16 மே 2012

கூடங்குளத்துல விபத்து நடந்தா அவ்ளோதானா?

கூடங்குளம் அணு மின் நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசும் மாநில அரசும் அறிவித்துள்ளன. இச்செய்தி தமிழகத்தில் மின்வெட்டால் அவதியுறும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதே வேளையில் அணுமின் நிலையம் அமைந்துள்ள சுற்று வட்டாரப் பகுதி மக்களிடையே கிலியை அதிகரித்து வருகிறது.


மத்திய அரசும் மாநில அரசும் தத்தம் சார்பாக நிபுணர் குழுக்கள் அமைத்து கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று அறிக்கையளித்துள்ளனர்.ஆனாலும் கூடங்குளத்தில் விபத்தே நிகழாது என்பதை உறுதிப் படுத்த அரசால் முடியவில்லை .

இதற்கு  சான்றாக அணு உலை விபத்து இழப்பீட்டு மசோதா மற்றும் கூடங்குளம் அணு மின் நிலைய அவசர நிலை வழிகாட்டி ஆகியவை விளங்குகின்றன.
 
இதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பாக வழகப்பட்டுள்ள கதிரியக்க அவசரநிலை வழிகாட்டி 

அணு உலையில் விபத்து நிகழ வாய்ப்பே இல்லை என்னும் பட்சத்தில் அணு உலை இழப்பீட்டு மசோதா தேவையில்லை.அணு உலையில் விபத்து நிகழ வாய்ப்பே இல்லை என்னும் பட்சத்தில் கதிரியக்க அவசர நிலை வழிகாட்டி என்பது தேவையில்லை .

இதன்மூலம் அரசுகளின் நிபுணர் குழு அறிக்கைகள் ஏமாற்று வேலை என்பது விளங்கும்.சரி ஏமாற்றிவிட்டு போகட்டும் என விட்டுவிடுவோம்.இப்போது விஷயத்திற்கு வருவோம் .

கூடங்குளம் அணு மின் நிலையம் சார்பாக மக்களுக்கு அவசர நிலை வழிகாட்டி கையேடு வழங்கப் பட்டுள்ளது (சில குறிப்பிட்ட நபர்களுக்கே அதுவும் வழங்கப்பட்டுள்ளது) .இப்புத்தகத்திலுள்ள வழி காட்டுதல்களைப் பார்க்கும்போது கூடங்குளம் பேரிடர் மேலாண்மை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது விளங்கும் .

அவசரகாலத்தில் ஒரு துணி அல்லது கைக்குட்டை அல்லது டவலினால் மூக்கையும் வாயையும் பொத்திக்கொள்ளவேண்டும் எனக் கூறியுள்ளார்கள் .பெரியவர்கள் வேண்டுமானால் இதைக் கடை பிடித்துவிடலாம் குழந்தைகள் என்ன செய்வார்கள்?

வாயையும் மூக்கையும் மூடிய நிலையில் அருகிலுள்ள கட்டிடத்திற்குள்லோ வீட்டினுள்ளோ செல்லவேண்டும் எனக் கூறியுள்ளார்கள் அப்படியானால் காடுகளில் நின்று விவசாயம் செய்பவர்களும் கடலில் மீன் பிடிப்பவர்களும் எங்கே போவார்கள் மேலும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது  அவர்களுக்கு எப்படி தெரிவிக்கப்படும் ?

வீடு மற்றும் ஜன்னல் கதவுகளை மூடிவிடவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள் அப்படியானால் கிராமங்களில் ஜன்னல்களுக்கு கதவில்லாதவர்களும் ஓலைக்குடிசைகளில் வாழும் மக்களும் என்ன செய்வார்கள்? 

TV மற்றும் ரேடியோவை ஆன் செய்து அதில் கூறப்படும் வழிகாட்டுதல்களின் படி நடந்துகொள்ளவேண்டுமாம் அப்படியானால் டிவி ,ரேடியோ இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் .மேலும் டிவியில் எந்த சேனலில் இது தெரிவிக்கப் படும் என்றோ ரேடியோவில் எந்த அலை வரிசையில் இது ஒளிபரப்பப்படும் என்றோ குறிப்பிடப் படவில்லை .

வீட்டைவிட்டு அல்லது தங்கியிருக்கும் இடத்தை விட்டு மாவட்ட அதிகாரிகள் வெளியேறச் சொன்னால்  மட்டுமே வெளியேறவேண்டும் எனக் கூறியுள்ளார்கள் .இதுதான் மக்களிடையே பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

சமீபத்தில் ஜப்பானில் அணு உலை விபத்து நிகழ்ந்ததும் அணு உலையை சுற்றி 30  கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்திற்குள் வசித்த சுமார் 1  லட்சம்  மக்கள் 24  மணி நேரத்திற்குள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு மாற்று இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளார்கள் .

கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து 30  கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் சுமார் 10  லட்சம்பேர் வசிக்கிறார்கள் .இவர்களை அரசு எப்படி பாதுகாப்பாக வெளியேற்றி பாதுகாக்கும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

இவர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டுமானால் 20000  பேருந்துகள் தேவைப்படும் அதற்குரிய ஓட்டுனர்களும் தயாராக இருக்கவேண்டும் .தங்க வைக்க குறைந்தது 2000  திருமணமண்டபங்கள் இருக்கவேண்டும் .தினமும் இவர்கள் உணவுக்கு நாள் ஒன்றுக்கு 6  லட்சம் கிலோ அரிசி மற்று காய்கறிகள் தேவைப்படும் .

இவை அனைத்தும் சாத்தியமா என்றால் நிச்சயமாக இல்லை .

இதன் காரணமாகத்தான் கூடங்குளம் பகுதி மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சியே வழங்கப் படவில்லை .

பயிற்சிகூட வழங்க இயலாதவர்கள் பேரிடரை எப்படி சமாளிப்பார்கள்.

அடுத்ததாக இரண்டாவது விஷயமான விபத்து இழப்பீடு.அணு உலை விபத்து இழப்பீடு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டபின்பும் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் விபத்து நிகழ்ந்தால் அதற்கு நாங்கள் இழப்பீடு வழங்க முடியாது என ரஷ்யா ஏற்கெனவே அறிவித்துவிட்டது .மத்திய அரசோ அல்லது மாநில அரசோ இழப்பீடு வழங்குவோம் என்றும் இதுவரை கூறவில்லை .

இதனைப் பார்க்கும்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து நிகழ்ந்தால் அதன் பாதிப்பு போபால் விஷ வாயு கசிவினால் ஏற்பட்ட பாதிப்பைவிட பல ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

7 கருத்துகள்:

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

என்ன சொல்றதுன்னு தெரியல ,....

பெயரில்லா சொன்னது…

Mock evacuation drill...இல்லாமல் எந்த அணு மின் நிலையமும் தொடங்கிய சரித்திரமே இல்லை...

இங்கு தான் முதல் முறை...

தமிழன் இளிச்சவாயன் தானே எப்போதும்...இப்போது சோதனைக்குழாயில் எலியும் கூட...

நிரூபன் சொன்னது…

வணக்கம் நண்பா,
நலமா?

தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தானே தெரியும் என்று கூறுவார்கள்..
அதனை இந்த அரசு உணரும் நாள் என்று வருமோ?

ஹேமா சொன்னது…

ஏன் இப்பிடியெல்லாம்.அவங்களைப் போல எல்லாரும் மனுஷர்ன்னு ஏன் நினைக்கிறாங்க இல்ல !

பெயரில்லா சொன்னது…

இதற்குதான் திருவள்ளுவர் அன்றே சொன்னார் இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் ..என்று.
அதையே இன்று உதயகுமார் போன்ற தியாகிகள் சொல்லும் பொது யாரும் கேட்பதில்லை. ஆனால் காலம் இப்படியே போக்காது. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழியவேன்று சொல்லிக் கொடுத்த கல்லூரியை விட்டு யாம் என்றும் விடுதலை பெற மாட்டோம்...இது சத்தியம்...உதயகுமார் வாழ்க...ஆனால் ...சரி வாழ்க..

பெயரில்லா சொன்னது…

அனுஉலை நாட்டுவளர்ச்சிக்கு அவசியம்ன்னு சொல்றவங்கள நிக்கவச்சு கேக்கனும்.

பெயரில்லா சொன்னது…

0.7% அணு ஆற்றல் உள்ள U-235 ஐ ஒரு கிரிமினல் (பாவம்-Sin -threat) என்று கொண்டால், பூமிக்கு அடியில் எங்கோ ஒவ்வொன்றாய் புதைந்து கிடந்த அவர்களை ஒன்றுசேர்த்து நார்மலான U-238 களையும் கிரிமினல்களாக ஆக்கி ஒன்றாக சேர்த்து, சிறையில் அடைத்து வேலை செய்ய வைத்து அதன் பயனை கொண்டு மனித சமூகத்தை வாழ வைக்கும் முயற்சி(?) அணு உலை.

மனிதர்களை சுதந்திரமாக பயமின்றி இன்புற்று வாழ அறிவியல் வழி செய்யட்டும். அதற்கான வாய்ப்பை நமக்கும் நம் சந்ததிக்கும் சேர்த்து வைப்போம் - மானுடம் இயற்கயினூடே வாழ்ந்து அதன் சீற்றங்களை பயன்படுத்தி என்றும் நிலைத்திருப்பதற்காக வேண்டுவோம்.
("நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்.......அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே")