19 செப்டம்பர் 2013

நரேந்திர மோடி நல்லவரா? கெட்டவரா?

கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணி அரசிடம் பெற்ற  மோசமான அனுபவங்கள் கண்டிப்பாக அடுத்த தேர்தலில் ஆட்சி மாற்றம் செய்தே தீரவேண்டும் என்ற எண்ணத்திற்கு பெரும்பாலான மக்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக சமூக தளங்களில் இக்கருத்து மேலோங்கி இருப்பதை காண முடிகிறது. 


ஆட்சி மாற்றம் வேண்டுமானால் அதற்கு நரேந்திர மோடியை பிரதமராக்குவதுதான் ஒரே வழி என்று ஒரு தரப்பினரும், ஆட்சி மாற்றம் வேண்டும்தான் ஆனால் அதற்காக நரேந்திர மோடியை பிரதமராக்கினால் நாட்டின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று ஒரு தரப்பினரும் கூறி வருகின்றனர். 

நரேந்திர மோடியை ஆதரிப்பவர்கள் கூறும் காரணம், குஜராத்தில் மோடியின் அபார நிர்வாகத் திறமையால் அம்மாநிலம் அபார வளர்ச்சியடைந்துள்ளது அவரை பிரதமராக்கினால் இந்தியா முழுமையும் அதே நிலைமையை எட்டும் என்பது. 

மோடியை எதிர்ப்பவர்கள் கூறும் காரணம் குஜராத்தில் வளர்ச்சி என்று ஊடகங்கள் பொய் பிரச்சாரம் செய்கின்றன என்றும் குஜராத் கலவரம் மன்னிக்கமுடியாதது என்றும் கூறுகின்றனர். மூன்றாவது அணி மூலமாகத்தான் இந்தியாவிற்கு நல்லாட்சி கொடுக்க முடியும் என்பதும் இவர்களின் கருத்து. 

காங்கிரசுக்கு எதிரானவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த கருத்து வேறுபாடு காங்கிரசுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

காரணம் பாஜக வை தவிர வேறு எந்த கட்சியையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்கிற தைரியம் காங்கிரசுக்கு உண்டு. 

கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றதில் கொண்டுவரும் தீர்மானங்களை தொடக்கத்தில் தீவிரமாக எதிர்க்கும்  மாநிலக்கட்சிகள் ஓட்டெடுப்பு என்று வரும்போது காங்கிரசுக்கு ஆதரவாக சென்றுள்ளதைப் பார்த்திருக்கிறோம். 

இதன்மூலம் காங்கிரசைப் போன்றே பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் மாநிலக் கட்சிகள் பலவற்றை காண முடியும். 

எனவே இந்த சுயநல மாநில கட்சிகளுக்கு ஓட்டளிப்பதும் காங்கிரசுக்கு ஓட்டளிப்பதும் ஒன்றுதான். 

நரேந்திர மோடி நல்லவரா? கெட்டவரா? என்று என்னிடம் கேட்டால் அதற்கு நான் கூறும் பதில் "நாயகன் கமல்" கூறும் பதில்தான்.

22 ஜூலை 2013

அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்தால் மேற்படிப்பு இலவசம்!

உண்மையிலேயே ஆச்சரியமாக இல்லை. உண்மைதான். 

அரசு பள்ளிகளிலோ அல்லது நகராட்சி மாநகராட்சி பள்ளிகளிலோ 12 ம் வகுப்பு பயின்று 1080  மேல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் மேற்படிப்பிற்கான முழு செலவையும் ஒரு பொது நல அறக்கட்டளை ஏற்று செலுத்தி  வருகிறது. 

இந்த தகவலை முகநூல் வாயிலாக நான் அறியப்பெற்றேன். 

தற்போது நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் எங்கள் ஊர்(கூடங்குளம் ) அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று இரண்டு மாணவிகள் 1080 மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற்றார்கள். 

எனக்கு கிடைத்த தவவலை மேற்படி மாணவிகளின் பெற்றோர்களுக்கு தெரிவித்தேன் . அதன்படி அவர்கள் அந்த அறக்கட்டளையைத் தொடர்பு கொண்டனர். உடனடியாக அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு அவர்கள் பிள்ளைகளின் மேற்படிப்பு செலவிற்கு வருடத்திற்கு ரூ 1 லட்சம் வழங்க அறக்கட்டளை மனமுவந்துள்ளது . 

இந்த உதவித்தொகையை எந்த கெடுபிடியும் இல்லாமல் மிகவும் எளிதாக பெற முடிந்ததாக சம்மந்தப்பட்ட பெற்றோர்கள் தெரிவித்தனர். 

கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை இந்த அளப்பரிய சேவையை செய்து வருகிறது. 

எனவே தற்போது பிளஸ் 2 பயின்று வரும் மாணவிகளும் இந்த உதவியை மனதில் கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளையை 107-A, செங்குப்தா வீதி , ராம் நகர், கோவை-9 என்ற முகவரி வாயிலாகவும் 0422-2236633 மற்றும் 2236644 ஆகிய தொலைப்பேசி எங்கள் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். 


வருடத்திற்கு ரூ 1 லட்சம் வீதம் உதவித்தொகை பெறும் எங்கள் ஊர் அரசு பள்ளி மாணவிகள்.

18 ஜூலை 2013

குவாட்டரை விரும்பி சுவைக்கும் கொசுக்கள்!

நான் சிறு வயதாக இருந்தபோதெல்லாம் கொசு என்றொரு உயிரினத்தை எங்கள் ஊரில் உண்மையிலேயே பார்த்ததில்லை. 

ஆனாலும் நெல்லை போன்ற நகரங்களுக்கு செல்கையில் அங்கு அப்பொழுதே mosquito bat (விளக்குமாறு) சிலர் கொசுக்களை விரட்ட உபயோகிப்பதைப் பார்த்திருக்கிறேன். 


ஆனால் இப்போது பாரபட்சமின்றி அனைத்து இடங்களிலும் கொசுக்கள் தங்கள் கைவரிசையைக் காண்பித்து வருகின்றன. 

பொதுவாக கொசுக்கள் சில குறிப்பிட்ட வகையினரை மட்டும் அதிகமாக தாக்குவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன (எதிர்க்கட்சி சதியெல்லாம் இல்லை) இப்போது கொசுக்களின் தாக்குதலுக்கு அதிகம் ஆட்படும் ஐந்து பிரிவினரை பார்ப்போம்.

1)  மது அருந்துபவர்கள் :

வாய்யா வாய்யா என் டாஸ்மாக் தங்கம். 2011 ல் நடத்தப்பட்ட ஒரு பிரெஞ்சு ஆய்வின்படி மது அருந்துபவர்கள் இரத்தத்தை கொசுக்கள் மிகவும் விரும்பி குடிக்கிறதாம். மது அருந்தாதவர்களை விட மது அருந்துபவர்கள் 30% அதிகம்  கொசுக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறார்களாம். 

2) குண்டாக இருப்பவர்கள்:

கொசுக்களின் அடுத்த இலக்கு கொளுத்த சரீரம் உடையவர்கள் . கொசுக்களுக்கு எப்பொழுதுமே கார்பன் டை ஆக்சைடு மீது ஒரு ஈர்ப்பு உண்டு . கொளுத்த சரீரம் உடையவர்கள் மீதிருந்து வெளியாகும் அதிகப்படியான உஷ்ணம் மற்றும் கார்பன் டை ஆக்சைடு கொசுக்களை அதிகம் ஏற்பதாக Annals of Internal Medicine என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

3) உடற்பயிற்சி செய்பவர்கள்:

"இது என்னடா கொடுமையா இருக்குது" என்று நாம் நினைக்கலாம். நல்ல உடற்பயிற்சி செய்பவர்கள் உடலிலுள்ள வெப்ப ஈர்ப்பு, அவர்கள் உடலில் இருந்து வெளியாகும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு மற்றும் அவர்கள் உடலிலுள்ள  லாக்டிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் உடற்பயிற்சி செய்பவர்களை கொசுக்களுக்கு அடையாளம் காட்டுவதாக Susan Paskewitz என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார்.

4) இரத்த வகைகள்:

பிளட் குரூப்பை நாமெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு கண்டு பிடிக்கிறோம். ஆனால் கொசுக்கள் எப்படித்தான் கண்டுபிடிக்கிறதோ தெரியவில்லை . 83% கொசுக்கள் "O " குரூப் இரத்தம் இருப்பவர்களைக் கண்டால் அங்கிருந்து நகராது  என்று கூறுகிறது ஆராய்ச்சி முடிவு. எப்படித்தான் கண்டு பிடிக்கிறதோ தெரியவில்லை.

5) கர்ப்பிணிப் பெண்கள் : 

அட கொசுக்களே உங்களுக்கு இரக்கமே இல்லையா . கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து வெளியாகும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு மற்றும் அவர்கள் வயிற்றுப்பகுதியிலுள்ள அதிகப்படியான உஷ்ணம் கொசுக்களை அதிகம் ஈர்க்கின்றதாம். சாதாரண பெண்களை விட கர்பிணிப் பெண்கள் இருமடங்கு அதிகம் கொசுக்களின் தாக்குதலுக்கு உள்ளாவதாகக் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

நன்றி: The Week

12 ஜூலை 2013

திறமையான நீதிபதி யார் ?நம் நாட்டில் பல்வேறு சிறிய மற்றும் பல  பெரிய வழக்குகள் நீதி மன்றத்தில் நடந்து வருகின்றன.... 

அயோத்தி பிரச்சினை காவிரி பிரச்சினை முல்லை பெரியாறு பிரச்சினை இன்னும் என்னென்னவோ பிரச்சினைகள்....

இப்பிரச்சினைகள் சம்மந்தமான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. இந்த அனைத்து பிரச்சினைகளும் என்றாவது ஒரு நாள் தீர்த்து வைக்கப்பட்டுவிடும் . 

ஆனால் இதையெல்லாம் விட சிக்கலான பிரச்சினை ஒன்றுள்ளது. 

அதுதான் மாமியார் மருமகள்  இடையே உருவாகும் பிரச்சினை. 

எப்பேர்பட்ட நீதிபதியாக இருந்தாலும் இந்த பிரச்சினையில் மாட்டினால் சிக்கல்தான். 

ஆகவே கட்டிய மனைவிக்கும் பெற்ற தாய்க்கும் இடையே பிரச்சினை எழும்போது அதை தீர்க்க யாருக்கு திறமை உள்ளதோ அவர்தான் திறமையான நீதிபதி. 

இந்த போட்டிக்கு வர்றவுங்கல்லாம் கொஞ்சம் கைய தூக்குங்கண்ணே ....

22 ஜூன் 2013

Gmail - அனுப்பிய மெயிலை UNDO செய்வது எப்படி ?

சில வேளைகளில் நாம் மின்னஞ்சல் அனுப்பியவுடன் அதை தவறுதலான முகவரிக்கு அனுப்பிவிட்டதாகவோ அல்லது அதை அனுப்பவேண்டிய அவசியம் இல்லை எனவோ  அனுப்பியபின்னர் உணரக்கூடும். 

இது போன்ற சூழ்நிலைகளில் அனுப்பிய மெயிலை ரத்து (UNDO ) செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

முதலில் உங்கள் Gmail அக்கவுண்டை திறந்துகொள்ளுங்கள். பின்னர் படத்தில் காட்டியுள்ளவாறு Settings பகுதிக்கு செல்லுங்கள் .இப்போது வரும் பக்கத்தில் LABS எனும் Tab ஐ தேர்வு செய்யவும். 


இப்போது படத்தில் கண்டவாறு Undo Send என்பதை Enable செய்யுங்கள்.


இனி மாற்றங்களை சேமித்து வெளியேறுங்கள். 

இப்போது நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியவுடன் அதை Undo செய்யும் வசதி கிடைத்திருப்பதை காணமுடியும்.

20 ஜூன் 2013

வளைகுடா நாடுகளில் வேலை தேட சிறந்த 5 தளங்கள் !

இந்த பதிவின் வாயிலாக வெளி நாடுகளில் வேலை தேட சில பயனுள்ள தளங்களை பகிர்கின்றேன். 


இத்தளங்களின் வாயிலாக வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் நம் தகுதிக்கேற்ற வேலைகளை தேட முடிகிறது. மேலும் இத்தளங்களில் உறுப்பினர்களாவதன் வாயிலாக மின்னஞ்சல் மூலமாக வேலை வாய்ப் பிற்கான விபரங்களை அறியப்பெற முடியும். 

தேவைப் படுபவர்கள் இத்தளங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.டிஸ்கி: துபாய் எங்கே இருக்குதுன்னு உண்மையிலேயே  எனக்கு தெரியாதுங்க.

19 ஜூன் 2013

அட்டகாசமான ஐந்து தமிழ் தளங்கள் (பகுதி-3)

பயனுள்ள தமிழ் தளங்கள் வரிசையில் இந்த ஐந்து தமிழ் தளங்களை அறிமுகப் படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.1) இயற்கை வைத்தியம் 

பல்வேறு நோய்கள் பெருகி வரும் இந்நாட்களில் இயற்கை மற்றும் மூலிகை சார்ந்த மருத்துவத்திற்கு மக்கள் அதிகம் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளனர். பாட்டி வைத்தியம் என்று சொல்லப்படுகின்ற இத்தளத்தில் பல்வேறு நோய்களுக்கும்  எளிய மருத்துவ குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

2) தமிழ் சமையல் 

தற்காலத்தில் பெரும்பாலான பெண்கள் வழிகாட்டுதலின் பேரிலேயே சமைக்க முடிகிறது. தமிழ் சமையல் குறிப்புகளை வாரி வழங்கும் தளம். பெரும்பாலான ஆண்களுக்கும் உதவுகிறது Tamil Cook எனப்படுகின்ற இத்தளம்.

3) தமிழ் செய்திகள் 

உலகத்திலுள்ள பெரும்பாலான தமிழ் செய்தி தளங்களின் சுட்டியைக் கொண்டுள்ளது இத்தளம். ஒரே இடத்தில் அனைத்து செய்திகளையும் அறிய Tamil News Paper.net என்கின்ற இத்தளத்திற்கு வாருங்கள்.

4) தமிழ் மின்னூல்கள் 

தமிழ் மொழியில் வெளியாகியுள்ள பல்வேறு பிரபலமான நூல்களை மின்னூல் வடிவில் பதிவிறக்கம் செய்ய இது ஒரு சிறந்த தளம். தமிழக ஆசிரியர் என்னும் இத்தளத்தில் நீங்கள் விரும்பும் மின்னூலை பதிவிறக்கம் செய்து பயனடையுங்கள்.

5) தமிழ் அகராதி 

ஆங்கில சொல்லுக்கு தமிழில் பொருள் காண பலவேறு வழிமுறைகள் உள்ளன. ஆனால் இத்தளத்தில் தமிழ் சொற்களுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் அறியக் கிடைக்கிறது. பிரபல புத்தக நிறுவனமான LIFCO நிறுவனம் இந்த தளத்தின் வாயிலாக இந்த சேவையை நமக்கு இலவசமாக தருகிறது

14 ஜூன் 2013

கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி !

நன்றி: ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.


எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.

உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

ஆனால், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியைத் தொடர்ந்து பல மணிநேரங்கள் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது.

கண்களுக்கு ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.

மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.

சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும். அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட்பார்கள். எனவே சூரியநமஸ்காரம் செய்வதால் கண் பார்வை அதிகரிக்கும். பொதுவாக சூரியநமஸ்காரத்தை அதிகாலையில் சூரியன் உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரத்தை வெவ்வேறு வேளைகளில் செய்வதால் வெவ்வேறு பலன்கள் கிட்டும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓய்வாக அமையும். பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.

அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அப்படி செய்யும்போது உள்ளங்கைகளை எடுத்துவிட்டு சிறிது நேரம் கழித்து மெதுவாக கண்களைத் திறக்க வேண்டும்.

மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. 

எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.

அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

05 ஜூன் 2013

நம் சந்ததிகளை காக்க நாம் உடனடியாக செய்யவேண்டிய 10!

கடந்த சில வருடங்களாக உலகம் முழுவதுமே ஒரு வேகமான மாற்றத்தை சந்தித்து வருகிறது. பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் வருகின்றன இவைகள் நம் அன்றாட பணிகளை எளிதாக்கி வருகின்றன. 

ஆனால் மிக முக்கியமான ஒன்றில் உலக மக்கள் கவனம் செலுத்த தவறி வருகின்றனர். 


அதுதான் சுற்றுசூழல் பாதுகாப்பு. 

சுற்று சூழலுக்கு விளைவிக்கப்படும் தீங்குகள் நம் எதிர்கால சந்ததிகள் உயிருக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.எனவே உலக சுற்றுசூழல் தினமான இன்று சுற்றுசூழலை பாதுகாக்க நம்மாலியன்ற இந்த சிறு சிறு செயல்களை செய்ய உறுதியேற்போம்.

1) இன்று காற்று மாசுபடுவதற்கும் மழைவளம் குறைவதற்கும் மரங்கள் வெட்டப்படுவதுதான் முக்கிய காரணியாக உள்ளது. எனவே மரங்களை வெட்டுவதை குறைத்துவிட்டு மரங்களை நடுவதில் ஆர்வம் செலுத்த வேண்டும். பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கியும் மரங்களை நட்டும் வருகின்றன. அவர்களுக்கு நம்மாலியன்ற ஒத்துழைப்பை அளிக்கவேண்டும்.

2) புவி வெப்பமயமாதலுக்கும், பல்வேறு நோய்களுக்கும் காரணமாக விளங்கும் மறு உபயோகம் செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை அறவே தவிர்க்கவேண்டும்.

3) கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்தவேண்டும்.

4) கழிவுநீரை முறையாக வடிகால் அமைத்து அகற்றவேண்டும். கண்ட கண்ட இடங்களில் கழிவு நீரை தேங்க விடக்கூடாது.

5) மிகவும் அவசியப்பட்டாலன்றி கார், மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.

6) மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும்.  மிகவும் அவசியப்பட்டாலன்றி AC மற்றும் குளிர்சாதன பெட்டிகள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.

7)  நிலத்தடி நீரை பாதுகாக்க தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும். மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க மழை  நீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்கவேண்டும்.

8) மின்னணு சாதனங்கள் பழுதானால் உடனடியாக அதை தூக்கி எரிவதை விட்டுவிட்டு அதை சரி செய்யவோ அல்லது மறு உபயோகம் செய்யவோ அல்லது தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கவோ செய்யலாம்.

9) மின்சாரத்தை உறிஞ்சி வெப்பத்தை அதிகமாக வெளியிடும் குண்டு பல்புகளை தவிர்த்துவிட்டு CFL அல்லது LED  பல்புகளை பயன்படுத்தவேண்டும்.

10) சுற்றுசூழலுக்கு சற்றும் தீங்கு விளைவிக்காத சூரிய மின்சக்தி அமைப்புகளை ஏற்படுத்தவேண்டும்.

இவைகளையெல்லாம் நாம் செய்யத் தவறுவோமானால் அது நம்  எதிர்கால சந்திதிகளின் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல என்பதை உணர்வோமாக.

03 ஜூன் 2013

இணையதளம் மூலமாக இலவச கண் பரிசோதனை!

கம்யூட்டர் முன் அதிக நேரம் வேலை செய்தாலும் சரி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்த்தாலும் சரி, புத்தகங்களை அதிகமாக படித்தாலும் சரி. நம் பார்வை நமக்கேத் தெரியாமலே டல்லாகி இருக்கலாம்.

அதை கண்டறிய ஐ ஸ்பெஷலிஸ்டை நாடிப் போக பலருக்கு நேரமிருக்காது.

அவ்ர்களுக்கு உதவவே ஒரு வெப்சைட் இருக்கிறது.

இந்த வெப்சைட்டில் இருக்கும் நிறச் சோதனை, இணைய வழி எழுத்துச் சோதனை, சுய வழி திரையிடல் சோதனை, பார்வைக்குரிய மாயை போன்ற நான்கு சோதனைகள் தரப்பட்டிருக்கின்றன.

இந்த டெஸ்ட்டுகள் முழுமையாகச் செய்து பார்த்த பின்பு நம் பார்வை குறித்த பல விவரங்கள் தரப்படுகின்றன.

அதைக் கொண்டு நம் கண்பார்வை சரியாக உள்ளதா? அல்லது சற்று குறைபாடு ஏற்பட்டுள்ளதா என்பதை நாமே தெரிந்து கொள்ள முடியும்.

என்ன உங்கள் பார்வைக் குறைகளைக் கண்டறிய தயாரா…!
தள முகவரி : http://www.freevisiontest.com/tests.php

10 மே 2013

தமிழகத்திலுள்ள பல் மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல்.

தமிழகத்தில் அமைந்துள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து  பல் மருத்துவக் கல்லூரிகள் பற்றிய விபரம் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது . தேவைப்படுவோர் பயன்பெறுங்கள்.

1) TAMILNADU GOVERNMENT DENTAL COLLEGE
(Government Institution)
CHENNAI-600 003
Ph: +91-44-25340441 DIR:253406812) VINAYAKA MISSIONS SANKARACHARIYAR DENTAL COLLEGE
SANKARI MAIN ROAD, ARIYANOOR  
SALEM-636 308
Ph: +91-427-2872317/2872318
Fax:+91-427-2872903
E.Mail:
inayaka@vnplsalem.net.in, VMTrust@tr.dot.net.in3) J.K.K.NATARAJAH DENTAL COLLEGE
SALEM MAIN ROAD, KOMARAPALAYAM-638 183
NAMAKKAL DISTRICT
Ph: +91-4288-260203/260625
 E.Mail:JKKN@tr.net.in
 
www.jkknatarajah.org   4) RAJAS DENTAL COLLEGE& HOSPITAL
THIRURAJAPURAM, KAVALKINARU JUNCTION 627 105
TIRUNELVELI DISTRICT
Ph: +91-4637-230163/230066/230142     O:230066
Fax:+91-4637-230111
Email:
jec123@giasmd02.vsnl.net.in 
 5) RAGAS DENTAL COLLEGE, & HOSPITAL
2/102 EAST COAST ROAD
UTHANDI, CHENNAI 600 119
Ph: +91-4424491736
 6) SAVEETHA DENTAL COLLEGE
112, POONAMALLEE HIGH ROAD,
VELAPPANCHAVADI,
CHENNAI-600 077
Ph: +91-44-26273178/26273179/26274630-32
Fax:+91-44 26274050
Email:
saveetha@giasmd01.vsnl.net.in
 7) SREE BALAJI DENTAL COLLEGE
VELACHERY MAIN ROAD,
NARAYANPURAM, PALIKARANAI,
CHENNAI-601 302.
Ph: +91-44-22461883 DIR 22460623
E-Mail:
sbdch@usa.net
Website :
www.sbdch.com 8) MEENAKSHI AMMAL DENTAL COLLEGE & HOSPITAL
ALAPAKKAM MAIN ROAD, MADURAVOYAL,
CHENNAI-602 102.
Ph: +91-44-24872566/24874177/24871066/24771162)
DIR:24872577,24791626 FAX:24791631
EMAIL :
madc@md2.vsnl.net.in9) THAI MOOGAMBIGAI DENTAL COLLEGE
GOLDEN GEORGE NAGAR,
MOGAPPAIR, CHENNAI-600 107.
Ph: +91-44-26251045
 
 10) SRM DENTAL COLLEGE
BHARATHI SALAI
RAMAPURAM, CHENNAI 600-089
Ph: +91-44-2336526
Fax:+91-44-4748925
 11) SREE MOOKAMBIKA INSTITUTE OF DENTAL  SCIENCES
V.P.M.HOSPITAL COMPLEX,
PADANILAM, KULASEKHARAM
KANYAKUMARI DISTRICT
TAMILNADU 629 161
Ph: +91-277550/277551/27735912) SREE RAMAKRISHNA DENTAL COLLEGE & HOSPITAL  
S.N.R.COLLEGE ROAD
 

COIMBATORE - 641 006.
Ph: 0422-2210075-7713) KSR INSTITUTE. OF DENTAL SCIENCE & RESEARCH
KSR KALVI NAGAR , THAKKAVADI POST
TIRUCHENGODU-637 209
NAMAKKAL DIST.
Ph: 04288-274761/274745
Fax:+91-44-274745
 
 14) ADIPARASAKTHI DENTAL COLLEGE & HOSPITAL
MELMARUVATHUR,
KANCHIPURAM DISTRICT 603319
Ph. 04115 229313, 229217
Fax: 04115 229111  
 15) THE TRICHY RAJAS DENTAL COLLEGE  
Raja Nagar, Nagamangalam
Tiruchirapalli  620 012
Ph. 0431 3205736
Fax : 0431 2680295
Email :
info@rajas.edu  16) VIVEKANANDA DENTAL COLLEGE FOR WOMEN
ELAYAMPALAYAM,
TIRUCHENGODU-637 205
NAMAKKAL DISTRIST
Ph: +91 (4288) 234427 / 234676 / 234891 / 234670
Fax: (04288)  234890 , 23489017) C.S.I. COLLEGE OF DENTAL SCIENCES & RESEARCH
No.129, East Veli Street,
Madurai 625 001.
Ph. : 0452 2321708  
 18) CHETTINAD DENTAL COLLEGE & RESEARCH INSTITUTE
IT HIGHWAY, (OLD MAHABALIPURAM ROAD)
PADUR VILLAGE
KANCHEEPURAM DISTRICT - 603 103
Ph - 044 - 27475090, 2747599519) MADHA DENTAL COLLEGE & HOSPITAL
MADHA NAGAR,  KUNRATHUR
CHENNAI  600 069
Ph - 4780732 / 4780734 / 4780735  /4780899
Fax :  4780798
 20) BEST DENTAL SCIENCE COLLEGE
NO. 69/1-A, MELUR ROAD,
KODIKULAM,
MADURAI  625  104
Ph  -  0452 - 2423290 / 91
Fax  -  0452 - 253982821) SRI  VENKATESWARA  DENTAL  COLLEGE & HOSPITAL  
THALAMBUR,  OFF - OLD MAHABALIPURAM ROAD,
I.T. HIGHWAY, NEAR NAVALUR,
CHENGLEPUT TALUK
KANCHIPURAM  DISTRICT  603 103
Ph :  044  -  27435528 /  27435711
Fax  : 044  -  27435769
 22) PRIYADARSHINI  DENTAL  COLLEGE  &  HOSPITAL
PANDUR,
TIRUVALLUR  TK  &  DISTRICT - 631  203
Ph : 27650364 / 464/ 48823) KARPAGA VINAYAKA INSTITUTE OF DENTAL SCIENCES
G.S.T  ROAD, CHINNAKOLAMBAKKAM
MADURANTAKAM TK
KANCHIPURAM DISTRICT
 24) TAGORE DENTAL COLLEGE & HOSPITAL
RATHINAMANGALAM VILLAGE
VANDALUR, CHENNAI 600 048
PH-28341865/2834162125) R.V.S. DENTAL COLLEGE & HOSPITAL
KUMARANKOTTAM CAMPUS
TRICHY ROAD, KANNAMPALAYAM
COIMBATORE - 641 402
01 மே 2013

மே தினம் உருவானது எப்படி?


1886-ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழு வதும் மே தினமாக கொண்டாடப்படு கிறது. இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் தங் களது இன்னுயிரை இதற்காக விலை யாக தரவேண்டியிருந்தது. தொழிலா ளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண் டனை விதிக்கப்பட்டது.

1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கார்மிக் ஹார்வெஸ்டர் என்ற கம்பெனியின் முன்னால் திரண்டிருந்த 500 தொழிலாளர்களிடையில் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் உரையாற்றிக் கொண்டிருந்தார். அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். ஐவர் படுகாயமுற்றனர். பலர் தாக்கப்பட்டனர். இந்த அடக்கு முறையை கண்டித்து அன்று இரவு, சிகாகோ நகரின் மையப் பகுதியில் உள்ள ஹே மார்கெட் என்ற இடத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தோழர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ், ஆல்பர்ட் பார்ஸன்ஸ், சாமுவேல் பீல்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டதால் இறுதி கட்டத்தில் சுமார் 200 தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர். சாமுவேல் பீல்டன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜான்போன் பீல்டு என்ற அதிகாரியின் தலைமையில், 180-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கூட்டத்தினரை வளைத்து உடனடியாக கலைந்து போகும்படி உத்தரவிட்டனர். சிறிது நேரத்தில் அங்கு கலவரம் வெடித்தது. அப்போது திடீரென்று காவல்துறை யினர் மீது ஒரு கையெறி குண்டு வந்து விழுந்தது. அதில் ஒருவர் உயிரிழந்தார். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுட்டனர். இதில் பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

உரிமைக் குரல்

இந்த கலவரத்தை காரணம் காட்டி தொழிலாளர்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். 1886-ம் ஆண்டு மே 1-ம் தேதி கைது செய்யப் பட்டு ஒரு ஆண்டிற்கு மேலாக நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம்தேதி அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். மேற்கண்ட நான்கு தோழர்களுடன், அடால்ப் பிட்சர், மைக்கேல் ஸ்வார்ப், சாமுவெல் பீல்டன், லூயிஸ் லிங்க் மற்றும் ஆஸ்கர் நீப் ஆகிய தோழர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஆஸ்கர் நீப் என்ற தோழருக்கு 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற தோழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. இதன் விளைவாக ஸ்வார்ப் மற்றும் பீல்டன் ஆகியோருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிட்சர், ஆகியோர் 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ந்தேதியன்று தூக்கிலிடப்பட்டனர். லூயிஸ் லிங்க் என்ற தோழர் சிறை யிலேயே தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார்.

நீதிமன்றத்தில் உரிமைக் குரல்

சிகாகோ நகர தொழிலாளர் களுக்கு 8 மணி நேரம் வேலை கேட்டு நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய தோழர் களில் முதன்மையானவர் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் ஆவார். நீதிமன் றத்தில் இவர் மீது குற்றம் சுமத்தி வாதாடிய அரசு வழக்குரைஞர், ‘ஆயிரம் ஆயிரம் தொழிலாளர் இவர் பின்னால் அணிதிரண்டதே இவர் செய்த முதன் மையான குற்றம்’ என வாதிட்டார். ஆகஸ்ட் ஸ்பைஸோ, ‘இந்த குற்றச் சாட்டே தனக்கு தற்காப்பு வாதமாக அமைந்து விட்டது” என எதிர்வாதம் செய்தார். காவலர்கள் மீது தான் குண்டு வீசியதாக அரசு தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது இதன்மூலம் பொய் என நிரூபிக்கப்பட்டுவிட்டதாக வாதிட்டார். காவலர்கள் மீது வீசப்பட்ட குண்டு தன்னால் உண்மையில் வீசப்பட்டிருந்தால் அதை நீதிமன்றத்தில் ஏற் றுக்கொள்வதில் தனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது என்று தைரி யத்தோடு உரைத்தார்.

மற்றொரு தோழர் ஆல்பர்ட் பர்ஸன் நீதிமன்றத்தில் வாதாடுகையில், மரம் கனிகளால் அறியப்படுவதைப் போல் தொழிலாளர்கள், போர்க்குணம் மற்றும் தியாகத்தின் மூலம் தங்களது உண்மையான தலைவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள். தங்களுக்கு அளிக்கப்படும் மரணதண்டனை தீப்பொறியாக உலகம் முழுவதும் பரவும் என ஆர்ப்பரித்தார்.

ஆஸ்கர் நீபி என்ற தோழர், கலவரம் விளைவிக்கப்பட்ட இடத்தில் நடந்த கூட்டத்திற்கு தான் தலைமை வகித்தேன் என்ற உண்மையை இந்த நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்வதாகவும், 8 மணி நேரம் வேலை கேட்டு போராடிய தொழிலாளர்களுக்கு நான் தலைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுவதாகவும் உரைத்தார்.

அடால்ப் பிட்சர் என்ற தோழர் நீதி மன்றத்தில் உள்ள காவலர்களைப் பார்த்து எள்ளி நகையாடி இவர்களா சட்டத்தின் காவலர்கள்? இவர்கள் திருடர்கள். அடுத்தவர்களின் சொத்தினை அபகரிப்பவர்கள் என எக்காளமிட்டார்.

தோழர் மைக்கேல் ஸ்வாப், நீதி மன்றத்தில் தங்களுடைய நோக்கம் கலகம் விளைவிப்பது அல்ல, சோசலிசத்தை அடைவதே என்று பிரக டனப்படுத்தினார்.

தோழர் ஜார்ஜ் ஏங்கல், தொழிலா ளர்களின் தேவை, வேலை, ரொட்டி, அமைதி, இவை மூன்றுதான். இது கூட இவர்களுக்கு இன்று உத்தரவா தப்படுத்தப்படவில்லை என்று முழக்க மிட்டார்.

தோழர் சாமுவேல் பீல்டன் நீதி மன்றத்தில் உரையாற்றுகையில், நாங்கள் சோசலிசத்தைப் பேசினால் சிலர் பயப்படுகிறார்கள் நாங்கள் பிறரின் சொத்துக்களை சோசலிசத்தின் பெயரில் அபகரித்து விடுவோம் என நினைக் கிறார்கள். ஆனால் சோசலிசத்தின் நோக்கம் அது அல்ல. யார் ஒருவர் இன்னொருவருடைய சொத்துக்களை திட்டமிட்டு பறிக்கிறார்களோ அதை தடுத்து நிறுத்தக்கூடிய அமைப்பை உருவாக்குவதுதான் சோசலிசம் என விளக்கினார்.

முதலாளித்துவத்திற்கு சாவுமணி!

சுரண்டப்படும் தொழிலாளர்களை திரட்டி, சோசலிச உணர்வுகளை ஊட்டி முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக கிளர்ந்தெழச் செய்வதை ஒடுக்கவே, காவல்காரர்களே குண்டு வீசி சதி செய்து, தங்கள் மீது குற்றம் சுமத்தி மரண தண்டனை வழங்க திட்டமிட்டுள்ளார்கள் என்று தெரிந்திருந்தும், மே தின தியாகிகள் சிறிதும் அஞ்ச வில்லை. 


நீதிமன்றத்தில் வாதாடுவது மூலம் தாங்கள் தண் டனையிலிருந்து தப்பமுடியும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்தக் கொலைக் களத்தையும் பிரச்சார மேடையாக பயன்படுத்தி முதலாளித்துவத்தின் முகமூடியை கிழித்தெறிந்து, சோசலிசத்தின் மேன் மையை தூக்கிப் பிடித்து, நீதிமன்றத் தில் அவர்கள் ஆற்றிய உரையும், ஆதிக்க சக்திகளின் திணறலையும், வரலாற்று ஆவணமாக மாற்றிய அவர்களின் வீரத்தை போற்றி பாராட்ட வார்த்தை களே இல்லை. 

அவர்கள் எதிர்பார்த்தது போலவே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீரத்துடன் போராடிய அந்த தோழர் களுக்கு கிடைத்த மரண தண்ட னையே முதலாளித்துவத்திற்கு அடிக் கப்பட்ட முதல் சாவு மணியாக மாறியது. அவர்களின் மரணமே உலகத் தொழிலாளர்களை ஒன்று சேர்த்திடும் மகத்தான சக்தியாக இன்று உருவெடுத்து உள்ளது.

மே தின தியாகிகள் வாழ்க!

நன்றி: NFPE

26 ஏப்ரல் 2013

புலியின் முடியை பிடுங்கிய பெண்!

ஒரு அபூர்வமான முனிவரிடம் ஒரு பெண் வந்து தன கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள்.

முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.

மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து வந்து விட்டாள். மறுநாள் சென்றாள் புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைவாக இருந்தது. ஆனாலும் திரும்பி விட்டாள்.

அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்து விட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.

புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள்.

முனிவர் கூறினார் ''இனி உனக்கு மூலிகை தேவையில்லை."

நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கி விட்டாய்.

அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா, என்ன?''

முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது.அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள்...!

நீதி: நம் பயங்களும் சந்தேகங்களும் மற்றவரின் அன்பையும் நட்பையும் அடையத் தடையாக இருக்கக்கூடாது.

  நன்றி- "அக்கம் பக்கம் கொஞ்சம்- முகநூல் பக்கம்"

23 ஏப்ரல் 2013

MS OFFICE ல் தமிழ் யுனிகோட் எழுத்துக்களை பயன்படுத்துவது எப்படி?


நாம் சிலநேரங்களில் தமிழ் இணையப் பக்கங்களில் உலவுகையில் ஏதாவது தகவல்கள் நமக்கு பிடித்திருப்பின் அவற்றை ஒரு WORD  DOCUMENT  ஆகமாற்றி நமது கணினியில் சேமிக்க விரும்புவோம். 

ஆனால் சில வேளைகளில் தமிழ் பக்கங்களை COPY  செய்து MS WORD ல் PASTE செய்கையில் எழுத்துக்கள் கட்டங்களாக தோன்றி எரிச்சலூட்டும். 

இது போன்று ஏற்படாமல் இருக்க MS OFFICE ல் ஒரு சிறிய SETTING செய்தால் போதும். 

முதலில் உங்கள் கணினியில் START மெனுவை கிளிக் செய்யுங்கள். இனி All Programs >Microsoft Office >Microsoft  Office  Tools > Microsoft Office Language Settings இப்போது ஏராளமான மொழிகள் தோற்றமளிக்கும். இந்த பட்டியலில் தமிழை தேர்வு செய்து ADD என கொடுக்கப் பட்டுள்ள பட்டனை கிளிக் செய்து OK சொடுக்கி வெளியேறவும் .

இப்போது உங்களது பிரச்னை தீர்ந்திருக்கும்.

22 ஏப்ரல் 2013

பூமிக்கு என்ன பரிசு கொடுக்கலாம்!

இன்று உலக புவி தினம். 
பெற்ற தாய் பிள்ளைகள் தரும் இன்னல்களை எவ்வாறு தாங்குவாளோ அதுபோல நம் பூமித்தாய் நாம் கொடுக்கும் எல்லா இன்னல்களையும் தாங்கிக்கொண்டு நம்மை உயிர் வாழ வைக்கிறாள். நமக்காக தியாகங்கள் பல செய்யும் நம் பூமித்தாய்க்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம். ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற சில சிறிய நற்காரியங்களை செய்தாலே நம் பூமித்தாயை பசுமைத் தாயாக மாற்ற முடியும். 
இதற்கு நாம் என்னென்ன செய்யலாம் ...
1) புதை படிவ எரிபொருள் உபயோகத்தை கட்டுப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க சக்திகளான காற்றாலை, சூரிய ஓளி திட்டங்களை செயல்படுத்தலாம். இதனால் கரியமில வாயுவினால் ஏற்படும் பாதிப்பு வெகுவாக குறைகிறது. வீட்டளவிலும் இதுபோன்ற திட்டங்களை தேவைக்கேற்ப நிறுவலாம்.மேலும் குறைந்த அளவு மின்சாரமே தேவைப்படும் சிஎப்எல் பல்புகளை பயன்படுத்தலாம்.

2) குப்பைகளை குறைப்பதால் மீதேன் உள்ளிட்ட ஆபத்தான வாயுக்களின் வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 10 சதவீதம் வரை வாயு வெளியேற்றத்தை குறைக்க முடியும். நம் வாழ்வியல் முறையில் மாற்றங்கள் கொண்டு வந்து, கூடிய அளவுக்கு மறுசுழற்சி செய்யலாம். இதனால் தேவைகள் குறைவதோடு அவற்றை தயாரிப்பதற்கான எரிபொருளும், சக்தியும் பாதுகாக்கப்படுகின்றன.

3)ஒவ்வொரு முறை தண்ணீரை சுத்திகரிக்கும் போதும், விநியோகிக்கும் போதும் அதிகளவில் ஆற்றல் வீணடிக்கப்படுகிறது. சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துவதோடு, சேமிக்கும் வழிகளையும் யோசிக்கலாம்..மழை நீரை சேமிப்பதில் அனைவரும் ஆர்வம் காட்டினால் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும்.

4)வீடுகளை வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள, சுவர்களுக்கு பாதுகாப்பு பூச்சு, ஜன்னல்களுக்கு பருவநிலை காக்கும் கண்ணாடி என பல நவீன அம்சங்களை சேர்த்துக்கொள்ளலாம்.இதன் காரணமாக அதிக வெப்பத்தை வெளியேற்றும் குளிர்சாதன கருவிகளை எல்லா நேரங்களிலும் உபயோகிப்பதை தவிர்க்கலாம்.

5) அருகாமையிலுள்ள இடங்களுக்கு நடந்தோ, மிதிவண்டியிலோ செல்லலாம். தேவைப்படும் நேரங்களில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த எண்ணலாம். வாகனத்தை இயக்குவதாக இருந்தாலும், அது நல்ல நிலையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்யவேண்டும். வாகனங்களாலும் அதிகளவில் எரிபொருள் வீணடிக்கப்படலாம்.

6) தேவைப்படும் நேரங்களை தவிர பிற நேரங்களில் மின்சாரம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

7) பல வகை மாசினால் மூச்சு திணறி கொண்டிருக்கும் பூமிக்கு பிராணவாயுவை கூட்டவும், ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து நம்மை பெருமளவு காப்பாற்றவும் தேவைப்படுவது மரங்கள்.நிழல் தரும் மரங்கள் வளர்ந்தால், பூமி சற்றே இளைப்பாறும்.
 

26 ஜனவரி 2013

முட்டையிலிருந்து கோழி வரவில்லை -ஆராய்ச்சி முடிவு !

கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வருகிறது. 


இந்த நீண்ட நாள் கேள்விக்கு தற்போது விடை கண்டு பிடித்துள்ளார் நமது மாநிலத்திற்கு அண்டை மாநிலமான  புதுவையிலுள்ள விஞ்ஞானி ஒருவர். 

இந்த ஆராச்சிக்காக அவர் ஒரு கோழியையும் பத்து முட்டைகளையும் பயன்படுத்தியுள்ளார் . 

பத்து முட்டைகளையும் அந்த ஒரு கோழியை வைத்து அடை காக்க வைத்துள்ளார் . சிறிது நாட்கள் கழித்து முட்டையை பரிசோதித்த விஞ்ஞானி ஆனந்தக் கூத்தாடினார் . காரணம் அவரது ஆராய்ச்சிக்கு முடிவு  கிடைத்துவிட்டது . முட்டையிலிருந்து கோழிகள் எதுவும் வரவில்லை மாறாக கோழி குஞ்சுகள்தான் வந்துள்ளன. 

இதன் மூலம் நீண்ட நாள் பிரச்சினைக்கு முடிவு கட்டிஇருப்பதாக கூறியுள்ளார் அவ்விஞ்ஞானி . இதற்காக தனக்கு இன்னும் 15 நாட்களில் நோபல் பரிசு கிடைக்கும் எனவும்  அடித்துக் கூறுகிறார் வில்லேஜ் விஞ்ஞானி நா.சா .

23 ஜனவரி 2013

நான் மிகவும் விரும்பும் 5 Android அப்ளிகேஷன்கள்.

இயல்பாகவே Android  மொபைல் போன்கள்  பல்வேறு வசதிகள் நிறைந்தவையாக உள்ளன. இருப்பினும் கூடுதலாக சில அப்ப்ளிகேஷன்களை நிறுவுவதன் மூலம் நமது மொபைல் மேலும் மெருகேற்றப் படுகிறது. 


இங்கே எனக்கு மிகவும் பிடித்த 5 Android அப்ளிகேஷன்களை  பகிர்கிறேன். குறைவான வேகமுள்ள இணைய இணைப்புள்ள மொபைல்களுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதம் .மேலும் இவ்வுலாவியின் மூலமாக தமிழ் தளங்களை பார்வையிடலாம் என்பது இன்னொரு சிறப்பு .வீடியோக்களை மொபைலில் பார்வையிடுவதற்கு இதை விட சிறப்பான அப்ளிகேஷன் உள்ளதா என தெரியவில்லை. வீடியோக்கள் அமைந்துள்ள Foldar களை அருமையாக வகைப்படுத்தி தருகிறது .மேலும் வீடியோக்களை தரம் குறையாமல் பெரிதாக்கிப் பார்க்கும் வசதி இதிலுள்ள தனி சிறப்பு .இது நாம் கணினியில் உபயோகிக்கும் ccleaner மென்பொருள் போன்றது. தேவையற்ற கோப்புகளை அழித்து மொபைல் வேகமாக இயங்க உதவுகிறது.இது மொபைல் போனில் கேட்கும் பாடல்களை தரம் உயர்த்த உதவுகிறது. சாதரணமாக பாடலை கேட்பதற்கும் இதன் மூலம் கேட்பதற்கும் நிறையவே வித்தியாசத்தை உணரலாம்.சிறந்த பொழுது போக்கு விளையாட்டு. 6 முதல் 60 வரை வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் கவரும் இது. 

இதை பார்த்ததுமே என்ன கைய புடிச்சி இழுத்தியா எனும் வடிவேலுவின் வசனம்தான் நியாபகத்திற்கு வருகிறது.

20 ஜனவரி 2013

இன்வெர்டர் வாங்க போறீங்களா?

மின்சார தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடும் இச்சமயத்தில், இன்வெர்ட்டர்களை விற்கும்  நிறுவனங்களும், வியாபாரிகளும் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், ஒரு மாதத்தில் 15இன்வெர்ட்டர்களே விற்பனையான கடையில், இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட இன்வெர்ட்டர்கள் விற்பனையாகிறது. 


இந்நிலையில் புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, ஏற்கெனவே வைத்திருப்பவர்கள் அதை எப்படி பராமரிப்பது என்பது குறித்து  பார்போம். ''இன்வெர்ட்டர்களில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, சைன் வேவ் இன்வெர்ட்டர். இரண்டாவது, ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர். இந்த இரண்டு வகையிலும் குறைந்த பட்சம் 250வாட்ஸ், 400 வாட்ஸ் என இரண்டு வகை உண்டு. 250வாட்ஸில்ஒரு விளக்கு, ஒரு ஃபேன் இயங்கும். 400 வாட்ஸில் இரண்டு விளக்கு, இரண்டு ஃபேன் இயங்கும். இந்த இரண்டுமே பெரும்பாலும் இப்போது நடைமுறையில் இல்லை. இப்போது இருப்பது 650 வாட்ஸ் இன்வெர்ட்டர்கள்தான். இதில் ஒரு ஃபேன், ஒரு விளக்கு, ஒரு டி.வி. இயங்கும். 850வாட்ஸ் கொண்ட இன்வெர்ட்டர்தான் நடுத்தர மக்களுக்கும்,சிறுதொழில் செய்பவர்களுக்கும் அதிகம் பயன்படும். இன்றையநிலையில் அதிகம் விற்பனை ஆகக்கூடிய இன்வெர்ட்டரும் இதுதான். இதில் ஐந்து விளக்குகள், நாலு ஃபேன் அல்லது டி.வி. அல்லது கம்ப்யூட்டர் அல்லது மிக்ஸியை இயக்கலாம்.  பொதுவாக இன்வெர்ட்டர்கள் எல்லாமே தானாக இயங்குபவை என்பதால், மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க ஆரம்பித்துவிடும். மின்சாரம் வந்ததும் அதன் இயக்கம் தானாகவே நின்று விடும். இன்வெர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால்,  மின்சாரத்திலிருந்து அதுவாகவே சார்ஜ் ஆகிக் கொள்ளும். இதனால் இன்வெர்ட்டர், பேட்டரி இரண்டையுமே கரன்ட் கனெக்ஷனில்தான் வைத்திருக்க வேண்டும்'' 

இன்வெர்ட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்! 

தேவைக்குத் தகுந்தபடி இன்வெர்ட்டர் மாடல்களை தேர்வு செய்ய வேண்டும்.  மூன்று மணி நேரம் கரன்ட் கட் ஆகிற பகுதிகளில், அதற்கு ஏற்றார்போல மின்சாரத்தை சேமிக்கக் கூடிய பேட்டரிகளை தேர்வு செய்வது நல்லது. இன்வெர்ட்டருக்கு அதிக டிமாண்ட் நிலவும் இச்சமயத்தில் இன்வெர்ட்டருக்கான பேட்டரி என்று சொல்லி, வேறு ஏதாவது ஒரு பேட்டரியை நம் தலையில் கட்டிவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, கவனமாக இருப்பது அவசியம்.  நீண்ட காலமாக இன்வெர்ட்டர் தயாரித்து வரும் நிறுவனங்களின் இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரிகளை வாங்கலாம்.  

இன்வெர்ட்டர் வாங்கும் போது அந்த நிறுவனத்தின் சர்வீஸ் எப்படி இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும். ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்கள் வாங்குவதைவிட சைன்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்குவது நல்லது. ஏனெனில்,சைன்வேவ் இன்வெர்ட்டர் நம் வீட்டுக்குத் தேவையான அளவுமின்சாரத்தை முழுமையாகத் தரும். இதனால், எலெக்ட்ரானிக் பொருட்கள் கெட்டுப் போகாது. ஆனால், ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்கி பயன்படுத்தும்போது ஃபேன், மிக்ஸி மாதிரியான எலெக்ட்ரானிக் பொருட்களில் இரைச்சலான சத்தம்வரும். இதனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் விரைவில் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது.  

பராமரிப்பது எப்படி? 

இப்போது மின்தட்டுப்பாடு அதிகமிருந்தாலும், இந்த பிரச்னை இன்னும் சில மாதம் கழித்து கொஞ்சம் தணியலாம். அந்த சமயத்தில், இன்வெர்ட்டரை பூட்டி, அப்படி ஒரு ஓரத்தில் வைத்து விடக் கூடாது. மாதம் ஒருமுறையேனும் கிடைக்கும்மின்சாரத்தை நிறுத்திவிட்டு, இன்வெட்டர் மின்சாரத்தை பயன்படுத்தினால் இன்வெட்டரும் பேட்டரியும் பழுதடையாமல் இருக்கும். பேட்டரியில் இருக்கும் டிஸ்டில்ட் வாட்டர் குறையும் பட்சத்தில், அதை கட்டாயம் நிரப்பி வைக்க வேண்டும். இதை செய்யாவிட்டால், இன்வெட்டர் இயங்காது. 

பேட்டரிகளில் டியூப்ளர் மற்றும் ஃப்ளாட் பிளேட்னு இரண்டு வகைஇருக்கிறது. இதில் டியூப்ளர் பேட்டரி பயன்படுத்துவது நல்லது. இது நீண்ட காலத்துக்கு உழைக்கும். மற்ற பேட்டரிகளைவிட பராமரிப்புச் செலவும் குறைவுதான்''.

தகவல்: இனி ஒரு விதி செய்வோம் முகநூல் பக்கம்