27 ஆகஸ்ட் 2012

ஏமாற்றம் தந்த சென்னை பதிவர் சந்திப்பு !

சென்னை பதிவர் சந்திப்பு செவ்வனே நடந்து முடிந்து அனைவரும் அதை உற்சாகமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கையில் எனக்கோ மிகுந்த ஏமாற்றமளிக்கும்  விதத்தில் அமைந்துவிட்டது.


பின்னே என்னங்க பதிவர் சந்திப்பில் கலந்துகிடுறதுக்காக 750 கிலோ மீட்டர் தூரம் வந்துட்டு மீதி 30  கிலோ மீட்டர் தூரத்தை கடக்க முடியாட்டா ஏமாற்றமா இருக்காதா ...
 
பதிவர் சந்திப்பிற்கு பல நாட்களுக்கு முன்னமே நண்பர் கவிதை வீதி சவுந்தர் அலை பேசி வாயிலாக எனக்கு அழைப்பு விடுத்தார் .நண்பர் தமிழ் வாசி பிரகாஷ் முகநூல் மூலமாக தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார். அவர் அழைத்ததற்கு இன்னொரு காரணமும் உள்ளது. 

நான் இருவரிடமும் விழாவிற்கு வருவதாக கூறியிருந்தேன் . நான் உடனடியாக சம்மதம் சொன்னதற்கு இன்னொரு காரணமும் உண்டு. நேற்றைய தினம்தான் எனது ஒன்று விட்ட சகோதரியின் வீட்டு புதுமனை புகுவிழாவும் சென்னையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. 

தங்கையின் குடும்பத்தார் நாகர்கோவிலில் இருந்து சென்னை வர ஏற்பாடு செய்திருந்த தனி பேருந்தில் நேற்று காலை சுமார் ஒன்பது மணியளவில் சென்னை வந்து சேர்ந்தேன். சகோதரியின் இல்ல விழா சுமார் 1 மணியளவில் நிறைவடைந்தது. 

அதன் பிறகு சகோதரி குடும்பத்தாரிடம் பதிவர் சந்திப்பிற்கு செல்லவேண்டும் எனக் கூறினேன் .அதன் பின்னர்தான் தெரிந்தது பதிவர் சந்திப்பு நடக்குமிடம் சகோதரி இல்லத்திலிருந்து வெகு தூரத்தில் என்பது. 

மேலும் மாலை 5  மணிக்கு ஊர் திரும்ப ரயில் டிக்கட் முன் பதிவு செய்திருந்தேன். எனவே இடைப் பட்ட நேரத்தில் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ள இயலாது என தெரிய வந்தது . 

எனினும் இடைப் பட்ட நேரத்தில் திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் செல்லும் பாக்கியம் கிடைத்தது. 

பதிவர் சந்திப்பு இனிதே நிகழ்ந்ததற்கு மகிழ்ச்சியையும் அனைத்து  பதிவர்களுக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் .

மீ வெயிடிங் பார் நெக்ஸ்ட் பிளாக்கர்ஸ் மீட்.

18 கருத்துகள்:

இந்திரா சொன்னது…

தலைப்பைப் பார்த்துட்டு சந்திப்பு பற்றி ஏதோ செம மேட்டர்போலனு வந்தேன்..
ஏமாத்திட்டீங்க..

koodal bala சொன்னது…

@இந்திரா யான் பெற்ற இன்பம்? பெறுக இவ்வையகம் ...ஹி..ஹி..

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

பாலா! உங்களைப் பார்க்கும் வாயப்பை இழந்ததிற்கு மிகவும் வருத்துகிறேன்

வரலாற்று சுவடுகள் சொன்னது…

தலைப்பு பார்த்து வந்த எனக்கு பெரிய பல்பு! (TM 2)

koodal bala சொன்னது…

@வரலாற்று சுவடுகள் யான் பெற்ற இன்பம்? பெறுக இவ்வையகம் ...ஹி..ஹி..ரிப்பீட்டு...

koodal bala சொன்னது…

@புலவர் சா இராமாநுசம் நானும்தான் ஐயா ...குறிப்பாக தங்களையும் சென்னை பித்தன் ஐயா அவர்களையும் சந்திக்க மிக்க ஆவல் கொண்டிருந்தேன்...

சுவனப் பிரியன் சொன்னது…

:-)

தங்கம் பழனி சொன்னது…

நீங்களுமா?

அம்பாளடியாள் சொன்னது…

இன்னொரு பதிவர் சந்திப்பில் அவசியம் கலந்து கொள்ளும் வாய்ப்பை அடைவதற்கு இப்போதே ஒரு வாழ்த்துக்கள் உங்களுக்கு .கவலைய
விடுங்க சார் .

அருள் சொன்னது…

பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.

மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?

http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html

s suresh சொன்னது…

நல்லாத்தான் தலைப்பு வைச்சு ஏமாத்தறீங்க!

இன்று என் தளத்தில்
நினைவுகள்! கவிதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

மதுரை வீரன் சொன்னது…

பதிவர்களின் கூட்டத்தில் ஒரு புதிய ஆடு

http://rajaavinpaarvayil.blogspot.com

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கூடல் பாலா - தலைப்பைப் பார்த்த உடன் மனம் வருந்தினேன். முழுவதும் படித்த பின்னர் தான் செய்தி புரிந்தது. சரி ஏன் இப்படி தலிப்பு வைக்கிறீர்கள் ..... சரி இறுதியில் நல்ல விதமாக முடித்திருந்த்த்து கண்டு மனம் மகிழ்ந்தேன்.

நல்வாழ்த்துகள் பாலா
நட்புடன் சீனா

koodal bala சொன்னது…

@cheena (சீனா) மரியாதைக்குரிய சீனா ஐயா அவர்களுக்கு , ஹிட்ஸ் வாங்கவேண்டும் என்ற குறுகிய நோக்கில் இத்தலைப்பை வைத்துவிட்டேன் .இது யாருடைய மனதையாவது புண் படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி... (TM 4)

கும்மாச்சி சொன்னது…

தலைப்பைப் பார்த்து ஏதோ என்னவோ என்று நினைத்தேன். பாலா நாங்களும் கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் இணையத்தில் கண்டுகளித்தோம்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பதிவர் சந்திப்பு இனிதே நிகழ்ந்ததற்கு மகிழ்ச்சி....
அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்..

சூனிய விகடன் சொன்னது…

இதென்ன இப்படி ஒரு தலைப்பு ? உங்களின் திட்டமிடாத தெளிவில்லாத ஒரு பயணத்திற்கு சா. ராமானுசம் போன்ற சீனியர் பதிவர்கள் மிகக் கஷ்டப்பட்டு ஏற்பாடு செய்த ஒரு பதிவர் சந்திப்புக்கு உரிச்சொல்லாக " ஏமாற்றம் தந்த" என்ற வார்த்தையை பயன்படுத்தலாமா ?. முதலில் பெரியவர் சா.ராமானுசம் அய்யாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ளுங்கள். உங்களின் அணு உலை எதிர்ப்பு சிறுபிள்ளைத்தனத்தை இங்கும் காட்டி விட்டீர்கள்.