ஜப்பான் அணு உலைகளில் ஏற்பட்ட விபத்து சர்வதேச அணு விஞ்ஞானிகளின் எண்ணங்களை தவிடுபொடியாக்கிவிட்டது . காரணம் உலக வல்லரசுகளில் ஒன்றான, இதுவரை அணு விபத்துக்களையே சந்தித்திராத, அணு உலை கட்டுமானத்தில் பெயர் பெற்ற ஒரு நாட்டில் இது நிகழ்ந்ததுதான் நிலநடுக்கமும் சுனாமியும் அடிக்கடி நிகழும் நாடு என்பதால் வேறு எந்த ஒரு நாடுகளையும் விட அணு உலைகளை மிக பாதுகாப்பாக அங்கு அமைத்திருந்தார்கள் .ஆனால் இயற்கையை வெல்ல எந்த ஒரு விஞ்ஞானியாலும் முடியாது என்பதை நிரூபித்துள்ளது தற்போது நிகழ்ந்துள்ள அசம்பாவிதம் .இதன் மூலம் மேலும் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது

இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குனர் திரு .காசிநாத் பாலாஜி அவர்கள் நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் ஜப்பானை போல் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எந்த பாதிப்பும் வராது என்று கூறியுள்ளார் .பாவம் அவரால் வேறு என்ன சொல்ல முடியும் . அவர் அவரது கடமையை செய்துள்ளார் . 4 வருடங்களுக்கு முன் அணுமின் நிலைய இயக்குனராக இருந்த திரு சுனில்குமார் அகர்வால் அவர்கள் அணுமின் நிலையத்தால் எந்த கதிர் வீச்சு பாதிப்பும் ஏற்படாது என்று கூறினார் ஆனால் நல்ல உடல்நிலையில் இருந்த அவர் திடீர் உடல்நல குறைவால் இறந்து போனார் .அவர் எந்த நோயால் இறந்தார் என்பது அணுசக்தி துறையினருக்கே வெளிச்சம் .
கதிர் வீச்சு பாதிப்பு வராது என்று கூறும் அவர்கள் ஊழியர் குடியிருப்பை 8 கி.மீ க்கு அப்பால் கட்டியிருக்கிறார்கள் .atomic energy regulatory board (AERB ) விதிமுறைகளுக்கு உட்பட்டு ஊழியர் குடியிருப்பை கட்டியிருக்கிறோம்
என்று விளக்கம் கூறும் அவர்கள் பொதுமக்கள் விஷயத்தில் மட்டும் விதிமுறைகளுக்கு மாறாக நடந்துகொள்கிறார்கள் .AERB விதிமுறைகளின் படி இல்லாமல் அணு உலை அமையும் இடத்தினருகில் மக்கள்நெருக்கம் பல மடங்கு அதிகமாக உள்ளது .விபத்து நடந்தால் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி ஒரு சிறு விஷயம்கூட இதுவரை மக்களுக்கு தெரிய படுத்த வில்லை .சரி எப்படியோ விதிமுறைகளுக்கு மாறாக நடந்துகொண்டாலும் பாதுகாப்பான அணு உலை அமைக்கிறார்களா என்றால் அதிலும் பல்வேறு
சந்தேகங்கள் எழுகிறது .அணு உலை செயல்படும் முன்பே அங்கு நிகழ்ந்து வரும் விபத்துக்களே சந்தேகத்திற்கு காரணம் .உதாரணமாக ஆறு மாதங்களுக்கு முன்பாக அங்கு நிகழ்ந்த பெரிய தீ விபத்து .அதன் மூலம் சுமார்
100 கோடி அளவிற்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது (இப்ப நடக்கிற ஊழல்ல 100 கோடி யாருக்கு பெருசா தெரியுது) எத்தனை விபத்துக்கள்நடந்தாலும்அவற்றை பத்திரிகைகளிடம் இருந்து காப்பாற்றுவது எப்படி என்பது அவர்களுக்கு
மட்டுமே தெரிந்த ரகசியம் .ஆனால் அதையும் மீறி நல்ல முறையில் அணு உலை அமைத்தாலும் அதற்கு உத்தரவாதம் இல்லை என்பதை ஜப்பான் அணு விபத்து தெளிவாக்கியுள்ளது .

2 கருத்துகள்:
வாழ்த்துக்கள் நண்பர் பாலா....
மிக நல்ல இடுகை மற்றும் நியாயமான பயங்கள். ஆனால், ஜப்பானைப்போல அணு உலை அசம்பாவிதங்களை இந்தியாவால் நிச்சயம் சமாளிக்க முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி! என்ன செய்ய, மின்சாரத் தேவை உயிர்பலிகளில் சென்று முடிந்துவிடும் போலிருக்கிறது!! நல்லதே நடக்கும் என்று நம்புவோம்....
நன்றி, பத்மஹரி
அண்ணாச்சி பாலாஜியை ஜப்பான் அனுப்பி உலையை cool பண்ணச் சொல்லலாம்.
கருத்துரையிடுக