30 ஏப்ரல் 2014

கணினியின் செயல்பாடுகளை விரைவு படுத்த ஒரு அட்டகாசமான மென்பொருள்!

பொதுவாகவே கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் ஏற்படும் அனுபவம் கணினி வாங்கிய புதிதிலோ அல்லது Format செய்த உடனேயோ நல்ல வேகமாக இருக்கும். பின்னர் நாளடைவில் தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல்வாதி போல் மெதுவாக  ஆரம்பிக்கும். 

இதற்கு காரணம் கணினியில் தேங்கியுள்ள தேவையற்ற கோப்புகள்(Junk files), Registry Error , மற்றும் பல பிரச்சினைகள். 

இவைகளை அவ்வப்போது சரி செய்வதன் மூலம் கணினியின் வேகம் குறையாமல் பார்த்துக்கொள்ள முடியும். 

இதற்கு பரவலாக CCleaner  மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் அதை விட சிறப்பாக செயல்படும் ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.

  " Glary Utilities " எனப்படும் இந்த மென்பொருள் மூலம் ஒரே கிளிக்கில் கணினியின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன. 

மேலும் 
Disk Defragment
Software Update
Remove empty folders 

போன்ற வசதிகள் மிக்க பயனுள்ளவையாக உள்ளன. 

ஒரு இலவச மென்பொருளில் இதனை வசதிகள் இருப்பது ஆச்சரியமான ஒன்றுதான்! 

மென்பொருள் தரவிறக்க சுட்டி

4 கருத்துகள்:

அம்பாளடியாள் வலைத்தளம் சொன்னது…

அருமையான பயனுள்ள பகிர்வு மிக்க நன்றி சகோதரா பகிர்விற்கு .
வாழ்த்துக்கள் தொடர்ந்தும் தங்களது ஆக்கங்கள் மலர வேண்டும் .

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

அருமையான தகவல்! பகிர்வுக்கு நன்றி!

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

பயனுள்ள பதிவு நண்பரே.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இதையும் தொடர்ந்து பயன்படுத்துகிறேன்...