05 ஆகஸ்ட் 2011

கட்டப் பட இருக்கும் உலகின் மிக உயர்ந்த கட்டிடம் : ருசிகர தகவல்கள் .

உலகின் மிக உயர்ந்த கட்டிடம் என்ற பெருமையை இது வரை துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலிஃபா என்ற கட்டிடம் இது வரை தக்க வைத்துக் கொண்டுள்ளது .

ஆனால் அதன் பெருமை தற்போது முறியடிக்கப் பட உள்ளது .சவூதி அரேபியாவிலுள்ள ஜெட்டா நகரத்தில் 1000  மீட்டர் (1  கிலோ மீட்டர் ) உயரத்தில் கிங்டம் டவர் என்ற கட்டிடம் கட்ட வேலைகள் தொடங்கிவிட்டன .

04 ஆகஸ்ட் 2011

சட்ட விரோத பார்க்கிங் : உலகைக் கவர்ந்த மேயரின் அதிரடி -வீடியோ

லித்துவேனியா  நாட்டின் வில்னியஸ் நகரத்திற்கு இரண்டாவது முறையாக தொடர்ந்து மேயராக தேர்ந்தெடுக்கப்  பட்டவர் அர்ச்சூராஸ் சுவாக்கஸ் .

நகர் சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள பகுதிகளில் கார்கள் பார்கிங் செய்யப் படுவதாக அவருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன .

பார்கிங் செய்பவர்களை தகுந்த அதிகாரிகள் மூலமாக எச்சரித்தார் மேயர்.ஆனால் பார்கிங் செய்பவர்கள் பெரும் பணக்காரர்களாக      இருந்தார்கள். அவர்கள் அதிகாரிகளின் எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை .

இதனால் ஆத்திரமடைந்த மேயர் தானே களத்தில் இறங்கினார் .ராணுவ டேன்க் ஒன்றை எடுத்து ஓட்டி வந்து சட்டத்திற்கு புறம்பாக நிறுத்தப் பட்ட கார்கள் அனைத்தையும் சிதைத்தார் .மேலும் அதனால் ரோட்டில் சிதறிய கண்ணாடித் துண்டுகளையும் தானே சுத்தம் செய்தார் .

மேயரின் அதிரடி கீழே .

02 ஆகஸ்ட் 2011

உங்கள் உடலைப் பற்றி நீங்கள் இது வரை அறியாத 10 உண்மைகள் !

THANKS: MEN'S FITNESS

மனித உடலைப் பற்றி உலகம் முழுவதும் பல்வேறு நிபுணர்கள் ஆராய்ந்த  ஆராய்ச்சிகளின் சமீபத்திய முடிவுகள் இவை .

01 ஆகஸ்ட் 2011

மனித மூளையின் முழுத்திறன் இவ்வளவுதான் : அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவு

மனிதனின் சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவும் வியப்பின் விளிம்பிற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன .இதற்கு  காரணம் மனித மூளையின் சக்திதான் .

இதற்கு முன் மனித மூளை பற்றி ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் பலர் திறமையற்ற  மனிதர்கள் தனது மூளையின் சக்தியில் குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்துவதாகவும் திறமையானவர்கள் (விஞ்ஞானிகள் போன்றோர்)  தங்கள் மூளையின் ஆற்றலை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறியிருந்தார்கள் .


ஆனால் சமீபத்திய ஆராய்சிகள் மனித மூளை பற்றி ஓர் அதிச்சி கலந்த உண்மையை கூறுகிறது .

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஒவ்வொரு மனிதனும் தனது மூளையை 100 % பயன்படுத்துகிறான் எனவும் மனித மூளையின் சக்தி இவ்வளவுதான் எனவும் கூறியுள்ளார்கள் .

நரம்பு உயிரியல் பேராசிரியர்" சைமன் லாலின்"  மூளை சிறப்பான வடிவத்தை பெறுவதற்கும் திறமையாக செயல் படுத்துவதற்கும் தகுந்த ஆற்றல் தேவை என்றும்  மனிதனால் தனது மூளையை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் செயல் படுத்த முடியாது என்றும் கூறுகிறார் .

மூளையின் வெவ்வேறு பகுதிகள் இழைகளால் இணைக்கப் பட்டுள்ளதாகவும் மிகுந்த அறிவாளிகள்  மூளையில்  இந்த இணைப்புகள் சிறப்பாக உள்ளதாகவும் குறைவான அறிவுடையவர்களுக்கு இந்த இணைப்பு சிறப்பாக இல்லாமல் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் .


கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் உளவியல் துறை  பேராசிரியர் "எட் புல்மோர்" கூறுகையில் மிகுந்த அறிவாளிகளுக்கு மூளையில் இழைகள் சிறப்பான இணைப்பை கொண்டிருப்பதால்  கட்டளைகள் உடனடியாக மூளையின் பிற பகுதிகளுக்கு அனுப்பப் படுவதாகவும் இந்த இணைப்பு சிறப்பாக அமையப் பெறாதவர்கள் மூளையில் கட்டளைகள் மிக மெதுவாக  பரிமாற்றம் செய்யப் படுவதாகவும் கூறுகிறார் .


சிறந்த மூளைத் தொகுப்பிற்கும் சிறந்த நுண்ணறிவு திறனுக்கும்  (IQ ) நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார் இவர் .

இவர்கள் ஆராய்ச்சியில் ஆறுதல் தரும் விஷயம் உடலின் சக்தியை அதிகரிப்பதன் மூலம் மூளையின் ஆற்றலும் அதிகரிக்கும் என்பதுதான் .

இதைத்தான்  நம்மவர்கள் "சுவரில்லாமல் சித்திரம் இல்லை" என்று சொல்லியிருப்பார்களோ .

நன்றி : Dailymail ,UK.

புலிக் குட்டிக்கு புட்டிப்பால் கொடுக்கும் குரங்கு : அதிசய காணொளி

நன்றி : த டெலிகிராப் ,யு .கே .
தாய்லாந்து  நாட்டின் தலைநகர் பாங்காக்கிலிருந்து 30  கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த மிருக காட்சி சாலை .