13 ஏப்ரல் 2012

நந்தன ஆண்டு எப்படி இருக்கும்? -இடைக்காடர் சித்தர் வாக்கு

தமிழ் வருடங்கள் மொத்தம் 60  .இதில் 26  வது ஆண்டான நந்தன ஆண்டு இன்று துவங்குகிறது .

ஒவ்வொரு தமிழ் ஆண்டும் எப்படி விளங்கும் என்பதை பிரபல சித்தர் பெருமானாகிய இடைக்காடர் செய்யுள்களாக அருளியுள்ளார்.இந்த நந்தன ஆண்டு எப்படி இருக்கும் என்று அவர் கூறியுள்ளதைப் பார்ப்போம் .


"நந்தனத்தில் மாரியுறும் நாடெங்கும் பஞ்சமாகும்
நந்துமுயின் நோயா நலியுமே - அந்தரத்தின்
மீனுதிருந் தூமமெழு மிக்க கெடுதியுண்டாம்
கோன் மடிவானென்றே நீ கூறு"

இதன் பலன் : நந்தன ஆண்டில் குறைவான அளவு மழை பெய்யும். விளைச்சல் குறையும். பஞ்சம் அதிகரிக்கும். உயிரினங்களுக்கு நோய்கள் உண்டாகும். புதிய நோய்களால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும். விண்மீன்கள் உதிரும். சுற்றுசூழல் பாதித்து புகை மண்டலம் ஏற்படும். நன்மைகள் குறைந்து தீமைகள் அதிகரிக்கும். ஆட்சியாளர்கள், தலைவர்கள் கண்டத்தை சந்திக்க வேண்டி வரும்.

இடைக்காடர் அருளியுள்ளதைப் பார்க்கும்போது இந்த ஆண்டு சோதனைகள் நிறைந்ததாக இருக்கும் என்று கருதவேண்டியுள்ளது .நன்மைகள் நடக்க இறைவனைப் பிரார்த்திப்போம் .

8 கருத்துகள்:

Vairai Sathish சொன்னது…

இந்த ஆண்டும் சோதனையான ஆண்டா

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்


இன்றைய பதிவு50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்

Ramani சொன்னது…

இதற்கு மேலும் சோதனை என்றால்...
பயமாகத்தான் இருக்கிறது

தங்களுக்கும் தங்க்ள் குடும்பத்தாருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Ramani சொன்னது…

இதற்கு மேலும் சோதனை என்றால்...
பயமாகத்தான் இருக்கிறது

தங்களுக்கும் தங்க்ள் குடும்பத்தாருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Ramani சொன்னது…

Tha.ma 2

பெயரில்லா சொன்னது…

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

சோதனை மேல் சோதனைப் போதுமடா சாமி! தாங்காதிந்த பூமி! புலவர் சா இராமாநுசம்

arul சொன்னது…

nice

nakeeran சொன்னது…

எதயும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அறிஞர் அண்ணா சொன்னார் .சோதனைகள் நம்மை சுறுசுறுப்பாக வைக்கும்.கவலை படாமல் இருபதுதான் புத்திசாலிதனம்.சோதிடம் சொல்வதெல்லாம் நடந்தா போயிருகிறது?இனிப்ப எடுங்க கொண்டாடுங்க.