10 ஏப்ரல் 2012

கூடங்குளம் போராட்டம் : அன்றே கணித்த அய்யா வைகுண்டர்?

எதிர் காலத்தைக் கணிப்பதில் வல்லவர் யாரென்றால் சட்டென நினைவுக்கு வருபவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்த நோஸ்ராடாமஸ்.அவர் எதிர் காலம் பற்றி கூறிய தீர்க்க தரிசனங்கள் பல நடந்துள்ளன பல நடந்து கொண்டிருக்கின்றன.அவர் தீர்க்கதரிசனத்தில் உள்ள குறைபாடு என்ன வென்றால் அனைத்து நிகழ்வுகளுமே மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நிகழ்வு நடந்தபின்புதான் அதை உணர முடிகிறது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்.நோஸ்ராடாமஸ் போல இந்தியாவிலும் பல தீர்க்க தரிசிகள் வாழ்ந்துள்ளனர்.


அவர்களுள் முக்கியமானவர் தமிழகத்தின் தென்கோடியில் குமரி முனை அருகேயுள்ள சுவாமி தோப்பில் உதித்த அய்யா வைகுண்டர் ஆவார்.கி.பி.1809  வருடம் சாதாரண மானிடப் பிறப்பெடுத்த முடிசூடும் பெருமாள் என்கிற முத்துக்குட்டி பின்னர் வைகுண்டர் அவதாரமெடுத்து பல அற்புதங்களை நிகழ்த்தினார் .

அதோடு மட்டுமல்லாமல் அருள் நூல் மற்றும் அகிலத் திரட்டு ஆகிய நூல்களில் எதிர் காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை எழுதியுள்ளார்.அவற்றில் பல நடந்தும் நடந்துகொண்டுமிருக்கின்றன.

இப்போது தமிழகத்தின் மிகப்பெரும் போராட்டமாக நடந்துகொண்டிருப்பது கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கெதிரான போராட்டம்.இது பற்றியும் அய்யா தனது அருள் நூலில் கூறியிருப்பதாக அய்யா வழி நண்பர் ஒருவர் கூறினார்.நான் அதைப் பார்க்க விருப்பம் கொண்டிருந்தேன் .

இந்நிலையில் நேற்று எனது நண்பர் ஒருவர் மூலமாக அந்நூலின் குறிப்பிட்ட பக்கத்தின் நகல் எனக்குக் கிடைத்தது .அந்நூலின் 24  வது பக்கத்தில் இடம்பெற்றுள்ள வரிகள் கூடங்குளம் போராட்டம் பற்றி அய்யா கூறியிருப்பதாகத் தோன்றுகிறது .அவ்விரு வரிகள் 

அண்ணர்க்களந்தபாலை இடித்தக்கரை காவல்காரன் 
அவிழ்த்துப்  பார்க்கலாச்சே சிவனே அய்யா 

கூடங்குளம் அணு உலைக்கெதிரான தொடர் போராட்டங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இடிந்தகரையில் நடந்து வருவது குறிப்பிடத் தக்கது. 

இது போல இலங்கைத் தமிழர் மறு வாழ்வு குறித்தும் அய்யா குறிப்பிட்டுள்ளதாக அகிலத் திரட்டில் வரிகள் உள்ளன .

அவை 

ஸ்ரீலங்கா மரியாத்து சென்னில் விளையுதடா தீ மீளுக நலச்சு
என்னுடைய தம்பிமார்களே இலங்காபுரி ஆளுவாய் 

என்பதாகும் .

இதைப் படிக்கும்போது எதிர்காலத்தில் இலங்கை முழுவதுமே தமிழர்கள் ஆட்சி செய்யும் காலம் வரும் என்று கூறியுள்ளதைப் போல் தோன்றுகிறது.அவ்வாறு நடந்தால் அதைவிட வேறு மகிழ்ச்சியான செய்தி வேறு எதுவாக இருக்க முடியும் .நன்றி : ayyavazhi.org

22 கருத்துகள்:

Vairai Sathish சொன்னது…

ஆமா அண்ணே

எங்க அம்மா கூட அடிக்கடி சொல்வார்கள் அய்யா சொன்னதெல்லாம் இந்த உலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று

koodal kanna சொன்னது…

என் மாமா கூட அடிக்கடி சொல்வார்கள் அய்யா சொன்னதெல்லாம் இந்த உலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று...

விக்கியுலகம் சொன்னது…

நல்லது நடந்தா சர்தான் மாப்ளே!

பாரத்... பாரதி... சொன்னது…

//எதிர்காலத்தில் இலங்கை முழுவதுமே தமிழர்கள் ஆட்சி செய்யும் காலம் வரும்//

அந்நாள் இனிமையான நாளாக இலங்கை தமிழர்களுக்கு மட்டுமில்லாது, தமிழக மீனவர்களுக்கும் இருக்கும்..

பெயரில்லா சொன்னது…

எதிர்காலத்தில் இலங்கை முழுவதுமே தமிழர்கள் ஆட்சி செய்யும் காலம் வரும் என்று கூறியுள்ளதைப் போல் தோன்றுகிறது.அவ்வாறு நடந்தால் அதைவிட வேறு மகிழ்ச்சியான செய்தி வேறு எதுவாக இருக்க முடியும்..//

நிச்சயம் நடக்கும் பாலா...

பெயரில்லா சொன்னது…

போங்கடா மரமேறி பயலுவலா

ஹேமா சொன்னது…

நம்பிக்கைதான் !

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

அய்யா சொன்னது நடந்தால் அதைவிட உவகை வேறு எதுவும்
இல்லை!

புலவர் சா இராமாநுசம்

சென்னை பித்தன் சொன்னது…

இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.அவர் சொன்னது பலிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

shanmugavel சொன்னது…

நல்லது நடந்தால் சந்தோஷம்.இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

shanmugavel சொன்னது…

நல்லது நடந்தால் சந்தோஷம்.இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

ayya mulumayana puthagam kidaithal nalam , tharavirakam seithu padipom

Ashvinji சொன்னது…

செய்திக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த வரிகளுக்கான பொருள் விளக்கமும் தந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.

arun சொன்னது…

அய்யா வைகுண்டர் அவர்களை நாடார் சமுகம் மட்டும் அதிகமாக வணகுவது ஏன் ?

arun சொன்னது…

அய்யா வைகுண்டர் அவர்களை நாடார் சமுகம் மட்டும் அதிகமாக வணகுவது ஏன் ?

koodal bala சொன்னது…

@arun Plz Read http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

பெயரில்லா சொன்னது…

அண்ணர்க்களந்தபாலை இடித்தக்கரை காவல்காரன்
அவிழ்த்துப் பார்க்கலாச்சே சிவனே அய்யா
intha dialouge ku full meaning ennannu kadasivarai sollamaleye mazhuppitteengale bala

முதல் வகுப்பு குழந்தைகளுடன் மரம் வளர்ப்போம்! சொன்னது…

Very good.God bless you

முதல் வகுப்பு குழந்தைகளுடன் மரம் வளர்ப்போம்! சொன்னது…

Very good.God bless you

RENESH S சொன்னது…

அய்யா உண்டு.....

lithyarani m.kumar சொன்னது…


அய்யா துணை

*தர்மம் பெரிது தாங்கியிரு யென்மகனே – அய்யா வைகுண்டர்*

தர்மத்தை உணர்த்து குட்டி கதை மகாபாரதத்தில் இருந்து. 👇👇👇

என்னதான் தர்மம் செய்தாலும் எல்லேரும் கர்ணனை தான் புகழுகின்றனர் என் அண்னண் தர்மனை ஏன் புகழுவதில்லை என்றான் அர்ஜுனன் கண்ணனிடம்

தர்மத்தில் பெரியவன்
கர்ணனா இல்லை தர்மனா
என்று கண்ணனுக்கும் அர்ஜுன்க்கும் விவாதம் நடைபெற்றது

கண்னண் கர்ணன் தான் பெரியவன் என்றான் அர்ஜுனன் தன் அண்னண் தர்மன் தான் பெரியவன் என்றன்
இருவரையும் சோதித்து பார்த்து விடலாம்
என முடிவு செய்தனர்

இருவரும் அந்தனர் வேடமிட்டு சென்றனர் முதலில் தர்மனை பார்க்க
சென்றனர் அந்தனர்களை பார்த்ததும் தர்மன் ஓடி வந்து வரவேற்று உபசரிப்பு
செய்து என்ன வேண்டும் என்று கேட்டான்
அந்தணர் வேடமிட்ட கண்னண் சொன்னான் எங்கள் விட்டில் சமைப்பதற்க்கு வைத்து இருந்த விறகுகள் அணைத்தும் நனைந்து விட்டன
எங்களுக்கு விறகுகள் வேண்டும் என்றார்

அதற்க்கு தர்மன் இப்பொழுது மழைகாலம்
என்பதால் அணைத்து மரங்கலும் ஈரமாகவே இருக்கும் ஆதலால் உங்கள் வீட்டில் இருக்கும் அணைவருக்கும்
அரமணையில் இருந்து உணவு அனுப்பி
வைக்கிறேன் என்றான்

இருவரும் அங்கிருந்து கிளம்பி கர்ணனை
பார்க்க சென்றனர் கர்ணன் இவர்களை
வரவேற்று ஆசனத்தில் அமர்த்திய உடன்
கேட்டான் உங்களுக்கு என்ன வேண்டும்
என்று மாறுவேடத்தில் இருந்த அர்ஜுனன்
எழுந்து எங்கள் வீட்டில் சமைக்க விறகுகள் இல்லை எங்களுக்கு விறகுகள்
வேண்டும் என்றான்

உடனே கர்ணன் தன் அம்பை எடுத்து
தன் அரண்மனையின் நிலை கதவுகளின்
மீது எய்தி உடைத்தான் அதை எடுத்து
இதை கொண்டு செல்லுங்கள் உங்கள்
அடுப்பு எரியும் என்றான் இதை பார்த்து கொண்டிருந்த அர்ஜுனனை பார்த்து
கண்னண் சிரித்து கொண்டே சொன்னான்

தன்னிடம் இருப்பதை கொடுப்பது
தர்மம் அல்ல தன்னை நாடி வந்தவர்
என்ன கேட்கிறாறே அதை கொடுப்பதுதன்
தர்மம் என்றான் அர்ஜுனன் வெட்கி
தலை குனிந்தான்.

தர்மம் என்பது பிறருக்கு வாழங்குதல் மட்டும் இன்றி நம் கடமைகளை சரியாக செய்தால். அதுவே ஒரு சிறந்த தர்மமே.

எனவே அய்யாவின் அன்பு பிள்ளைகள் ஆகிய நாம் அனைவரும் அய்யா வாக்கின்படி *தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்*
என்று தர்மத்தை சரியாக செய்து தர்மயுக வாழ்வு பெறுவோம்.

🙏அய்யா 💧உண்டு🙏

lithyarani m.kumar சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.