01 மே 2012

தமிழ் நாடு : மின்வெட்டை ஊதித் தள்ளிய காற்றாலைகள்!

தமிழகத்தில் திடீர் தீபாவளி ! .

பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்களுக்கும் இன்ப அதிர்ச்சி !


காரணம் இதுதான் .கடந்த சில மாதங்களாக 10  மணி நேரம் மக்களை வாட்டி வதைத்த மின்வெட்டு பல்வேறு இடங்களில் திடீரென காணாமல் போய்விட்டது.

மின் வெட்டை சரி செய்ய மத்திய மின் தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் தமிழகத்திற்கு வேண்டுமென்று தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் மேல் கடிதம் அனுப்பிக்கொண்டிருந்தார்.மேலும் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கை நலத்தை உணராதவர்களுடன் இணைந்து கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனடியாக செயல் படுத்த வேண்டுமெனவும் அதில் உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தையும் தமிழகத்திற்கே வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு அடியோடு நிறுத்தப் பட்டுள்ளதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.இதற்கு காரணம் தமிழகத்தில் நிறுவப் பட்டுள்ள காற்றாலைகள்தான்.

நேற்று முன் தினம் ஒரே நாளில் மட்டு காற்றாலைகள் மூலமாக அதிகப்படியாக 1600  மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது.இது மென்மேலும் அதிகரித்து வருகிறது.

இதில் ஒரு வருந்துதற்குரிய விஷயம் என்னவென்றால் காற்றாலைகள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை முறையாக  விநியோகிப்பதற்குரிய கட்டமைப்பு வசதிகள் மாநிலத்தில் சரியாக இல்லாததால் பெருமளவு மின்சாரம் வீணாகி வருகிறது.

இது குறித்து இந்திய காற்றாலைகள் மின் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறியுள்ளதாவது ...இப்போது உள்ள சூழ்நிலையில் மின்வெட்டை சமாளிப்பதற்கு காற்றாலை மின் உற்பத்திதான் சாத்தியமான ஒன்று.வாரத்தில் இரண்டு நாட்கள் காற்றாலைகள் இயங்காமல் இருக்க விடுமுறை விட சொல்கிறார்கள் .வாரம் முழுவதும் காற்றாலைகளை இயங்க விட்டால் தமிழகம் முழுவதும் மின் வெட்டை முற்றிலும் சரி செய்துவிடலாம் என்று கூறியுள்ளார் .

சூழலுக்கு பாதிப்பில்லாத காற்றாலை மின்சாரத்தை மேலும் ஊக்குவித்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் தமிழகத்திற்கு தினமும் தீபாவளிதான்!

12 கருத்துகள்:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.

வவ்வால் சொன்னது…

பாலா,

காற்றாலைகள் பயன் மிக்கவை ஆனால் காற்றடி பருவம் இல்லாத நாட்களில் சிரமம் அதன் விளைவே சமீப கால அதிக மின்வெட்டு, கடந்த மாதம் எல்லாம் மொத்த காற்றாலை மின் உற்பத்தி 0-150 மெ.வா என்றளவிலே இருந்தது.

டிசம்பர் இறுதியில் இருந்து மே வரைக்கும் காற்றாலை மின்சாரம் கிடைக்காது.

மின்வெட்டு குறையும் என கடந்த வாரமே நான் பதிவிட்டேன், அதில் இதெல்லாம் விரிவாக சொல்லி இருக்கேன் பார்க்கவும்,

இன்னும் சில நாட்களீல் படிப்படியாக மின் வெட்டுக்குறைய வாய்ப்புள்ளது எப்படி என நான் ஒரு பதிவிட்டுள்ளேன் ,முடிந்தால் பார்க்கவும்.

மின்வெட்டுக்குறையும்

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

தகவலுக்கு நன்றி......

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சூழலுக்கு பாதிப்பில்லாத காற்றாலை மின்சாரத்தை மேலும் ஊக்குவித்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் தமிழகத்திற்கு தினமும் தீபாவளிதான்!

மகிழ்ச்சியான நம்பிக்கை அளிக்கும் தகவலுக்குப் பாராட்டுக்கள்..

மனசாட்சி™ சொன்னது…

அட.... தகவல் பகிர்வுக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

காற்றாலையில் மின்சாரம் கிடைக்காத நாட்களில் கூடல் பாலா அண்ணாச்சி பொறம்போக்கு உதயகுமார் கூட சேர்ந்து வாயாயலயே ஊதி காத்தாடியை ஓட வைப்பாங்களாம்.

வரலாற்று சுவடுகள் சொன்னது…

காற்றாலை மின் உற்பத்தி, தமிழகத்தில் இத்தனை அபார வளர்ச்சி பெற்றது ஜெ-யினால்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது ..!

எது எப்படியோ தமிழக மக்களுக்கு விடிவுகாலம் வந்தால் சரி ..!

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

இனிக்கும் தகவல்!நன்றி! சா இராமாநுசம்

மாசிலா சொன்னது…

நல்ல செய்தி.

இன்று பிரான்சில் பொருளாதார நாளேடு ஒன்றில் இந்தியாவில் சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்பு முறை வேகமாக முன்னேறி வருவதாக படித்தேன். இதில் குஜராத் மாநிலம் முன்னோடியாக திகழ்கிறதாம்.

அனைத்தும் நல்லதிற்கே.

பகிர்வுக்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

நம்பிக்கை அளிக்கும் தகவலுக்கு நன்றி...

விமலன் சொன்னது…

வயிற்றில் அல்ல மக்களின் மனதில்பாலை வார்த்த தகவல்,நன்றி வணக்கம்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

ஸலாம் சகோ.பாலா,
நல்ல விஷயம்.
ஆனால், இதனை அதிமுக தம பிரச்சாரத்தில் அதிக அளவில் ப்ரோபகேண்டா பண்ணாததுதான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது..! :-))