19 ஏப்ரல் 2012

மத்திய அரசுக்கு தண்ணி காட்டிய பத்து வயது பள்ளி மாணவி!

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த 5 ம் வகுப்பு பயிலும்  ஒரு பத்து வயது பள்ளி மாணவியான  ஐஸ்வர்யா பராஷர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் திணறியுள்ளது   மத்திய அரசு.ஆம் ,அவர் கேட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. .

பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த பின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என்று கேட்டுள்ளார் . அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தார். அவர்களுக்கும் பதில் தெரியவில்லை. கூகிள் இணையத்தில் கூட த்திப் பார்த்து உள்ளார். யாருக்கும் பதில் தெரியாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் அலுவலகத்திடம் இதே கேள்வியை கேட்டுள்ளார் .


இந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தால் தகுந்த பதில் தர முடியாததால், அந்த கேள்வியை தேசிய தகவல பதிவகத்திற்கு அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம். தகவல் பதிவகம் தங்களிடம் இது தொடர்பான வரலாற்று பதிவுகளை ஐஸ்வர்யாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர் . மேலும் இந்த பதிவுகளைக் கொண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொள்ளுமாறு பரிந்துரை செய்தது தேசிய தகவல் பதிவகம்.

ஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர் அலுவகத்திற்கு சென்று, அங்கிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு சென்று பின் அங்கிருந்து தேசிய தகவல் பதிவகத்திற்கு சென்று கடைசியில் யாரும் பதில் அளிக்க வில்லை என்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. இச்சம்பவம் நடந்தது கடந்த மார்ச் மாதம் .


இப்படி கேள்வி கேட்ட அந்த குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள். இப்படி பல கேள்விகளை இளைய தலைமுறை இப்போது கேட்க தொடக்கி விட்டார்கள். இதனால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அதனால் இந்த நாட்டில் நீதி நிலைநாட்டப்படும் காலமும் வரும் எனத் தெரிகிறது.


இந்திய  வரலாற்றை  புரட்டிப் பார்க்கும்போது     1944  ம் ஆண்டு  ஜூலை மாதம்      6  ம் தேதி சிங்கப்பூர் வானொலி நிலையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய உரையில் காந்தியடிகளை முதன்முதலில் தேசத் தந்தை எனக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.

18 கருத்துகள்:

கோவை நேரம் சொன்னது…

இக்கால குழந்தைகள் அறிவாளிகள் ..

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

காங்கிறேசிடம் ஊழல் பற்றி மட்டும் தான் கேட்க வேண்டும்

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று
கதம்பம் 19-04-2012

Vairai Sathish சொன்னது…

நாராயண சாமிதான் நல்லா பதில் சொல்வார்.

அண்ணே நாராயனசாமியிடம் கேட்டாங்களா

HOTLINKSIN.COM சொன்னது…

சபாஷ்... சரியான கேள்வி...

இப்போது http://tamil.hotlinksin.com/ இணையதளத்தில் தமிழ் செய்திகளை இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.
அதே போல ஆங்கிலத்தில் செய்திகளை http://www.hotlinksin.com இணையதளத்திலும் இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெற்றிடுங்கள்.

பொன்மலர் சொன்னது…

Nice Girl

Ramani சொன்னது…

அறியாத அனைவரும்
அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய தகவல்
பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

Ramani சொன்னது…

Tha.ma 1

பெயரில்லா சொன்னது…

Vairai Sathish சொன்னது…
நாராயண சாமிதான் நல்லா பதில் சொல்வார்.

அண்ணே நாராயனசாமியிடம் கேட்டாங்களா//

Amen..

AROUNA SELVAME சொன்னது…

அருமையான தகவல்.
நன்றிங்க கூடல் பாலா.

ஹேமா சொன்னது…

முக்கியமாக எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்.
நன்றி பாலா !

மகேந்திரன் சொன்னது…

சுடரொளி வீசும் இளைய தலைமுறை...

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

வாழ்க அச்சிறுமி! புலவர் சா இராமாநுசம்

சென்னை பித்தன் சொன்னது…

விழிப்புள்ள இளைய சமுதாயம்!

arul சொன்னது…

arumayana pathivu bala

PUTHIYATHENRAL சொன்னது…

இந்திய அரசிடம் எந்த நல்ல கேள்விகளுக்குத்தான் பதில் இருக்கிறது... இப்படி ஒரு சாதாரண கேள்வியை கேட்டதால் அவர்கள் ஏதோ பதில் சொல்ல திணறி பதில் சொல்லி விட்டார்கள்....

ஏன் ஈழத்திற்கு அமைதி படை நடத்தி அங்கே போயி அமைதியாக இருக்காமல் அராஜகம் செய்தீர்கள், தமிழ் பெண்களை மான பங்க படுத்தினீர்கள் என்று கேட்டு பாருங்களேன்...

இல்லை இறுதி உத்தத்தில் போராளிகளை தப்பிக்க விடாமல் அல்லது அவர்களுக்கு வெளியே இருந்து உதவிகள் போகாமல் ஏன் இந்தியா கடல் பகுதிகளில் வேவு பார்த்து இலங்கைக்கு விசுவாசமாக இருந்தீர்கள் என்று கேட்டு பாருங்களேன்....

ஏன் சத்தீஸ்கர் பழங்குடி மக்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுகிரீர்கள் என்று கேட்டு பாருங்களே அப்போது தெரியும்... எல்லா பயங்கரவாத சட்டங்களும் உங்கள் மீது பாயும்..... டாக்டர் பினாய்க் சென்னுக்கு நடந்த கெதிதான் உங்களுக்கும்.....

பெயரில்லா சொன்னது…

​புத்திசாலிப் ​பெண்தான்

வாழ்த்துகள்

நாகு
www.tngovernmentjobs.in

chicha.in சொன்னது…

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in