22 ஜூலை 2013

அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்தால் மேற்படிப்பு இலவசம்!

உண்மையிலேயே ஆச்சரியமாக இல்லை. உண்மைதான். 

அரசு பள்ளிகளிலோ அல்லது நகராட்சி மாநகராட்சி பள்ளிகளிலோ 12 ம் வகுப்பு பயின்று 1080  மேல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் மேற்படிப்பிற்கான முழு செலவையும் ஒரு பொது நல அறக்கட்டளை ஏற்று செலுத்தி  வருகிறது. 

இந்த தகவலை முகநூல் வாயிலாக நான் அறியப்பெற்றேன். 

தற்போது நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் எங்கள் ஊர்(கூடங்குளம் ) அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று இரண்டு மாணவிகள் 1080 மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற்றார்கள். 

எனக்கு கிடைத்த தவவலை மேற்படி மாணவிகளின் பெற்றோர்களுக்கு தெரிவித்தேன் . அதன்படி அவர்கள் அந்த அறக்கட்டளையைத் தொடர்பு கொண்டனர். உடனடியாக அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு அவர்கள் பிள்ளைகளின் மேற்படிப்பு செலவிற்கு வருடத்திற்கு ரூ 1 லட்சம் வழங்க அறக்கட்டளை மனமுவந்துள்ளது . 

இந்த உதவித்தொகையை எந்த கெடுபிடியும் இல்லாமல் மிகவும் எளிதாக பெற முடிந்ததாக சம்மந்தப்பட்ட பெற்றோர்கள் தெரிவித்தனர். 

கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை இந்த அளப்பரிய சேவையை செய்து வருகிறது. 

எனவே தற்போது பிளஸ் 2 பயின்று வரும் மாணவிகளும் இந்த உதவியை மனதில் கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளையை 107-A, செங்குப்தா வீதி , ராம் நகர், கோவை-9 என்ற முகவரி வாயிலாகவும் 0422-2236633 மற்றும் 2236644 ஆகிய தொலைப்பேசி எங்கள் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். 


வருடத்திற்கு ரூ 1 லட்சம் வீதம் உதவித்தொகை பெறும் எங்கள் ஊர் அரசு பள்ளி மாணவிகள்.

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சேவைகள் தொடர வேண்டும்... அறக்கட்டளைக்கு வாழ்த்துக்கள்... முகவரி உட்பட தொலைப்பேசி தகவலுக்கும் நன்றி...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எனது வட்டத்தில் G+ பகிர்ந்து கொண்டேன்... நன்றி...

கூடல் பாலா சொன்னது…

@திண்டுக்கல் தனபாலன் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நானும் சேர் செய்கிறேன் என் எல்லாத்தளங்களிலும் நன்றி பாலா...!

ஜோதிஜி திருப்பூர் சொன்னது…

முக்கியமான தகவல். நன்றி