07 ஜூலை 2011

அதி பயங்கர புழுதி புயல் : காணொளி

கடந்த 5-7-2011 அன்று அமெரிக்காவில் அமைந்துள்ள போனிக்ஸ் நகரத்தை அதி பயங்கர புழுதி புயல் தாக்கியது .


60 மைல் அகலத்தையும் 1 மைல் உயரமும் கொண்ட இந்த புழுதி புயல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் அந்நகரை தாக்கியது .

ஆங்கில படங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு சவால் விடும் வகையில் அதன் தாக்குதல் அமைந்திருந்தது .

எமனுக்கே அல்வா !

தள்ளாத வயதுடைய பாட்டி ஒருத்தி காட்டின் வழியாக விறகுக்கட்டை சுமந்தபடி காலாற நடந்து வந்து கொண்டிருந்தாள் .

உச்சி வெயிலின் தாக்கத்தால் நாக்கு வறண்டது,கரடு முரடான பாதையில்  கால்கள் தளர்ந்தன .மேற்கொண்டு ஒரு அடி கூட நகர முடியாததால் விறகுக்கட்டை கீழே போட்டுவிட்டு அங்கேயே உட்கார்ந்து விட்டாள்.

வெறுப்படைந்த பாட்டி புலம்ப ஆரம்பித்தாள்."கடவுளே ஏம்பா என்னிய இப்படி சோதிக்கிற ,அய்யா எமதர்ம ராசா இந்த கட்டைய இப்பவே எடுத்துட்டு போயிட்டியன்னா நல்லா இருப்பே" .

உடனே எமன் பாட்டி முன் தோன்றினான் .பாட்டியின் கழுத்தில் பாசக்கயிறை வீசினான் ."பாட்டி கெளம்பு" .

பாட்டி "அய்யா நீதான் எம தர்ம ராசாவா"

"நானேதான் "எமன் 

"சரி இப்போ எதுக்கு இந்த கயிற என்கழுத்துல வீசுன "
 
குழப்பமடைந்த எமன் "என்ன பாட்டி சொல்ற நீதானே உன்னோட உயிரை எடுக்க சொல்லி என்னிய கூப்பிட்ட "

"நான் உயிரை எடுக்க சொன்னேனா ? இந்த விறகு கட்டை 
வீடு வரைக்கும் எடுத்து வர சொல்லித்தான் உன்னை கூப்பிட்டேன் "குண்டை தூக்கி போட்டாள் பாட்டி

"என்ன பாட்டி குழப்புகிறாய்"

"நான் குழப்பல ராசா நீதான் குழம்பிட்டே ..நீ உண்மையிலே தர்ம ராசாவா இருந்தா இந்த விறகு கட்டை  என்னோட வீட்டுல கொண்டு சேர்த்திடு "

வேறு வழி இல்லாத எமன் விறகுக்கட்டுடன் பாட்டி வீட்டை நோக்கி நடந்தான் .

06 ஜூலை 2011

ராகுலின் பொது அறிவு

காங்கிரஸ் கட்ச்சியின் அடி மட்டத் தொண்டரிலிருந்து நாட்டை ஆளும் பிரதமர் வரை அனைவரும் அடிக்கடி சொல்லும் மந்திரம் அடுத்த பிரதமர் ராகுல். சமீபத்தில் பிரதமரும் காங்கிரசின் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கும் ராகுலுக்கு பிரதமராவதற்கு எல்லா தகுதியும் உண்டு என்று கூறினார்கள் .


கீழ் காணும் வீடியோவை பாருங்கள் .ராகுலின் பொது அறிவு எத்தகையது என்பதும் அவருக்கு பிரதமருக்கான தகுதி உள்ளதா என்பதும் தெரியும்  .




சமீபத்தில் அகமதாபாத்தில் உள்ள பைக்காகா கூடத்தில் தொழில் வல்லுனர்களிடம் கலந்துரையாடியபோது கூறிய கருத்துக்கள் இவை .

ராகுல் : யுனைடட் கிங்டம் ஐ விட குஜராத் பெரியது 

உண்மை நிலவரம் :ராகுல் கூறியது தவறு .யுனைடட் கிங்டம் ன் புவியியல் பரப்பு 245.000 சதுர கிலோமீட்டர் .குஜராத்தின் பரப்பளவோ 196024 சதுர கிமீ தான் .
 
ராகுல் :அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஒன்றாக சேர்ந்தாலும் அதை விட இந்தியா பெரியது.

உண்மை நிலவரம் :ராகுல் கூறியது தவறு .அமெரிக்காவின் மொத்த பரப்பு  9,631,418 சதுர கிமீ.ஐரோப்பாவின் பரப்பு 1,20,00000 சதுர கிமீ .ஆனால் இந்தியாவின் பரப்பளவோ 3,287,263 சதுர கிமீ தான்.

இதை வைத்துதான் காங்கிரஸ் ராகுலை அடுத்த பிரதமர் என்கிறது .ஒரு வேளை எதுவும் தெரியாமல் இருப்பதுதான் பிரதமருக்கான தகுதி என காங்கிரஸ் எண்ணுகிறதோ என்னவோ .

கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே !

இது போன்ற  பல பழமொழிகளை நாம் அடிக்கடி உபயோகிக்கிறோம் .ஆனால் இவை பலரால் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது .
 
 1 .பகையாளி வீட்டை உறவாடிக்கெடு
 
இதை மேலோட்டமாக பார்த்தால் நமது முன்னோர்கள் ஒரு டெரரான  பாதையை  நமக்கு காண்பிப்பது போல் தோன்றும் .இந்த பழமொழியின் உண்மையான பொருள் என்னவென்றால் பகையாளியிடம் நாம் உறவாடினால் நாளடைவில் அவர்களும் நம்மிடம் உறவாட ஆரம்பித்து அந்த பகை கெட்டுப்போகும் என்பதுதான் .
 
டிஸ்கி :அளவுக்கதிகமாக பகையாளியிடம் உறவாடினால் இவன் ரொம்ப நல்லவனா இருக்கான்னு நெனச்சி அளவுக்கதிகமாக அடிக்கவும் வாய்ப்புள்ளது .
 
2 .ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்
 
மேலோட்டமாக பார்த்தால் இது முரண்பாடு நிறைந்ததாக தோன்றும் .அதெப்படி அடுத்த வீட்டு பிள்ளையை ஊட்டினால் நம் பிள்ளைக்கு சாப்பாடு போடவேண்டிய அவசியம் இல்லையா .?
இதன் உண்மையான பொருள் வேறு .இது புது மாப்பிள்ளைகளுக்காக வகுக்கப்பட்ட பழமொழி .இங்கு ஊரார் பிள்ளை என்று மனைவியை குறிப்பிடுகிறார்கள் .கட்டிய மனைவிக்கு சத்தான உணவுகளை கொடுத்தால் அவள் வயிற்றில் இருக்கும் தனது பிள்ளை நன்கு வளரும் என்பதே கணவனுக்கு கூறப்படும் அறிவுரை .
 
டிஸ்கி : நம்மாளு ஒருத்தர் பக்கத்து வீட்டு பையன் ஊட்டியில உள்ள பாட்டி வீட்டுல வளருறதுனால அவரோட பையனுக்கு சரியா சாப்பாடே போடுறதில்ல.மிஸ் அண்டர்ஸ்டேன்டிங் 
 
3 .கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே  

அப்படீன்னா வீட்டு சாவியை கள்ளன்கிட்ட கொடுக்கலாம் .பக்கத்து வீட்டுக்காரன் குள்ளமாக இருந்தால் அவனிடம் கொடுக்கக்கூடாதா
இது பாகவதத்துல உள்ள கதைங்க .இங்கே கள்ளன் என அழைக்கப்படுபவர் கண்ணன் .கண்ணனை நம்பியவர்கள் அனைவரும் நன்மையே அடைந்தார்கள். குள்ளன் என்பது வாமனனை.மன்னன் மகாபலி மூன்றடி மண்தானே என்று குள்ளமாக இருந்த வாமனனை  மெத்தனமாக எண்ணியதால் ஆட்ச்சியை இழக்க நேரிட்டது .

 
டிஸ்கி : குள்ளர்களாக இருப்பவர்களிடம் உயரமானவர்களை விட ஏதோ ? ஒரு திறமை  இருப்பதாக மட்டும் பலர் சொல்கிறார்கள் .

05 ஜூலை 2011

வந்துவிட்டது avast antivirus ன் புதிய பதிப்பு !

இலவச antivirus program களில் சிறந்ததாக உலகில் அதிகம்பேரால் கருதப்படும் avast antivirus ன் புதிய பதிப்பு 6.0.1203 வெளி  வந்துள்ளது  .
பணம் கொடுத்து வாங்கப்படும் வைரஸ்  எதிர்ப்பு மென்பொருட்களுக்கு இணையாக இது செயல்படுகிறது .

ஒருமுறை இதை பயன்படுத்தியவர்கள் பிற மென்பொருட்களுக்கு மாற விரும்பமாட்டார்கள் .
இணைய தளம் வாயிலாக மற்றும் removable flash drive கள் மூலமாக பரவுகின்ற வைரஸ்கள் ,மால்வேர்களை எதிர்த்து நன்கு போரிடுகிறது .

உபயோகிக்க விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள் .


டிஸ்கி : அதிகம் புகழ்வதனால் avast நிறுவனத்தின் பிரதிநிதியாக என்னை கருதவேண்டாம் .பயன்படுத்தி பார்த்ததால் சொல்கிறேன் .