30 ஏப்ரல் 2012

இப்படி செய்வதற்கு பதில் பிச்சையெடுத்து பிழைக்கலாம் ஏர் டெல்.

செல் போன்  நிறுவனங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளன.இதற்கு எந்த நிறுவனமும் விதிவிலக்கல்ல .கொஞ்சமும் பாரபட்சமில்லாமல் மேலதிக சேவைகளை வழங்குகிறோம் என்று சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றன இந்நிறுவனங்கள்.இதனால் அதிகம் பாதிக்கப் படுவது பாமர மக்கள்தான் .


 குறிப்பிட்ட மொபைல் நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும் ,அழைப்பை ஏற்றால் ஏதாவது சேவைகள் பற்றிய விபரங்கள் வரும் இதை உடனே ஆக்டிவேட் செய்ய இதை அழுத்துங்கள் என்ற செய்தி வரும் .அடுத்து என்ன நடக்கும் என அறியாமல் குறிப்பிட்ட பட்டனை அழுத்திவிடுவார்கள்.அடுத்த நிமிடமே அவர்கள் கணக்கிலிருந்த காசு முழுவதும் காலியாகியிருக்கும்.இப்படி எத்தனையோ ஏமாற்று வேலைகளை தட்டிக்கேட்க ஆளின்றி மொபைல் நிறுவனங்கள் செய்து வருகின்றன.

இது நேற்று எனக்கு ஏற்பட்ட அனுபவம் .நான் ஏர் டெல் மொபைல் சேவையை பயன்படுத்தி வருகிறேன்.ஏர் டெல்லிரிருந்து ஒரு அழைப்பு வந்தது,அழைப்பை எடுத்தேன் அதில் பேசிய குரல் யூத் சம்மந்தமான தகவல்களைப் பெற ஸ்டார் பட்டனை அழுத்தவும் என்றது .நான் யூத்துதான் ஆனாலும் அச்சேவையை நான் விரும்பவில்லை .எக்சிட் பட்டனை அழுத்தி அழைப்பைத் துண்டித்தேன் .

ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் அந்த அதிர்ச்சியான குறுந்தகவல் வந்தது.அதில் உங்கள் வேண்டுகோளை ஏற்று யூத் சேவை உங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது இதற்காக தினமும் உங்கள் கணக்கிலிருந்து ரூபாய் 1.50 பிடித்தம் செய்யப் படும் என்று கூறப்பட்டிருந்தது.

உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள 121 க்கு டயல் செய்தேன் .அப்போது தானியங்கி குரல் மேலதிக சேவைகளைப் பெற அல்லது நிறுத்த 12116 ஐ டயல் செய்யவும் கூறியது .நானும் நிம்மதி பெருமூச்சோடு மேற்படி எண்ணை அழைத்தேன் அப்போது பேசிய தானியங்கி இச்சேவை தற்போது சோதனை முறையிலிருப்பதால் இது வேலை செய்யாது என்று கூறியது.

இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை என்று நினைத்துக்கொண்டு மீண்டும் 121  ஐ டயல் செய்து வாடிக்கையாளர் சேவை அதிகாரியை தொடர்பு கொள்ள முயற்சித்தேன் அப்போது பேசிய தானியங்கி வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் உங்கள் அழைப்பு கொடுக்கப்படும் இதற்கு கட்டணமாக மூன்று நிமிடங்களுக்கு 50  பைசா வசூலிக்கப்படும் (இதுதான் சேவையோ) என்று கூறியது .

நானும் அதைப் பற்றி பரவாயில்லை நமக்கு திணிக்கப்பட்ட இந்த சேவையை நிறுத்த சொல்லிவிடலாம் மேலும் இரண்டு டோஸ் விடலாம் என்று எண்ணினேன் .தொடர்ந்து பேசிய தானியங்கி எங்கள் சேவை பற்றிய தரம் அறிய உங்கள் வாய்ஸ் ரெக்கார்ட் செய்யப்படலாம் (சேவையின் தரம் அறியவா அல்லது காதில் வரும் கெட்டவார்த்தைகளின் பொருள் அறியவா?)இணைப்பு கிடைக்கும் வரை காத்திருக்கவும் என்று கூறியது .

 என்ன ஒரு ஆச்சரியம் அடுத்த ஐந்து வினாடிகளில் தொடர்பு துண்டிக்கப் பட்டுவிட்டது .பல முறை முயற்சித்தும் மீண்டும் மீண்டும் தொடர்பு துண்டிக்கப் பட்டது .எப்படியோ எனக்கு பல்பு கிடைத்தது உறுதியாகிவிட்டது .
அவ்வ்வ்வவ் ....

அட நாதாரிப் பயல்களா இந்த பிழைப்பு பிழைப்பதற்குப் பதில் பிச்சையெடுத்து பிழைக்கலாமே!

13 கருத்துகள்:

உலக சினிமா ரசிகன் சொன்னது…

நண்பரே...
போனில் யாராவது பேசினால் கூட..
அந்த நபர் கால் செண்டர் ஆசாமியாகத்தான் இருக்கும்.
அவர்களிடம் உங்கள் குறையை சொல்வதற்க்கு பதில் அரச மரத்தடி பிள்ளையாரிடம் முறையிடவும்.

Ramani சொன்னது…

நானும் ரிலையன்ஸ்போனில் இதைப் போன்ற அவஸ்தைகளைப்
பட்டுக் கொண்டுதான் உள்ளேன்
ஒவ்வொரு முறை பேசிச் ச்ரி செய்தபோதும்
அடுத்து ஏதாவது ஒன்றை இணைத்து பணம் பிடித்துவிடுகிறார்கள்
இப்போதெல்லாம் நான் அம்பானி குடும்பத்துக்கு பிச்சை போட்டதாய்
நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்கிறேன்
வேறு வழி ?

Ramani சொன்னது…

Tha.ma 1

Prabu Krishna சொன்னது…

இப்போதெல்லாம் பிச்சைக்காரர்கள் செல்போன் கம்பெனி வச்சு நடத்தறாங்க அண்ணா.

வரலாற்று சுவடுகள் சொன்னது…

கடந்த முறை தாய் மண்ணிற்கு விஜயம் செய்த போது சந்தித்த பெறும் பிரச்சனை.

எந்த நாட்டிலும் இல்லாத ஒன்று இந்தியாவில் நடந்தேறிக் கொண்டிருக்கிறது கேட்க ஆளின்றி..!

இவர்களை பிச்சைகாரர்களுடன் ஒப்பிடாதீர்கள் நண்பரே, காரணம் பிச்சைகாரர் நம்மிடம் கேட்டு தானே வாங்குகிறார்.

இவர்களை பிக்பாக்கெட் திருடர்களுடன் தான் ஒப்பிடவேண்டும், அவன் தான் நம்மளை அறியாமல் நம் உடமைகளை திருடுவான் ..! அயோக்கியபயலுக ..!

மனசாட்சி™ சொன்னது…

நாதாரிங்க. தலைப்பும் சரிதான்...... நமக்கு ஏகப்பட்ட அனுபவம் உண்டு

பெயரில்லா சொன்னது…

இப்படி செய்வதற்கு பதில் பிச்சையெடுத்து பிழைக்கலாம் ஏர் டெல்...//

Amen...

Ferozkhan சொன்னது…

Dear bala, here is the link which is clearly showing how to active and deactive by our friend sasikumar blog. remember we have to get the password every time. (not permanent)

http://www.vandhemadharam.com/2012/02/airtel-prepaid.html

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இது போன்ற நேரத்தில் 121 க்கு பதில் 198 க்கு அழைக்கவும் , இது இலவச சேவை , அனைத்து மொபைல் நிறுவனத்திற்கும் இது பொருந்தும்

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இதையும் பாருங்க

அஜித் : தல போல வருமா ?

koodal bala சொன்னது…

@Ferozkhan Thanks a lot...Now unsubscribed.

அரைகிறுக்கன் சொன்னது…

எந்த ஒரு நிறுவன தொடர்பிலும் நமது குறைகளை அல்லது பிரச்சனைகளை தெரிவிக்க க்கு இலவசமாக தொடர்புகொள்ள முடியுமே.

198 ல் உங்களது குறைகளை தெரிவிக்கவும்.

மேலும் START 0 என 1909 க்கு இலவசமாக செய்தி அனுப்பி டூ நாட் டிஸ்டர்ப் இல் பதிவு செய்யவும்.

நீங்கள் இவ்வாறு பதிவு போடுவதை விடவும் இவை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

koodal bala சொன்னது…

@அரைகிறுக்கன் 198 க்கும் அழைத்தேன் அதுவும் பலன் தரவில்லை . இறுதியாக ஆன்லைன் மூலமாக சரி செய்தேன் ...do not disturb இப்போதுதான் கேள்விப் படுகிறேன் ...தகவலுக்கு நன்றி!