27 செப்டம்பர் 2011

மீண்டு (ம்) வருவேன் ....

11  நாள் உண்ணாவிரதத்தின் பின் விளைவுகளிலிருந்து மீண்டு (ம்) வருவேன் ....

நம்பிக்கையுடன் 
கூடல் பாலா

22 செப்டம்பர் 2011

காலவரையற்ற உண்ணாவிரதம் நிறைவு -போராட்டம் தொடர்கிறது

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் நடைபெற்று வந்த 127  பேரின் காலவரையற்ற உண்ணாவிரதம் இன்று காலை 11  மணியளவில் நிறைவு பெற்றது .எனினும் சாதகமான சூழ்நிலை வரும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப் பட்டுள்ளது .

கடந்த 11  நாட்களாக இடிந்தகரையில் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தோம் .நேற்று முதல்வருடன் நடந்த பேச்சு வார்த்தையில் அணு உலைக்கெதிராக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றவிருப்பதாக முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து உண்ணாவிரதம் வாபஸ் பெறப்படுவதாக போராட்டக்குழு அறிவித்தது .

அதன்படி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த 127  பேரின் உண்ணாவிரதத்தை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் திரு இவான் அம்புரோஸ் அவர்கள் பழச்சாறு கொடுத்து நிறைவு செய்தார் .எனினும் எஞ்சியுள்ள பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தை தொடர்கின்றனர் .

இப்போதிலிருந்து நடைபெறுகின்ற போராட்டங்கள் முற்றிலும் மத்திய அரசுக்கெதிராக அணு உலையை மூடக்கோரும் போராட்டமாக அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

எனது உடல்நிலை சாதாரணமாகவே உள்ளது .

அணு உலையை மூடும் வரையில் தமிழர்கள் அனைவரும் குரல் கொடுப்போம் .

21 செப்டம்பர் 2011

வெற்றி : விரைவில் முடிவுக்கு வருகிறது உண்ணாவிரதம்

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி 11 வது நாளாக உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது .

இந்நிலையில் தமிழக முதல்வரின் அழைப்பை ஏற்று போராட்டக்குழுவினர் நேற்று இரவு சென்னைக்கு பேச்சு வார்த்தைக்கு புறப்பட்டுச் சென்றனர் .

இன்று முதல்வருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது .அப்போது அணு உலையை தற்காலிகமாக மூட நாளை அமைச்சரவையைக்கூட்டி தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் முடிவு செய்துள்ளார் .மேலும் நிரந்தரமாக மூட மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தடையாக இருக்கப்போவதில்லை எனவும் முதல்வர் உறுதியளித்துள்ளார் .

எனவே உண்ணாவிரதத்தை வாபஸ் பெற போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.

கூடிய விரைவில் உண்ணாவிரதம் முறைப்படி முடிவுக்கு வரும் . 

போராட்டம் வெற்றி பெற உழைத்த மக்களுக்கும் உலக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பதிவுலக சொந்தங்களுக்கும் மிக்க நன்றி !

20 செப்டம்பர் 2011

அணு உலை போராட்டக்குழு அலைக்கழிப்பு -பேச்சு வார்த்தைகள் ரத்து

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் 127 பேரின் காலவரையற்ற உண்ணாவிரதம் இன்று பத்தாவது நாளாக நடைபெறுகிறது. போராட்டத்துக்கு ஆதரவாக நெல்லை மாவட்டத்தில் கடையடைப்பு நடத்தி வணிகர்கள் ஆதரவளித்தனர் .
இந்நிலையில் போராட்டக் குழுவினரிடம் பேச்சு வார்த்தை நடத்த இடிந்தகரை வருவதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார் .ஆனால் இன்று மாலை வரை வரவில்லை .

திடீரென மாலை 4 -25 மணிக்கு ராதாபுரம் தாலுகா அலுவலகத்திலுள்ள தலையாரி இடிந்தகரை வந்து 4 -30 மணிக்கு அமைச்சரை சந்திக்க வரவேண்டும் என அழைப்பு விடுத்தார் .இடிந்தகரையில் இருந்து ராதாபுரம் செல்வதற்கு 30 நிமிடங்கள் ஆகும் அப்படியிருக்கையில் இந்த அழைப்பு போராட்டக் குழுவினரை அவமதிக்கும் செயல் எனக் கருதப் பட்டதால் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த 15 000 க்கும் அதிகமான மக்கள் அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் .

இந்நிலையில் 16 பேர் கொண்ட குழு நாளை தமிழக முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்யபட்டிருந்தது .ஆனால் முதல்வர் அலுவலகத்தால் இப்பட்டியல் திருத்தியமைக்கப் பட்டது .பட்டியலிலிருந்து போராட்டத்திற்கு பேராதரவு அளித்து வரும் சட்டமன்ற உறுப்பினர் மைக்கேல் ராயப்பன் பெயர் நீக்கப்பட்டது .குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் 10 ஆக குறைக்க கேட்டுக்கொள்ள பட்டது .இதற்கும் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் .இதன் காரணமாக முதலமைச்சருடனான பேச்சு வார்த்தையும் ரத்து செய்யப்பட்டது .


இன்று உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்கள்

மேலும் தமிழக முதலமைச்சருக்கு ஒரு கோரிக்கை விடப்பட்டுள்ளது .அதில் அணு உலை பிரச்சினையில் நேற்று முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் அதே நேரத்தில் அமைச்சரவையைக்கூட்டி கூடங்குளம் அணு உலைக்கெதிராக தீர்மானம் நிறைவேற்றினால் போராட்டம் கைவிடப்படும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது .

போராட்டம் 11 நாளை நோக்கி .....
-------------------------------------------------------------------------------------------------------
சற்று முன் : மத்திய அமைச்சர் நாராயண சாமி தற்போது உண்ணாவிரதத்தை பார்வையிட்டு சென்றார் .பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறவில்லை .

இது நாட்டை காக்கும் போராட்டம் :மேதா பட்கர்

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி தொடர்ந்து 10  வது நாளாக 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறோம் .

கூடங்குளம் பகுதியைச் சார்ந்த பள்ளி ,கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர் .வியாபாரிகள் தொடர்ந்து கடையடைப்பு நடத்தி வருகின்றனர் .தினமும் பத்தாயிரக் கணக்கான மக்கள் உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்து வருகிறார்கள் .

இந்த மாபெரும் போராட்டத்தை மீனவர்களின் போராட்டம் என சிலர் திசை திருப்ப முயன்றனர் .ஆனால் அது முறியடிக்கப் பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களும் இது தமிழகத்திற்கான போராட்டம் என்றுணர்ந்து தங்கள் ஆதரவை இப்போராட்டத்திற்கு வழங்கி வருகிறார்கள் .

நேற்று உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட மக்கள்  

இந்நிலையில் நேற்று இப்போராட்டத்தில் நேரில் கலந்துகொண்ட மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மேதா பட்கர் இப்போராட்டம் மீனவர்களுக்கு மட்டுமோ அல்லது தமிழகத்திற்கு மட்டுமோ அல்ல ,இது நம் தேசத்தை காக்கும் போராட்டம் என உணர்ச்சி பொங்க கூறினார் .

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் என்ன தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டாலும் அதன் கதிரியக்கத்தை யாராலும் தடுக்க முடியாது .இதிலிருந்து மக்களைக் காக்க அரசுகள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை .மக்கள் எழுச்சி மூலமாகத்தான் இதைத் தடுக்க முடியும் .அதுதான் இங்கே நடக்கிறது என்றும் அவர் கூறினார்.

காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் 127 பேரில் இது வரை 40  பேருக்கும் மேலானோர் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது .இவர்களுக்கு மருத்துவ வசதியை போராட்டக் குழுவே செய்து வருகிறது .

இன்று மத்திய அமைச்சர் நாராயண சாமி எங்களை சந்திக்க வருவதாக தகவல் வந்துள்ளது .
எனக்கு கைகொடுத்த சமூக சேவகி மேதா பட்கர்
எனது உடல்நிலை சீராக இருந்து வருகிறது .எடை மட்டும் ஏழு கிலோ குறைந்துள்ளது .

தொடர்ந்து பதிவின் வாயிலாகவும் ,தொலைப்பேசி வாயிலாகவும் ஆதரவு தெரிவித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கு நன்றி !

19 செப்டம்பர் 2011

கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை நிறுத்தவேண்டும் : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதாகடிதம்

கூடங்குளம் பிரச்னை தீர்க்கப்படும் வரை அணுமின் நிலையப் பணிகள் தொடரக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.


இப்பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த கடுமையான போராட்டம் ஏன்? : நேரடி ரிப்போர்ட்


உண்ணாவிரதத்தின் முதல் நாளில் நான் (ஆரஞ்சு T-SHIRT)

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி 127  பேர் இடிந்தகரையில் இன்று 9  வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடு பட்டுள்ளோம் .

17 செப்டம்பர் 2011

வெற்றியை நோக்கி ஒரு மரண பயணம்

தமிழகத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றும் முயற்சியான கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி 127 பேர் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் இன்று 7  வது நாளை எட்டியுள்ளது .

ஒவ்வொரு நாளும் 20000 க்கும் அதிகமான தமிழ் மக்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு எங்களை ஊக்கப் படுத்தி வருகிறார்கள் .

எங்களில் பலருடைய உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளபோதிலும் எப்பாடு பட்டேனும் அணு உலையை மூட வழி கிடைத்தால் மட்டுமே பட்டினிப் போரை முடிவுக்கு கொண்டு வருவதென்பதில் உறுதியாக உள்ளோம் .

எங்களின் இந்த முயற்சிக்கு பதிவுலகம் மிகப் பெரிய அளவில் ஆதரவளித்து வருவது மிகவும் உற்சாகமளித்து வருகிறது .ஆதரவளித்து வரும் சக பதிவர்கள் அனைவருக்கும் எண்ணிலடங்கா நன்றிகள் .

அலைப்பேசியில் பல பதிவர்கள் தொடர்புகொண்டு வாழ்த்தியது ஆனந்தமளித்தது .

விடமாட்டோம் போராட்டத்தை வெற்றி கிட்டும் வரை !

பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் வேறு ஊர்களிலிருந்து நடந்துவரும் மக்கள்
                              போராட்டத்தை ஆதரித்த புரட்சிப் புயல் 


                                                      பால பிரஜாபதி அடிகளார்
                                                 வணிகர்சங்க தலைவர் வெள்ளையன் 
                       செண்டிமேன்டாகப் பேசி அழ வைத்த பள்ளி மாணவி


                                            அணி திரண்ட பள்ளி மாணவர்கள் 


                                                            மயக்கமடைந்தவர்

14 செப்டம்பர் 2011

சாகும் வரை உண்ணாவிரதம் day-4

அன்பு  நண்பர்களே,

தமிழகத்தை அழிவிலிருந்து காக்க 127  பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளோம் .

இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது .


உண்ணாவிரதத்தின் மூன்றாம் நாள் படங்கள் கீழே .





ஆதரவளித்து வரும் பதிவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி .

13 செப்டம்பர் 2011

தமிழர்களே இந்த 127 உயிர்களை காப்பாற்றுங்கள்

அன்புள்ளம் கொண்ட தமிழ் உடன்பிறப்புகளே 

தென் தமிழகத்தை அழிவிலிருந்து காக்கும்பொருட்டு கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி திருநெல்வேலி மாவட்டத்திலே 20 பெண்கள் உட்பட 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறோம் .

எங்களுக்கு ஆதவராக தினமும் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் எங்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

நேற்று புரட்ச்சிப்புயல் வைகோ உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டார் .


நாளை செந்தமிழர் சீமான் கலந்துகொள்கிறார் .


எனினும் இன்று எங்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மூன்று நாட்களை கடக்கின்ற நிலையிலும் தமிழகஅரசு சார்பாகவோ மத்திய அரசு சார்பாகவோ யாரும் எங்களை அணுகவில்லை .

ஒருவேளை அணு உலையை காப்பாற்றுவதற்காக இந்த 127 பேரும் இறந்தாலும் பரவாயில்லை என்றிந்த அரசுகள் நினைக்கிறதோ என்று எண்ணுகிறோம் .


எனவே தமிழுணர்வாளர்கள் அனைவரும் எவ்வாறாவது அரசுக்கு இப்பிரச்சினையை கொண்டு செல்லுமாறு வணக்கத்துடன் கேட்டுக்கொள்கிறேன் .

இப்போராடத்திற்கு ஊக்கமளித்துக் கொண்டிருக்கும் பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி .

உண்ணாவிரத மேடையிலிருந்து கூடல்பாலா .

அவசரம்: SAVE 127 LIVES

DEAR FRIENDS WE ARE 127 PEOPLE INCLUDING 20 WOMEN CONTINUING AN INDEFINITE FASTING FOR THIRD DAY FOR THE CLOSURE OF KOODANKULAM NUCLEAR POWER PLANT .

TEN THOUSANDS OF PEOPLE SUPPORTING US .BUT THERE IS NO RESPONSE FROM THE INDIAN GOVERNMENT .

MANY OF US STRANGE TO FASTING.AS IT IS THIRD DAY MANY PEOPLE OF US ARE SO TIRED .

IF IT IS CONTINUING LIKE THIS IT WILL MAKE DANGER FOR MANY LIVES.PLEASE FORWARD THIS TO SAVE OUR LIVES

12 செப்டம்பர் 2011

தமிழ் நாடு :அணு உலைகளை மூடக் கோரி 10000 பேர் உண்ணாவிரதம் .

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி நேற்று (11 -9 -2011 ) முதல் நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் . மேலும் 200 க்கும் அதிகமானோர் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடு பட்டுள்ளனர் . அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தை விட பெரிதாக தமிழகத்தில் நடக்கும் இந்த உண்ணாவிரதத்திற்கு தமிழ் உள்ளங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறேன் . சாகும் வரை உண்ணாவிரதத்தில் நானும் ஈடுபட்டுள்ளேன் .உங்கள் ஆதரவு இருந்தால் எங்கள் கோரிக்கை எளிதாக நிறைவேறும் . இயன்றால் மீண்டும் சந்திப்போம் நண்பர்களே .

09 செப்டம்பர் 2011

மின்னல் வேக பூட்டிங் : விண்டோஸ் 8

மைக்ரோஃசாப்ட்  நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தின் அடுத்த பதிப்பான விண்டோஸ் 8 விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர் பார்க்கப் படுகிறது .


இதனிடையே அதுகுறித்த ஆச்சரியமூட்டும் தகவல்களும் வந்தவண்ணம் உள்ளது .அவற்றில் முக்கியமானது கணினி உபயோகிப்பாளர்களால் பெரிதும் எதிர் பார்க்கப் படும் அதிவிரைவான பூட்டிங் .

08 செப்டம்பர் 2011

தமிழுணர்வாளர்களே ஒன்றிணைந்து வாருங்கள் !

அணு உலைகளின்  ஆபத்தை உணர்ந்து மக்கள் உயிருக்கு மதிப்பளிக்கும் நாடுகள் அனைத்தும் அணு உலைகளை மூடிவரும் நிலையில் இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் இடம் கொடுக்க முன் வராததால் தமிழ் நாட்டில் மக்கள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தென் தமிழகத்தை அணு உலைக்களமாக மத்திய அரசு மாற்றி வருகிறது .

07 செப்டம்பர் 2011

திருநெல்வேலி கலெக்டர் : பரபரப்பு !

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் இரண்டு அணு உலைகள் கட்டப்பட்டு விரைவில் செயல் பாட்டுக்கு வரும் நிலையில் உள்ளது .மேலும் புதிதாக 6  அணு உலைகளை கட்டவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளது .

கூடங்குளத்தில் அணு உலை அமையும் பகுதியிலிருந்து 30  கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் 400 ஊர்களில் 10  லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர் .சமீபத்தில் ஜப்பான் நிகழ்ந்ததைப் போன்றதொரு அணு உலை விபத்து நிகழ்ந்தால் மக்களை காப்பாற்றுவதற்கு அரசிடம் எந்த திட்டமும் இல்லை .இதன் காரணமாக அணு உலைகளை மூட வலியுறுத்தி இப்பகுதி மக்கள் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்  .

04 செப்டம்பர் 2011

உலகப் பணக்காரர்களான மாப்பிள்ளை பெஞ்ச் மாணவர்கள் :வீடியோ

பொதுவாக பள்ளிக்கூடங்களில் சரியாக படிப்பு வராத மாணவர்களையும், சேட்டைகள் செய்யும் மாணவர்களையும் ஆசிரியர்கள் கடைசி பெஞ்சில் அமர வைப்பது வழக்கம் .

கடைசி பெஞ்சை மாப்பிள்ளை பெஞ்ச் என்றும் அழைப்பது உண்டு .ஆனால் பிற்காலங்களில் இந்த மாப்பிள்ளை பெஞ்ச் மாணவர்கள் பலர் வாழ்க்கையில் சிகரத்தைத் தொட்டு அவர்கள்  ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தியதுண்டு .

அவ்வாறு வியப்பில் ஆழ்த்திய மாணவர்களில் முக்கியமானவர்கள் காணொளியில் கண்டு மகிழுங்கள்  .

03 செப்டம்பர் 2011

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வாரீங்களா !

வாருங்கள் நண்பர்களே .இப்போது நான் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறேன் .விருப்பமுள்ளவர்கள் என்னுடன் வரலாம் .செலவு முற்றிலும் இலவசம் .



அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தில் ஏறிட்டோம்

02 செப்டம்பர் 2011

இலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த 5 தளங்கள் !


கணினி பயன்பாட்டுக்கு மென்பொருட்கள் மிகவும் அவசியமானவை.மென்பொருட்களை பதிவிறக்க பல்வேறு தளங்கள் உள்ளன .இவற்றில் சிறந்த ஐந்து தளங்களை இங்கே பகிர்கின்றேன் .

1) Download.cnet

இந்த தளம் 14 ஆண்டு பழமையானது .லட்சக்கணக்கான இலவச மற்றும் முயற்சி மென்பொருட்களை கொண்டுள்ளது .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள் .


2) Softpedia

இதுவும் ஒரு மிகச்சிறந்த தளம் .இத்தளத்தில் தொழில் நுட்ப செய்திகளும் உண்டு இலவச ,பகிர்மான ,முயற்சி மென்பொருட்களை வகை பிரித்து கொடுத்திருப்பது அருமை .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள்


3) Filehippo

இது ஒரு பிரபலமான இலவச மென்பொருள் தளம் .மென்பொருட்களை அப்டேட் செய்யவும் இங்கே வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டவும் .


4) ZDnet

இது ஒரு மிகப் பெரிய மென்பொருள் களஞ்சியம் .இங்கு கணினி மற்றும் மொபைல் போன்களுக்கான  இலவச மற்றும் முயற்சி மென்பொருட்கள் வகை வகையாக கிடைக்கின்றன .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள்

5) Tucows



மேலே குறிப்பிட்டுள்ளவைகளைப் போல் இதுவும் ஒரு சிறந்த தளம்தான் .இங்கே சுட்டி தளத்திற்கு செல்லுங்கள் .

01 செப்டம்பர் 2011

கூடங்குளம் அணுமின் நிலையம் :பில்டிங் வீக் ,பேஸ்மென்ட் அதைவிட வீக் !

ஜப்பானில் சமீபத்தில் நிகழ்ந்த அணு உலை விபத்தின் காரணமாக லட்ச்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளார்கள் .இதன் காரணமாக வளர்ச்சியடைந்த நாடுகள் பலவும் தங்கள் அணு உலைத் திட்டங்களை மறு பரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன .மாறாக இந்தியப் பிரதமர் பல அணு உலைகள் அமைப்பதில் தீவிரமாக உள்ளார் .


இதனிடையே தென் தமிழகத்திற்கு  அச்சுறுத்தலாகி வரும் கூடங்குளம் அணு உலையைப் பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகியுள்ளன .

இந்த அணு உலைகள் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளதால் விபத்துக் காலங்களில் கடும் நெருக்கடியை சமாளிக்கவேண்டிய சூழ் நிலையில் இருக்கின்ற வேளையில் அணு உலையின் பாதுகாப்பு குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளது .

கூடங்குளம் அணு உலை 2001  ம் ஆண்டு கட்டத் தொடங்கப் பட்டது .
தொடங்கப் பட்ட சில நாட்களிலேயே அணு உலை கட்டுமானத்திற்கு பயன்படுத்தப் படும் மணலில் கடல் மண் கலக்கப் படுவதாக சர்ச்சை எழுந்தது.

அப்போது தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த  அப்பாவு அவர்கள் திருநெல்வேலி  மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகார் தெரிவித்தார்.பின்னர் இது பற்றிய விளக்கங்கள் எதுவும் பொது மக்களுக்கு தெரியப்  படுத்தப் படவில்லை .