அனேக சமயங்களில் நாம் புதிதாக சிம்கார்டு வாங்கும்போது நாம் நினைப்பதுபோல்
எண்கள் கிடைப்பதில்லை .மேலும் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம்கார்டுகளைப்
பயன்படுத்துவதுண்டு. புதிய சிம்கார்டின் எண்ணானது ஏற்கெனவே இருக்கும்
சிம்கார்டின் எண்ணை சற்று ஒத்திருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கலாம் .
இதற்கு வசதியாக நமது மொபைல் நம்பரை நாமே ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யும்
வசதியை BSNL வழங்குகிறது. இந்த லிங்க்கில் சென்று உங்கள் மாநிலத்தை தேர்வு
செய்யுங்கள் . உங்கள் மாநிலதிற்குரிய தளம் திறந்ததும் படத்தில்
குறிப்பிட்டுள்ள இடத்தில டிராக் செய்து தளத்தை அன்லாக் செய்துகொள்ளுங்கள் .
இப்போது உங்களுக்கு சில மொபைல் எண்கள் காட்டப்படலாம் .அவற்றில் ஏதாவது
பிடித்திருப்பின் அதை டிக் செய்து RESERVE NUMBER என்பதை கிளிக்
செய்யுங்கள் .அடுத்து வரும் கட்டளைகளை பின்பற்றுவதன் மூலம் உங்களுக்கு ஒரு
பின் நம்பர் கிடைக்கும் .
அந்த எண்ணை பத்திரமாக குறித்து வைத்துக்கொண்டு 48
மணி நேரத்திற்குள்ளாக உங்களுக்கு அருகாமையில் உள்ள BSNL அலுவலகத்திற்கு
சென்று சிம் கார்டை பெற்றுக்கொள்ளலாம்.
நீங்கள் விரும்பும் எண்ணை தேர்வு
செய்ய தளத்தில் இருக்கும் SEARCH வழிமுறையை பின்பற்றலாம் .
FANCY எண்கள் தேவைப்பட்டால் அதற்குரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
3 கருத்துகள்:
பயனுள்ள தகவல்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
பாஸ் இத அடையாள அட்டை பற்றி மத்திய அரசு கொண்டு வந்த கெடுபிடி சட்டம் வருவதற்கு முன்னால் கூறி இருந்தால் பலருக்கு பயன் பெற்று இருக்கும்....
இப்ப போய் new sim கேட்ட தர முடியாது-னு சொல்லுறானுக பாஸ் :(
நல்ல தகவல்! நன்றி!
கருத்துரையிடுக