30 ஏப்ரல் 2011

உங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க

பொதுவாக கணிப்பொறி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக இயங்கும் .ஆனால் நாளடைவில் வயோதிகனை போல் மெதுவாக இயங்கி நம்மை சோதிக்கும் .

சிலரது கணினி பூட் ஆவதற்குள் காலை சிற்றுண்டியை முடித்துவிடலாம்.சிலரது கணினி SHUT DOWN ஆவதற்கு மணிக்கணக்கில் நேரம் எடுத்துக்கொள்ளும் .இடையில் கணினியை RESTART செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதற்குள் தூக்கம் வந்துவிடும் .

இதுபோல இல்லாமல் நாம் கணினியை வாங்கியபொழுது என்ன வேகத்தில் இயங்கியதோ அதே வேகத்தில் தொடர்ந்து இயங்க ஒரு மென்பொருள் உள்ளது .

WIN ASO REGISTRY OPTIMIZER என்னும் மென்பொருளில் உங்கள் கணினியை வேகமாகவும் பிழையின்றியும் செயல்பட வைக்க பல்வேறு கருவிகள் உள்ளன .மிகவும் மெதுவாக இயங்கும் ஒரு பழைய கணினியில் இதை நிறுவினால் நிறைய வித்தியாசத்தை  உணரலாம் .

ஒண்ணே ஒண்ண சொல்ல மறந்துட்டேன் .இதோட TRIAL VERSION தான் இலவசமாக கிடைக்கிறது .FULL VERSION தேவை படுபவர்கள் அதற்குரிய வழிகளில் பெற்றுக்கொள்ளலாம் .

இந்த மென்பொருளை ஒரு முறை பயன்படுத்தியவர்கள் கண்டிப்பாக நிரந்தரமாக வைத்துக்கொள்வார்கள் .TRIAL VERSION டவுன்லோடு செய்ய இங்கேகிளிக் செய்யவும் .

29 ஏப்ரல் 2011

அணு உலைகளை எதிர்ப்பதற்கு 10 காரணங்கள் ...

       ஜப்பானில் நிகழ்ந்துள்ள அணு உலை விபத்திற்கு பிறகு அணு உலைகளுக்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றிருக்கின்றன .வழக்கம் போல பணம் சம்பாதிப்பதை மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்கும் முதலாளித்துவம் அணு உலைகளால் பாதிப்பில்லை என்று கூறி வருகிறது .ஆனால் சுற்று சூழல் ஆர்வலர்களும் விஞ்ஞானிகளும் இனியும் அணு உலைகளை மின் தேவைக்காக நம்பியிருப்பது முட்டாள்தனம் என்று கூறி வருகிறார்கள் .பல்வேறு விதத்திலும் ஆராயும்போது எந்த ஒரு வகையிலும் அணு உலைகள் நாட்டிற்கோ ,மக்களுக்கோ நன்மை தருபவை இல்லை என்பது விளங்குகிறது .

இப்போது அந்த பத்து காரணங்கள் .

1 . அணு மின் நிலையங்கள் என்றாலே முதலில் அனைவருக்கும் நியாபகத்திற்கு வருவது விபத்துதான். அதிகமான எண்ணிக்கையில் விபத்துக்கள் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு விபத்தும் பல நூறு ஆண்டுகளுக்கு ஆறாத ரணத்தை ஏற்படுத்திவிடுகின்றன .செர்நோபில் அணு உலை விபத்தால் இன்றளவும் பிறக்கும் குழந்தைகள் குறைபாட்டோடு பிறக்கின்றன .    ஜப்பான் அணு விபத்தால் ஏற்படும் பாதிப்புகள் இனி வரும் நாட்களில்தான் முழுமையாக தெரிய வரும் .விபத்துக்கள் இல்லாமல் அணு உலைகளை இயக்க முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது .
 
2 .அதிக அளவிலான விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன .ஒரு இடத்தில் அணு உலை அமைக்க 3000  முதல் 5000  ஏக்கர் வரை நிலம் கையகப்படுத்தப்படுகிறது .அணு உலைக்காக கையகப்படுத்தும் நிலத்தை அணு மின் நிலையம் அமைந்த பின்பு வேறு எந்த நோக்கத்திற்க்காகவும் பயன்படுத்த முடியாது .

3 . அணு உலைகளில் விபத்து நேராவிட்டாலும் கூட அணு உலைகளிலிருந்து 30  கிலோ மீட்டர் சுற்றளவுக்குள்  வசிக்கும் மக்களுக்கு புற்று நோய், மரபணு சம்மந்தப்பட்ட  வியாதிகள் அதிகரித்திருப்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது .

4 . அணு உலையில் விபத்து நேரும் பட்சத்தில் கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் சுற்றுப்பகுதிக்குள் வசிக்கும் மக்கள் தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்துவிட்டு இடம்பெயர வேண்டிய சூழ் நிலை உருவாகும் .அவ்வாறு இடப்பெயர்ச்சிக்கு உள்ளாகும் நடுத்தட்டு மக்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் நிலை அதோ கதிதான் .

5 . அணு உலை கட்டுவதற்கு ஆகும் செலவு (சுமார் 15,000 கோடி )மிக அதிகம் .மற்றும் கால அவகாசம் மிக அதிகம் (கிட்டத்தட்ட 15 வருடங்கள் )

6  .அணு உலையின் ஆயுள் மிக குறைவு .30 வருடங்கள் மட்டுமே மின்சாரம்  தரும் உலை பகுதியை வேறு எந்த உபயோகத்திற்கும் பின்னாட்களில் பயன்படுத்த முடியாது .

7 .விபத்து நடந்தால் ஊழியர்களை மட்டுமன்றி அருகில் வசிப்பவர்களையும் அதிக அளவு இம்சைக்குள்ளாக்குவது அணு உலை மட்டும்தான் .

8 . அணு உலைகளை விட ஆபத்து நிறைந்த இன்னொரு பெரிய ஆபத்து அணு கழிவுகள் .அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருட்களை 10,000 வருடம் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கவேண்டும் .இதில் அஜாக்கிரதை செலுத்தினால் அதோகதிதான் .மேலும் இதனை பாதுகாக்க ஆகும் செலவு அணு உலைகளை கட்ட ஆகும் செலவை விட அதிகம் .

9.           எதிரி நாடுகளுக்கோ ,தீவிரவாதிகளுக்கோ முதல் இலக்கு அணு உலைதான்

10.ஒவ்வொரு நாடும் அணு குண்டுகள் தயாரிக்க பயன்படுத்துவது அணு உலைகளிலிருந்து கழிவாக கிடைக்கும் ப்ளுட்டோனியம்தான் .ஒரு அணு உலையிலிருந்து ஆண்டொன்றுக்கு 500 அணு குண்டுகள் தயாரிக்கும் அளவிற்கு ப்ளுட்டோனியம் கிடைக்கிறது .அணு உலைகளை ஒழித்தால்தான் அணு ஆயுதங்களையும் ஒழிக்க முடியும் .
  
    உலக வெப்பமயமாதலுக்கு ஒரே தீர்வு அணுமின் நிலையங்கள்தான் என்று சிலர் கூறி வருகின்றனர் .ஆனால் அணு உலைகள் தீர்வு அல்ல .சுற்று சூழல் சீர்கேட்டுக்கு போடப்படும் அடித்தளம் .

பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் .பிடித்திருந்தால வாக்களிக்கலாம் .




28 ஏப்ரல் 2011

Windows XP : அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய குறுக்கு விசைகள் !

இன்று கணிப்பொறி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் Windows XP OS ஐ தான் பயன்படுத்துகிறார்கள் .நாம் MOUSE ன் துணை கொண்டு இயக்கும் ஒவ்வொரு இயக்கத்திற்கும் KEYBOARD SHORTCUT உண்டு .பல்வேறு KEYBOARD SHORTCUT கள் நாம் அறிந்தவையாக இருக்கும் .இருந்தபோதிலும் சில இயக்கங்களுக்கு KEYBOARD SHORTCUT   தெரியாததால்  MOUSE ன் துணை கொண்டு நாம் அதை செய்துகொண்டிருப்போம் .அவற்றை நாம் அறியும்பொழுது கணினியை இயக்குவது மேலும் சுலபமாக இருக்கும் .நம்மில் பெரும்பாலானோர் அதிகம் பயன்படுத்தாத அதே சமயம் அதிகம் பயன்படக்கூடிய சில KEYBOARD SHORTCUT  களை இங்கு பகிர்ந்துள்ளேன் .நீங்களும் பயன்படுத்திபாருங்கள். பலனடையுங்கள்.

WINDOWS KEY            START  மெனு திறக்க

WIN+R                            RUN  DIALOG  BOX   திறக்க

WIN+M                திறந்திருக்கும் அனைத்து WINDOWS  களையும்   MININIZE செய்ய   
WIN+SHIFT+M      திறந்திருக்கும் அனைத்து WINDOWS களையும்MAXIMIZEசெய்ய  

WIN+E                          MY COMPUTER திறக்க             

WIN +F                         SEARCH OPTION திறக்க

WIN+D            DESKTOP ஐ பார்க்க / அனைத்துWINDOWSகளையும் MINIMIZE செய்ய 

WIN+PAUSE                SYSTEM PROPERTIES பார்வையிட

ALT+SPACEBAR+N    இயங்கிக்கொண்டிருக்கும்  PROGRAMME  ஐ MININIZEசெய்ய  

ALT+SPACEBAR+R    இயங்கிக்கொண்டிருக்கும்  PROGRAMME  ஐ RESTORE செய்ய      

ALT+SPACEBAR+C    இயங்கிக்கொண்டிருக்கும்  PROGRAMME  ஐ  மூட

ALT+SPACEBAR+X    இயங்கிக்கொண்டிருக்கும்  PROGRAMME  ஐ MAXIMIZE செய்ய

SHIFT+DELETE           கோப்புகளை  RECYCLE BIN க்கு செல்லாமல் அழிக்க    

                                          பிடித்திருந்தால் ஓட்டளிக்கவும்.                                                                               

27 ஏப்ரல் 2011

செர்நோபில் அணுஉலை வெடிப்பு :வீடியோ

ஜப்பான் நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஏற்பட்ட அணுஉலை விபத்து பற்றிய தகவல்கள் பலவற்றை நாம் இன்று ஊடகங்களிலே கண்டு வருகிறோம் .இதற்கு சரியாக 25  வருடங்களுக்கு முன்பாக சோவியத் யூனியனில் (தற்போது உக்ரைன் )அமைந்திருந்த செர்நோபில் அணு உலை வெடித்து சிதறியது அதன் காரணமாக வெளியேறிய கதிரியக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் மேலும் தீராத நோய்கள் மற்றும் பிறவிக்குறைபாடுகள் இன்றளவும் ஏற்பட்டு வருகின்றன .அணு உலை வெடிப்பு மற்றும் கதிரியக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றிய ஓர் அருமையான காணொளி .


26 ஏப்ரல் 2011

இணைய பக்கங்களை PDF வடிவில் சேமித்திட இலவச மென்பொருள் !

பல இணைய தளங்களை நாம் பார்வயிடும்பொழுது சில தேவைகளுக்காக அதை சேமித்து வைத்தால் பிற்காலத்தில் உபயோகமாக இருக்கும் என்று நாம் கருதுவதுண்டு .ஆனால் இணைய பக்கங்களை சேமிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதுண்டு .இணைய பக்கங்கள் மட்டுமல்லாமல் எந்த வகையான கோப்பாக இருந்தாலும் அதை PDF வடிவில் சேமிக்க ஓர் அருமையான இலவச மென்பொருள் உள்ளது .Primo pdf எனப்படும் இந்த மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ள வேண்டும் .எந்த இணைய பக்கத்தை pdf ஆக சேமிக்க வேண்டுமோ அந்தபக்கத்தை திறந்து கொண்டு .File மெனுவில் Print ஐ அழுத்த வேண்டும் .பின்பு வரும் பெட்டியில் படத்தில் காண்பித்துள்ளவாறு Primo pdf என்பதை தேர்வு செய்யவேண்டும் .அதன் பிறகு Create PDF ஐ அழுத்தவேண்டும் .இப்போது நமது கோப்பு pdf ஆக சேமிக்கப்பட்டிருக்கும் .PDF உருவாவதில் பிரச்சினை ஏற்பட்டால் Save As ல் specific folder என்பதை தேர்ந்தெடுக்கவும் .செயல்படுத்தி பயனடையுங்கள் .அத்தோடு கொஞ்சம் இதை like பண்ணுநீங்கன்னா உங்களை மாதிரி நிறையபேர் பயனடைவார்கள் .மென்பொருளை தரவிறக்க  சுட்டி

10 ம் வகுப்பு சமச்சீர் பாடபுத்தகங்கள் இலவச டவுன்லோடு

10 ம் வகுப்பிற்கான சமச்சீர் பாடபுத்தகங்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே pallikalvi.in இணைய தளத்தில் அரசு வெளியிட்டுள்ளது .இங்கே click செய்து பள்ளிகல்வி இணையதளத்திற்குள் செல்லவும் .அதில் தேவையான பாடப்புத்தகத்தின் மீது click செய்தால் rapidshare என்ற தளத்திற்குள் கொண்டு செல்லும் rapidshare தளம் திறந்ததும் இணையபக்கத்தில் slow download என்பதை தேர்ந்தெடுக்கவும் .60 நொடிகள் காத்திருப்புக்கு பிறகு download செய்வதற்கான link கிடைக்கும் .பின்பு அதை கிளிக் செய்தவுடன் புத்தகம் டவுன்லோட் ஆக தொடங்கிவிடும் .file ன் அளவு மிகவும் அதிகமாக உள்ளது. டவுன்லோடு பண்ணுரதோடு போயிடாம ஓட்டு போட்டுட்டு போனீங்கன்னா நிறையபேருக்கு பயன்படும் .

25 ஏப்ரல் 2011

புகுஷிமா அணு உலை: சமீபத்தில் மிக அருகிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ .

ஜப்பானில் நிகழ்ந்த சுனாமி தாக்குதலால் புகுஷிமாவிலுள்ள அணு உலைகள் சின்னாபின்னமாக வெடித்து சிதறின .மிக அதிக அளவில் அவை கதிரியக்கத்தை வெளியிட்டு வருகின்றன .ஜப்பான் விமானப்படையில் உள்ள ஆளில்லாத சிறியரக விமானம் மூலம் சேதமடைந்த அணு உலைகளுக்கு மிக அருகிலிருந்து சமீபத்தில் எடுக்கப்பட்ட காணொளி .

விண்டோஸ் XP: சிஸ்டம் ரீஸ்டோர் மூலம் கணினிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு !

நல்ல முறையில் இயங்கிக்கொண்டிருக்கும் கணினி திடீரென்று வைரஸ் மூலமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ பழுதடைந்துவிட்டால்  உடனடியாக நாம் பின்பற்ற வேண்டியது  விண்டோஸ் நமக்கு கொடுத்திருக்கும் ஓர் எளிய வழி SYSTEM RESTORE.

இதை நாம் செயல் படுத்துவதற்கு முன்பாக system restore என்றால் என்ன என்பதை அறியவேண்டும் .

system restore என்பது நமது கணினி பழுதடைவதற்க்கு முன்பு என்ன நிலையில் இருந்ததோ அந்த நிலைக்கு நமது கணிணியினுடைய settings களை மாற்றி அமைப்பது ஆகும் .

உதாரணமாக இன்று பத்தாம் தேதி என்று வைத்து கொள்ளுவோம் நேற்று முதல் கணினி சரியாக இயங்கவில்லை அப்படியானால் எட்டாம் தேதி அல்லது அதற்கு முன்பிருந்த நிலைக்கு நமது கணினியை கொண்டு செல்ல வேண்டும் .

system restore செய்ய கணினியை safe mode ல் on செய்ய வேண்டும் .safe mode ல் on செய்ய  கணினியை  on செய்தவுடன் F8 கீயை அழுத்தவேண்டும் .உடனே இப்படி ஒரு தோற்றம் வரும்

இதில் safe mode என்பதை தேர்ந்தெடுத்து enter பட்டனை அழுத்த வேண்டும்.இப்போது கணினி safe mode ல் இயங்க தொடங்கியிருக்கும் .இப்போது கீழ்க்கண்ட படத்தில் தொன்றுகிறவாறு system restore தேர்வு செய்ய வேண்டும் .

அதன் பிறகு கீழ்க்கண்டவாறுதேர்வுசெய்து next அழுத்தவேண்டும் எந்ததேதிகளுக்கு உங்கள் கணினியை restore செய்யமுடியுமோ அந்த தேதிகள் தடிமனாகதெரியும் .அதில் சமீபத்தில் உள்ள நாளை தேர்வு செய்து next அழுத்தவேண்டும் .உங்கள் கணினி அதுவாகவே restart ஆகும் .அதன் பின்னர் உங்கள் கணினியின் பிரச்சினை அநேகமாக சரி செய்யபட்டிருக்கும் .

இதில் கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால் நீங்கள் restore செய்யும் தேதிக்கு பின்பு  கணினியில் copy செய்த தேவையான கோப்புகளை backup எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும் .  

பயன்படுத்தி பாருங்கள் ,கருத்துக்களை கூறுங்கள். இத்தளத்தை  நண்பர்களிடம் பகிருங்கள். ஓட்டளித்தால் பலபேருக்கு இது உபயோகமாக இருக்கும் . .

23 ஏப்ரல் 2011

அணு சக்தி வேண்டவே வேண்டாம் :நோபல் அறிஞர்கள்

       சமாதானத்துக்கான நோபல் பரிசு வாங்கிய ஆர்ச் பிஷப் ட்ஸ்மாண்டு,ஜோஸ் ராமோஸ் மற்றும் பெண் நோபல் அறிஞர் ரிகோபெர்டா மேஞ்சு தும் உள்ளிட்ட 9 நோபல் அறிஞர்கள் கூட்டாக கையெழுத்திட்டு இந்தியா,சீனா உள்ளிட்ட அணு மின் நிலையங்களில் அதிக அளவு முதலீடு செய்து வரும் 31 நாடுகளுக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர் .
             அணுகுண்டு எத்தனை ஆபத்து என்பதற்கும் அணு உலைகள் எத்தனை ஆபத்து என்பதற்கு ஜப்பானை தவிர வேறு உதாரணம் தேவையில்லை .மரபு சாரா எரி சக்திகளை கொண்டு மின்சாரம் தயாரிக்க எத்தனையோ வழிகள் உள்ளன .அவற்றுக்கு ஆகும் செலவு அணுமின் நிலையங்களை விட  அதிகம்  என்றாலும் ஆபத்து இல்லாமல் உலக மக்கள் வாழலாம் .நம்மில் யாராவது நோய்க்கான மருந்தை குறைந்த விலையில் கிடைக்கும் என்று மட்டமான கடைகளுக்கு சென்று வாங்குவோமா?அதுபோலத்தான் மனித குலத்துக்கு ஆபத்து இல்லாமல் மின்சாரம் தயாரிக்க அதிக விலை கொடுப்பதில் தப்பில்லை .
          உலகம் முழுவதும் தற்போது இயங்கி வரும் சுமார் 400 அணு உலைகளிலிருந்து பெறப்படும் மிசாரத்தின் அளவு மொத்த மின்சாரத்தில் 7% மட்டுமே .எனவே இந்த நானூறு அணு உலைகளையும் அக்கு வேறு ஆணி வேறாக பிடுங்கி எறிவதில் உலகிற்கு எந்த பெரிய இழப்பும் இல்லை .அதே நேரம் நிகழ்கால சந்ததியும் நமது வருங்கால சந்ததியும் கதிரியக்க பேராபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும் .அணு உலைகளில் விபத்து நேராவிட்டாலும் கூட அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட கழிவுப்பொருட்களால் எதிர்காலத்தில் பேராபத்து உள்ளது என்பதை அனைத்து விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்கின்றனர் .மனித குலத்துக்கே அச்சுறுத்தலாக விளங்கும் இந்த அணு மின் நிலையங்களை மூடி அப்புறப்படுத்திவிட்டு ஆபத்தில்லாத முறையில் அனைத்து நாடுகளும் மின் உற்பத்தி மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிஞர்கள் விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளனர்  


                ஆனால் கற்பனைக்குகூட எட்டாத வகையில் கோடிகள் லாபம் சம்பாதிக்கும் அணுமின்  நிலையத்துக்கான சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்க்குமா என்பது சந்தேகமே .இந்நிறுவனங்கள் சாதாரண மக்களை மட்டுமன்றி ஒவ்வொரு நாட்டு நாடாளு மன்றங்களையே அணுவினால் ஆபத்தில்லை என்று ஆட்டி படைக்கும் வல்லமை மிகுந்தவை .இந்நிருவனங்களுக்கேல்லாம் சாதாரண மக்களின் உயிரின் அருமை தெரியாது .அவர்களின் ஒரே தாரக மந்திரம் பணம் பணம் பணம் .

22 ஏப்ரல் 2011

ஜப்பான் அணு உலை அரக்கனின் கொடூரம் :வீடியோ



ஜப்பானில் சமீபத்தில் நிகழ்ந்த சுனாமி தாக்குதலால் புகுஷிமா அணு உலைகள் கடும் சேதமடைந்து கதிரியக்கத்தை வெளியிட ஆரம்பித்தது .அதை தொடர்ந்து அணு உலையை சுற்றி 30 கிலோமீட்டருக்குள் வசித்த மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர் .இதன் காரணமாக அப்பகுதியில் வளர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான கால் நடைகள் அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்டன .கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டும் உணவுகிடைக்காமலும் அவை மடிந்து வரும் கோரமான காட்சி .இதை பார்த்தாவது அணு உலைக்கு ஆதரவுக்கரம் நீட்டுபவர்கள் திருந்துவார்களா ?

ஜப்பான் : தாய்ப்பால் விஷமானது !

        நமது எதிரிகளுக்குகூட இப்படி ஒரு     சோதனை வரக்கூடாது என்றுமிகவும்துன்பமான வேளைகளில் நாம் நினைப்பதுண்டு .அப்படி ஒருமோசமான துன்பநிலை ஜப்பான் நாட்டில் நிகழ்ந்துள்ளது .

ஜப்பானில் கடந்த 11 -03 -2011  அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அங்குள்ள புகுஷிமா அணு உலைகள் மிக மோசமாக சேதமடைந்தன .அதன் காரணமாக அணு உலையில் இருந்து கதிரியக்கம் வெளியேறத் தொடங்கியது .அதன் காரணமாக புகுஷிமா மட்டுமன்றி 200 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் டோக்யோ நகரத்திலுள்ள உணவு பொருட்களிலும் கதிரியக்கம் கண்டறியப்பட்டது .

அதை தொடர்ந்து ஜப்பானில் இருந்து உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய பல்வேறுநாடுகளும் தடை விதித்துள்ளன .சில நாட்களுக்கு முன் ஜப்பான் கடலில் பிடிக்கப்பட்ட மீன்களை பரிசோதித்த போது அவற்றில் கதிரியக்கம் இருப்பதுகண்டறியப்பட்டது .அதன் காரணமாக யாரும் கடலில் இருந்து கிடைக்கும் உணவுகளை சாப்பிடவேண்டாம் என மக்களை அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டது .

தற்போது சோதனை மேல் சோதனையாக  டோக்யோ நகரத்தின் அருகில் வசிக்கும் சில தாய் மார்களின் தாய்ப்பாலில் நேற்று கதிரியக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது .இது அங்குள்ள மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

இதனிடையே புகுஷிமா அணு உலையிலிருந்து 20  கிலோ மீட்டருக்குள் எந்த ஒரு நபரும் நுழையஅந்நாட்டு அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக தடை விதித்தது .

1986 ல் செர்னோபிலில் நிகழ்ந்த அணு விபத்தின் போதும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன .அதனை தொடர்ந்து பல்வேறு நாடுகள் அணு உலைகளின் தீமையை உணர்ந்து தங்கள் நாட்டிலுள்ள அணு உலைகளை மூடின .

கடந்த 20  ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வகையில் எந்த ஒரு அணு விபத்தும் நிகழாததால் சில நாடுகள்புதிதாக அணு உலைகளை கட்ட திட்டமிட்டிருந்தன .தற்போது ஜப்பானில் நிகழ்துள்ள துயரங்களை அடுத்து அமெரிக்கா, சீனா,இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் அணு உலை அமைக்கும் திட்டத்தை கை விட்டுள்ளன .

18 ஏப்ரல் 2011

இன்றைய சூழ்நிலையில் அணுசக்தி ஒப்பந்தம் நாட்டுக்கு தேவையா?

    சென்னை மவுண்ட்ரோடு ,மதியம் 12  மணி ,உடம்பு பற்றி எறிவது போல் வெப்பம் ,நாக்கு வறண்டு உடல் தளர்ந்து மயக்கம் வரும் வேளையில் ஒரு இளநீரோ அல்லது தர்பூசனியோ சாபிட்டால் கொஞ்சம் இதமாக இருக்கும் .ஆனால் இந்த நிலையில் ஒருவன் சூடா ஒரு கப் காப்பி வேண்டும் என்று கேட்டால் அவனை ஒருவேளை பைத்தியமாக இருப்பானோ என்று எண்ண தோன்றும்.        பாரத பிரதமர் மன்மோகன் சிங்கை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது .உலக வெப்பமயமாதலை தடுக்க அணுமின் நிலையங்களால்தான் முடியும்  என்று சில நாடுகள் அணுமின் சக்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தன .அவற்றுள் சமீபத்தில் அணு விபத்தால் நிலை குலைந்திருக்கும் ஜப்பான் நாடும் ஒன்று .
      ஜப்பான் அணு விபத்துக்கு பிறகு ஜப்பான் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளும் தங்கள் அணுசக்தி திட்டங்கள் குறித்து மறுபரிசீலனை செய்ய தொடங்கியுள்ளன .சீனா தற்போது கட்டப்பட்டு வரும் மற்றும் புதிதாக கட்ட திட்டமிட்டுள்ள அனைத்து அணுமின் நிலையங்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது ஜெர்மனி பழமையான 7  அணு உலைகளை தற்காலிகமாக மூடியுள்ளது இவற்றில் சிலவற்றை நிரந்தரமாக மூடவும் பரிசீலித்து வருகிறது .இங்கிலாந்து 30 பில்லியன் பவுண்ட் செலவில் விரிவாக்கத் திட்டமிட்டிருந்த அணு சக்தி திட்டங்களை மறு பரிசீலனை செய்ய தொடங்கியுள்ளது உலகில் அதிக அளவு அணு ஆற்றலை நம்பியிருக்கும் பிரான்ஸ் நாட்டின் பாராளு மன்றத்தின் இரு அவைகளிலும் அணுமின் திட்டங்களின் எதிகாலம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது .இந்த ஒரு சூழ்நிலையில் புதிய அணு மின் நிலையங்களை விரைவாக அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் ஒரே நாடு இந்தியாதான் .16-04-2011 அன்று பாரத பிரதமர் மன்மோகன் சிங் கஜகஸ்தான் நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளார் .மகாராஷ்டிர மாநிலம் ஜைதாபூரில் நிலநடுக்க ஆபத்து நிறைந்த பகுதியில் பத்து அணுமின் நிலையங்கள் அமைக்க வழங்கப்பட்டுள்ள சுற்று சூழல் அனுமதியை மறு பரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய சுற்று சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இரு நாட்களுக்கு முன் கூறியுள்ளார் .கூடங்குளத்தில் சுனாமி ஆபத்து நிறைந்த கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இரண்டு அணு உலைகள் போக மேலும் இரு அணு உலைகளுக்கான பணிகள் மக்கள் எதிர்ப்பையும் மீறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது .உலக நாடுகள் அனைத்தும் அணு சக்தி திட்டங்களை மறு பரிசீலனை செய்து வரும் வேளையில் மரபு சார எரி சக்தி வளங்கள் நிறைந்த இந்தியாவில் மத்திய அரசு அணு சக்தி திட்டங்களில் ஆர்வம் காட்டி வருவது சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது .

08 ஏப்ரல் 2011

ஜப்பான் உணவுப்பொருட்களுக்கு தடை நீக்கம் !இந்தியா திடீர் முடிவு!

ஜப்பானில் அணு உலைக் கதிர்வீச்சினால் உணவுப்பொருள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று இந்தியா ஜப்பானிலிருந்து உணவுப்பண்டங்களை இறக்குமதி செய்யத் தடை விதித்திருந்தது. தற்போது திடீரென அந்தத் தடையை திரும்பபெற்றது இந்திய அரசு.

சீனா, தைவான், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜப்பானின் பாதிக்கப்பட்ட அணு உலை இருக்கும் பகுதிகளிலிருந்து வரும் உணவுப்பொருட்களுக்குத் தடை விதித்தது.

இதனையடுத்து இந்தியாவும் 3 மாதகால தடை விதித்திருந்தது. இப்போது "கதிர்வீசு பாதிப்பு இல்லை" என்ற சான்றிதழ் கொடுத்து இந்தியாவுக்கு உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யலாம் என்று இந்திய வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.

"ஒவ்வொரு வாரமும் அங்குள்ள நிலைமைகளை பரிசீலனை செய்து அதன் பிறகு முடிவு எடுக்கப்படும். தற்போது ஒட்டுமொத்த தடை தேவையில்லை" என்று வணிகத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் உள்ள புகுஷிமா டாய்ச்சி அணு உலையில் சுனாமி மற்றும் பூகம்பம் காரணமாக் மின்தடை ஏற்பட்டு அணு உலை குளிரூட்டும் வசதிகள் முற்றிலும் பழுதடைந்தன. இதனால் கதிர்வீச்சு கடல் நீரிலும், ஏன் நிலத்தடி நீரிலும் கூட பாய்ந்திருப்பதாக செய்திகள் வெளியானதால் பல நாடுகள் ஜப்பானிலிருந்து உணவுப்பொருள், பழங்கள் இறக்கு மதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

கதிர்வீச்சு உணவினால் புற்று நோய் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த ஒரு நாடும் ஜப்பான் உணவுப்பொருட்களுக்கு தடையை நீக்காத நிலையில் இந்தியா மட்டும் நீக்கியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது .


                              -நன்றி வெப் துனியா.

05 ஏப்ரல் 2011

ஜப்பான் பள்ளிக்கூடங்களில் கதிரியக்க ஆய்வு

      கடந்த 11-03-2011 ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமியால் அங்குள்ள புகுஷிமா அணு உலைகள் வெடித்து சிதறியது.அணு உலைகள் சேதமடைந்து பல நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் அதை கட்டுப்படுத்தும் முயற்சியில் பின்னடைவுகளே ஏற்பட்டு வருகின்றன.அணு உலையிலிருந்த30கிலோமீட்டர்தொலைவிலுள்ளமக்கள்வெளியேற்றப்பட்டு
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர் .இருந்தாலும் 30 கி.மீ.க்கு அப்பால் வசிக்கும் மக்களிடமும் கதிரியக்கம் குறித்த கவலை ஏற்பட்டுள்ளது .அதிலும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் மழலை செல்வங்கள் குறித்து மிகுந்த கவலை அடைந்துள்ளனர் .இதன் காரணமாக ஜப்பானில் உள்ள 1400 பள்ளிகளில் கடந்த இரண்டு நாட்களாக கதிரியக்க ஆய்வுகள்நடந்து வருகின்றன .
   
      கதிரியக்க பாதிப்புகளை குறைக்கும் முயற்சிகளில் பெரும் பின்னடைவாக 7 லட்சம் மடங்கு கதிரியக்கம் மிகுந்த அணு உலைக்குள் தேங்கியிருந்த 12000 டன் நீர் கடலில் திறந்து விடப்பட்டுள்ளது .வேறு வழி இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்க நேர்ந்ததாக ஜப்பான் அரசின் உயரதிகாரி யூகியோ எடானோ தெரிவித்துள்ளார்.இந்த ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளமைக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .இதன் மூலமாக அடுத்த சில நாட்களில் மக்கள் வெளியேற்றம் மேலும் பல தூரத்திற்கு அதிகரிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது .

        இதனிடையே நிவாரண முகாம்களுக்கும் மருத்துவ மனைகளுக்கும் புதிதாக வருபவர்கள் தங்கள் உடலில் கதிரியக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால் மக்கள் பெரிதும் கலக்கமடைந்துள்ளனர்.திக்கற்றவர்களுக்கு தெய்வம்தானே துணை .நல்ல மனம் கொண்ட ஜப்பான் மக்கள் அனைவரும் துயரங்களிலிருந்து உடனே விடுபட இறைவனை பிரார்த்திப்போம்.