18 டிசம்பர் 2012

உங்கள் PENDRIVE ல் கோப்புகளை காண முடியவில்லையா ?

சில சமயங்களில் நாம் உபயோகிக்கும் PENDRIVE  மற்றும் மெமரி கார்டுகளில் இது போன்ற பிரச்சினை ஏற்படுவதுண்டு. கோப்புகள் எதுவும் அழிக்கப் பட்டிருக்காது ஆனால் DRIVE  ஐ திறந்தால்  எதுவுமே தெரியாது. அல்லது குறிப்பிட்ட சில கோப்புகள் தெரியாது. HIDDEN FILE ஆகவும் அவை இருக்காது . ஆனால் DRIVE  ஐ மவுசால் வலதுபுறம் கிளிக் செய்து PROPERTIES  கிளிக் செய்தால் இத்தனை GB இதில் உள்ளது என காண்பிக்கும். 



இது போன்ற பிரச்சினைகளிலிருந்து  கோப்புகளை மீட்டெடுக்க பல்வேறு மென்பொருட்கள் உள்ளன . எனினும் அவற்றால்கூட சில சமயங்களில் மீட்டெடுக்க முடியாமல் போகலாம். இப்பிரச்சினையை சரி செய்ய ஒரு எளிய வழி உள்ளது . 


முதலில் பிரசினைக்குள்ளான  DRIVE  ஐ மவுசால் RIGHT கிளிக் செய்து படத்தில் காண்பிக்கப் பட்டுள்ளவாறு Add to archive என்பதை தேர்ந்துடுக்கவும் .

இப்போது கீழ் கண்டவாறு ஒரு window  தோன்றும் . அதில் Browse என்பதை கிளிக் செய்தால் மீட்கப் படும் கோப்புகளை சேமிக்கும் இடத்தை தேர்வு செய்யலாம். இனி OK  பட்டனை அழுத்தவேண்டியதுதான் . 


இப்போது காணாமல் போன கோப்புகள் அனைத்தும் ஒரு ZIP  FILE  ஆக கணினியில் சேமிக்கப்படும் . அதிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்கலாம்.

8 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

எளிய விளக்கங்களுடன் அழகிய பதிவு...

நன்றி நண்பரே...

rajamelaiyur சொன்னது…

நல்ல பயனுள்ள தகவல் நன்றி பாலா

rajamelaiyur சொன்னது…

ஆனால் என் pendrive வே காணவில்லை என்ன பண்ணலாம் ?????

கூடல் பாலா சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா அருகில் வசிப்பவர்களிடம் விசாரித்துப் பாருங்கள்...ஹி...ஹி...

பெயரில்லா சொன்னது…

இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

JAMES MAHENDRAN சொன்னது…

this blog is very very useful today only i found and use. lot of stuff to know india thanks bala
james mahendran

JAMES MAHENDRAN சொன்னது…

this blog is very very useful today only i found and use. lot of stuff to know india thanks bala
james mahendran

Unknown சொன்னது…

நல்ல தகவல் பாலா.