாலி யாரும் ஒத்து கொள்ள மாட்டார்கள் .ஒரு முனையில் இருக்கும் உங்களுக்கு ஒன்றும் இல்லை அணு உலையில் இருக்கும் எங்களுக்கு தான் இறுக்கம்.அணு உலையை ஆதரிக்கும் ஓநாய்களே ஓரமாய் நின்று ஊளை விட வேண்டாம் தைரியம் இருந்தால் வீரனாய் அதன் அருகே வீடு கட்டி வசித்து பார்.இயற்கை சக்தியை இதமாக பயன் படுத்த தெரியாத இந்தியன் அணு சக்தியால் வல்லரசாக போகிறானாம்.இயற்கை இலவசமாய் தரும் நீரை ,இயற்கை தரும் காற்றை சூரியன் தரும் வெப்பத்தை விரயம் செய் வார்கள்.உயிர் குடிக்கும் உலைகளுக்கு மட்டும் விலை கொடுப்பார்கள்.

போராட்டகாரர் களுக்கு பணம் எப்படி வந்தது என்று ஆராய்வார்கள்..... இந்தியாவில் உள்ள ஓராயிரம் கட்சிகள் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது என்று கேட்டால் இந்த அரசாங்கமோ அல்லது தேர்தல் ஆணையமோ அல்லது நீதி மன்றங்களோ என்ன சொல்ல போகிறது?

பெயரில்லா சொன்னது…

Kaaodal kanna koodal bala matrum aadharavu alikkum ella muttaalkalukkum.... Nee unnudaya nadar adayalaththai inge kaattaadhe unmayaana nadar theruvil ulla naai kooda unnaivida arivuppoorvamaaga yosikkum shame on u peoples

smart சொன்னது…

இருபது ஆண்டு காலத்தில் விபத்துக்களும் திடீர் நிகழ்வுகளும் இயற்கை. விஸ்வாமித்திரர் தயவால் பாதுகாப்பான அக்னி யாகம் குண்டம் அமைந்தது போல அணு ஆலை குண்டம் அமைய வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

aduthathu yaru jayalalithava

விஜய் சொன்னது…

//மூடனாக இருப்பது தப்பு கிடையாது. திருடனாக இருப்பது தான் தப்பு. மூடனாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே//

திருடனாக இருப்பது தப்பு. மூடனாக இருப்பது ஒட்டு மொத்த சமுதாயத்துக்கே ஆபத்து.