18 ஜூலை 2013

குவாட்டரை விரும்பி சுவைக்கும் கொசுக்கள்!

நான் சிறு வயதாக இருந்தபோதெல்லாம் கொசு என்றொரு உயிரினத்தை எங்கள் ஊரில் உண்மையிலேயே பார்த்ததில்லை. 

ஆனாலும் நெல்லை போன்ற நகரங்களுக்கு செல்கையில் அங்கு அப்பொழுதே mosquito bat (விளக்குமாறு) சிலர் கொசுக்களை விரட்ட உபயோகிப்பதைப் பார்த்திருக்கிறேன். 


ஆனால் இப்போது பாரபட்சமின்றி அனைத்து இடங்களிலும் கொசுக்கள் தங்கள் கைவரிசையைக் காண்பித்து வருகின்றன. 

பொதுவாக கொசுக்கள் சில குறிப்பிட்ட வகையினரை மட்டும் அதிகமாக தாக்குவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன (எதிர்க்கட்சி சதியெல்லாம் இல்லை) இப்போது கொசுக்களின் தாக்குதலுக்கு அதிகம் ஆட்படும் ஐந்து பிரிவினரை பார்ப்போம்.

1)  மது அருந்துபவர்கள் :

வாய்யா வாய்யா என் டாஸ்மாக் தங்கம். 2011 ல் நடத்தப்பட்ட ஒரு பிரெஞ்சு ஆய்வின்படி மது அருந்துபவர்கள் இரத்தத்தை கொசுக்கள் மிகவும் விரும்பி குடிக்கிறதாம். மது அருந்தாதவர்களை விட மது அருந்துபவர்கள் 30% அதிகம்  கொசுக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறார்களாம். 

2) குண்டாக இருப்பவர்கள்:

கொசுக்களின் அடுத்த இலக்கு கொளுத்த சரீரம் உடையவர்கள் . கொசுக்களுக்கு எப்பொழுதுமே கார்பன் டை ஆக்சைடு மீது ஒரு ஈர்ப்பு உண்டு . கொளுத்த சரீரம் உடையவர்கள் மீதிருந்து வெளியாகும் அதிகப்படியான உஷ்ணம் மற்றும் கார்பன் டை ஆக்சைடு கொசுக்களை அதிகம் ஏற்பதாக Annals of Internal Medicine என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

3) உடற்பயிற்சி செய்பவர்கள்:

"இது என்னடா கொடுமையா இருக்குது" என்று நாம் நினைக்கலாம். நல்ல உடற்பயிற்சி செய்பவர்கள் உடலிலுள்ள வெப்ப ஈர்ப்பு, அவர்கள் உடலில் இருந்து வெளியாகும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு மற்றும் அவர்கள் உடலிலுள்ள  லாக்டிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் உடற்பயிற்சி செய்பவர்களை கொசுக்களுக்கு அடையாளம் காட்டுவதாக Susan Paskewitz என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார்.

4) இரத்த வகைகள்:

பிளட் குரூப்பை நாமெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு கண்டு பிடிக்கிறோம். ஆனால் கொசுக்கள் எப்படித்தான் கண்டுபிடிக்கிறதோ தெரியவில்லை . 83% கொசுக்கள் "O " குரூப் இரத்தம் இருப்பவர்களைக் கண்டால் அங்கிருந்து நகராது  என்று கூறுகிறது ஆராய்ச்சி முடிவு. எப்படித்தான் கண்டு பிடிக்கிறதோ தெரியவில்லை.

5) கர்ப்பிணிப் பெண்கள் : 

அட கொசுக்களே உங்களுக்கு இரக்கமே இல்லையா . கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து வெளியாகும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு மற்றும் அவர்கள் வயிற்றுப்பகுதியிலுள்ள அதிகப்படியான உஷ்ணம் கொசுக்களை அதிகம் ஈர்க்கின்றதாம். சாதாரண பெண்களை விட கர்பிணிப் பெண்கள் இருமடங்கு அதிகம் கொசுக்களின் தாக்குதலுக்கு உள்ளாவதாகக் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

நன்றி: The Week

8 கருத்துகள்:

வெற்றிவேல் சொன்னது…

பயனுள்ள தகவல்...

அமுதா கிருஷ்ணா சொன்னது…

ஆஹா சூப்பர் கண்டுபிடிப்பு..

என்னை கொசு கடிப்பது இல்லை. என் வீட்டில் உன் ரத்ததில் விஷம் இருக்கு என்று கிண்டல் செய்வார்கள். இதுவா விஷயம்..சூப்பர்.

கூடல் பாலா சொன்னது…

@அமுதா கிருஷ்ணா கொசு எல்லாம் சேர்ந்து உங்களை கடிக்க வேற ஏதாவது பிளான் இருக்குதான்னு யோசிச்சிகிட்டிருக்கும்.....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

"O " குரூப் என்றால் நகராதது சரி தான்... இணைப்புகளுக்கும் நன்றி...

சூனிய விகடன் சொன்னது…

மொத்தத்துல கொசுத்தொந்தரவு தாங்க முடியல....அதானே விஷயம்

சக்தி கல்வி மையம் சொன்னது…

தகவலுக்கு நன்றி..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அட கொசுக்களில் இத்தனை வகை இருக்கா ?!

தெருவுல மருந்தடிச்சி எல்லாக் கொசுவையும் வீட்டுக்குள்ளே தூரத்துரவிங்களை கொசு கடிக்குமா கடிக்காதா?

கூடல் பாலா சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ கொசுக்களுக்கு மோப்ப சக்தி இருக்கிற அளவுக்கு இன்னும் சிந்திக்கிற சக்தி வளரலைன்னு நினைக்கிறேன்...