1) புதை படிவ எரிபொருள் உபயோகத்தை
கட்டுப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க சக்திகளான காற்றாலை, சூரிய ஓளி
திட்டங்களை செயல்படுத்தலாம். இதனால் கரியமில வாயுவினால் ஏற்படும் பாதிப்பு
வெகுவாக குறைகிறது. வீட்டளவிலும் இதுபோன்ற திட்டங்களை தேவைக்கேற்ப
நிறுவலாம்.மேலும் குறைந்த அளவு மின்சாரமே தேவைப்படும் சிஎப்எல் பல்புகளை
பயன்படுத்தலாம்.
2) குப்பைகளை குறைப்பதால் மீதேன் உள்ளிட்ட
ஆபத்தான வாயுக்களின் வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. ஒவ்வொரு
வீட்டிலிருந்தும் 10 சதவீதம் வரை வாயு வெளியேற்றத்தை குறைக்க முடியும். நம்
வாழ்வியல் முறையில் மாற்றங்கள் கொண்டு வந்து, கூடிய அளவுக்கு மறுசுழற்சி
செய்யலாம். இதனால் தேவைகள் குறைவதோடு அவற்றை தயாரிப்பதற்கான எரிபொருளும்,
சக்தியும் பாதுகாக்கப்படுகின்றன.
3)ஒவ்வொரு முறை தண்ணீரை சுத்திகரிக்கும்
போதும், விநியோகிக்கும் போதும் அதிகளவில் ஆற்றல் வீணடிக்கப்படுகிறது.
சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துவதோடு, சேமிக்கும் வழிகளையும்
யோசிக்கலாம்..மழை நீரை சேமிப்பதில் அனைவரும் ஆர்வம் காட்டினால் வியத்தகு
மாற்றங்கள் ஏற்படும்.
4)வீடுகளை வெப்பத்திலிருந்து
காத்துக்கொள்ள, சுவர்களுக்கு பாதுகாப்பு பூச்சு, ஜன்னல்களுக்கு பருவநிலை
காக்கும் கண்ணாடி என பல நவீன அம்சங்களை சேர்த்துக்கொள்ளலாம்.இதன் காரணமாக
அதிக வெப்பத்தை வெளியேற்றும் குளிர்சாதன கருவிகளை எல்லா நேரங்களிலும்
உபயோகிப்பதை தவிர்க்கலாம்.
5) அருகாமையிலுள்ள இடங்களுக்கு நடந்தோ,
மிதிவண்டியிலோ செல்லலாம். தேவைப்படும் நேரங்களில் பொதுப் போக்குவரத்தை
பயன்படுத்த எண்ணலாம். வாகனத்தை இயக்குவதாக இருந்தாலும், அது நல்ல நிலையில்
இருக்கிறதா என்பதை உறுதி செய்யவேண்டும். வாகனங்களாலும் அதிகளவில் எரிபொருள்
வீணடிக்கப்படலாம்.
6) தேவைப்படும் நேரங்களை தவிர பிற நேரங்களில் மின்சாரம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
7) பல வகை மாசினால் மூச்சு திணறி
கொண்டிருக்கும் பூமிக்கு பிராணவாயுவை கூட்டவும், ஏற்படுத்தப்பட்டுள்ள
பாதிப்புகளிலிருந்து நம்மை பெருமளவு காப்பாற்றவும் தேவைப்படுவது
மரங்கள்.நிழல் தரும் மரங்கள் வளர்ந்தால், பூமி சற்றே இளைப்பாறும்.
3 கருத்துகள்:
நல்லது...
நாம் பூமிக்கு பாதகம் செய்யாமல் இருந்தாலே போதும்...
நிழல் தரும் மரங்கள் வளர்ந்தால், பூமி சற்றே இளைப்பாறும்.
பூமிக்குப் பரிசாய் மரங்கள் தரும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
நல்ல பதிவு நண்பரே
கருத்துரையிடுக