14 ஏப்ரல் 2012

மீனவர்களை நொடியில் காப்பாற்ற இதோ வருகிறது புதிய கருவி!

     சமீப காலமாக் சமூகத்தில் அதிக துன்பங்களை சந்தித்து வருபவர்கள் மீனவர்கள்தான் .படகோட்டி திரைப்படத்தில் வரும் தரைமேல் பிறக்க வைத்தான் பாடலில் கவிஞர் வாலி மீனவர்களின் துயரங்களை வார்த்தைகளில் வடித்திருப்பார் .

     சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்.இது மீனவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி . 

      நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் சிறிய வகை மீன்பிடி படகுகள் போன்றவற்றிற்கு, கடற்கொள்ளையராலோ, விரோத மனப்பான்மை கொண்ட பிற நாட்டு விஷமிகளாலோ, இயற்கைச் சீற்றங்களினாலோ அல்லது வேறேனும் விதத்தில் பேரிடர் ஏற்படுமானால், கரையிலிருந்து நொடிப்பொழுதில் உதவிக்கு அழைக்கும் விதத்தில் இயங்கக்கூடிய Distress Alert Transmitter (DAT) என்னும் மலிவு விலைக் கருவியை இந்திய கடலோரக் காவல் படையும் (Indian Coast Guard) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (ISRO) சேர்ந்து வடிவமைத்துள்ளனர்.  நான்கு பட்டன்களைக்கொண்டு ஒரு தொலைபேசி வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கருவியின் ஒவ்வொரு பட்டனும் ஒவ்வொரு வகை நெருக்கடியை அறிவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
          
       
        இதை உபயோகிப்பது எப்படியென்றால், மீனவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடருக்காக ஒதுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட பட்டனை அழுத்தவேண்டும்.  அந்தக் கருவி மூலமாகக் கிடைக்கும் இருப்பிட எல்கைகளை அறிந்து அவர்களுக்கு உதவ படைகள் விரைந்து வரும். 
         
           'டாட்' என்னும் இந்தக் கருவி பாட்டரி மூலமாக இயங்கக்கூடியது.
          
         இந்தக் கருவி இப்போது சோதனை ஓட்டத்திற்காக அந்தமான், நிக்கோபார் தீவுகளின் சில பகுதிகளில் விடப்பட்டுள்ளது.  சோதனை வெற்றி பெற்று வெளிச்சந்தைக்கு வந்த பின்னர் அதன் விலையில் அரசு மானியம் அறிவிக்கலாம். 
          
        இந்தியக் கடலோர எல்லைகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்கள் படகுகளில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளைக்கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தைப் பயிற்றுவித்தால், எல்லைகள் பயமற்றதாகவும், பாதுகாப்பாகவும் இருக்க உதவும் சூழ்நிலைகள் உருவாகும் என்று கடலோரக் காவற்படையைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்ததாக அந்தச் செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.        
 
Thanks : DNA

14 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இந்தியக் கடலோர எல்லைகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்கள் படகுகளில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளைக்கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தைப் பயிற்றுவித்தால், எல்லைகள் பயமற்றதாகவும், பாதுகாப்பாகவும் இருக்க உதவும் சூழ்நிலைகள் உருவாக முயற்சிக்கவேண்டியது மிக அவசியம்..

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

மீனவ பாதுகாப்புச் சாதனம் அவசியம் தேவை! தகவலுக்கு நன்றி! சா இராமாநுசம்

மனசாட்சி™ சொன்னது…

அட....வெரி நைஸ்

இது வந்தாவது.....எம் மக்களை பாதுகாத்தால் சர்தான்.

மாசிலா சொன்னது…

நல்ல கண்டுபிடிப்பு. வயிற்று பிழைப்பிற்கு கடலில் போராடும் ஏழை மீனவர்கள் சில மனித மிருகங்களால் தாக்கப்படுவதை இனியாவது தடுத்து நறுத்த இக்கருவி பயனாக இருக்கும் என நம்புவோம்.
பகிர்வுக்கு நன்றி.

Prabu Krishna சொன்னது…

நல்ல கண்டுபிடிப்பு. நல்ல தகவல் அண்ணா.

மகேந்திரன் சொன்னது…

நல்ல முயற்சி..
மீனவர்களுக்கான பாதுகாப்பு
அவசியத்தை பூர்த்தி செய்யும்
கருவியாக இது அமையும் என்பதில்
சந்தேகமில்லை...
துரித நடவடிக்கை வேண்டும்...

ஹேமா சொன்னது…

நல்லதே நடக்கட்டும் பாலா.பேய் பிசாசுகளிடமிருந்து தப்பியோடுவதே தமிழனின் பிழைப்பாச்சு !

துரைடேனியல் சொன்னது…

அருமையான கருவிதான். விஞ்ஞானம் பிழைக்க வைக்க வேண்டும். அதற்கு இது ஒரு உதாரணம்.வளர்க அறிவியல்.

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

அருமையான கண்டுபிடிப்பு .. மீனவர்களுக்கு பயன்படும் .. தகவலுக்கு நன்றி நண்பா

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று

உங்களுக்கு குழந்தைகளை பிடிக்குமா ? அப்ப இது உங்களுக்கு தான்

பெயரில்லா சொன்னது…

பெட்ரோல் டீசல் கடத்துறதுக்கு இது உதவுமா...? ஹி ஹி

Vairai Sathish சொன்னது…

நல்ல பகிர்வு அண்ணே


இன்றைய பதிவு

அண்ணே இதை வந்து பாருங்க இது உங்களுக்கு பயன்படும்
அனாமதேயருக்கு ஒரு படம் வைக்கலாம் வாங்க
மூன்று Gadjet-களை ஒரே Gadjet-ல் வைக்கலாம்

பெயரில்லா சொன்னது…

நல்ல கண்டுபிடிப்பு... பகிர்வுக்கு நன்றி நண்பா...

சென்னை பித்தன் சொன்னது…

நல்ல செய்தி நன்றி பாலா.