07 ஜூலை 2011

எமனுக்கே அல்வா !

தள்ளாத வயதுடைய பாட்டி ஒருத்தி காட்டின் வழியாக விறகுக்கட்டை சுமந்தபடி காலாற நடந்து வந்து கொண்டிருந்தாள் .

உச்சி வெயிலின் தாக்கத்தால் நாக்கு வறண்டது,கரடு முரடான பாதையில்  கால்கள் தளர்ந்தன .மேற்கொண்டு ஒரு அடி கூட நகர முடியாததால் விறகுக்கட்டை கீழே போட்டுவிட்டு அங்கேயே உட்கார்ந்து விட்டாள்.

வெறுப்படைந்த பாட்டி புலம்ப ஆரம்பித்தாள்."கடவுளே ஏம்பா என்னிய இப்படி சோதிக்கிற ,அய்யா எமதர்ம ராசா இந்த கட்டைய இப்பவே எடுத்துட்டு போயிட்டியன்னா நல்லா இருப்பே" .

உடனே எமன் பாட்டி முன் தோன்றினான் .பாட்டியின் கழுத்தில் பாசக்கயிறை வீசினான் ."பாட்டி கெளம்பு" .

பாட்டி "அய்யா நீதான் எம தர்ம ராசாவா"

"நானேதான் "எமன் 

"சரி இப்போ எதுக்கு இந்த கயிற என்கழுத்துல வீசுன "
 
குழப்பமடைந்த எமன் "என்ன பாட்டி சொல்ற நீதானே உன்னோட உயிரை எடுக்க சொல்லி என்னிய கூப்பிட்ட "

"நான் உயிரை எடுக்க சொன்னேனா ? இந்த விறகு கட்டை 
வீடு வரைக்கும் எடுத்து வர சொல்லித்தான் உன்னை கூப்பிட்டேன் "குண்டை தூக்கி போட்டாள் பாட்டி

"என்ன பாட்டி குழப்புகிறாய்"

"நான் குழப்பல ராசா நீதான் குழம்பிட்டே ..நீ உண்மையிலே தர்ம ராசாவா இருந்தா இந்த விறகு கட்டை  என்னோட வீட்டுல கொண்டு சேர்த்திடு "

வேறு வழி இல்லாத எமன் விறகுக்கட்டுடன் பாட்டி வீட்டை நோக்கி நடந்தான் .

13 கருத்துகள்:

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

haa.ha...
asaththal karpanai..
innum sirichchutte irukken..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஆ... ராசா கதையா?

koodal bala சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *! siringa ....siringa ...sirichchukkitte irunga ..

koodal bala சொன்னது…

@சி.பி.செந்தில்குமார் பாட்டி கதை ...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹா ஹா ஹா ஹா சிரிச்சி முடியல......!!!

Arun Kumar சொன்னது…

அருமை அருமை அருமை

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எமன் பாட்டியிடம் வாங்கிய பல்பு'ன்னு தலைப்பு வச்சிருக்கலாம் ஹே ஹே ஹே ஹே....!!

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

நல்ல காமெடி ...வலைசரத்தில் இன்று ...
கண்ணை நம்பாதே

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

ஹா ...ஹா ...ஹா ...ஹா ...ஹா ...ஹா ...வலைசரத்தில் இன்று ...
கண்ணை நம்பாதே

ரியாஸ் அஹமது சொன்னது…

ஹா ...ஹா ...ஹா

நிரூபன் சொன்னது…

ஆஹா....சமயோசிதமான பாட்டி. டைம்மிங் பஞ்ச் வசனம் பேசி, எமனுக்கே அல்வா கொடுத்திருக்கா.

மகேந்திரன் சொன்னது…

சமயோசித புத்தியுடன் கூடிய
அருமையான நகைச்சுவை

Mahan.Thamesh சொன்னது…

பாட்டி வித்தியாசமாத்தான் திங் பண்ணியிருக்காங்க
எமனுக்கே அல்வாவ