07 செப்டம்பர் 2012

அணு உலையை முற்றுகையிட அழைப்பு.

கூடங்குளம் அணு மின் திட்டத்தைக் கைவிடக் கோரி கடந்த 1  ஆண்டாக இடைவிடாது அறவழிப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன . ஆனால் மத்திய, மாநில அரசுகள் போராட்டத்திற்கு சற்றும் மதிப்பளிக்காமல் அணு உலையை இயக்க தீவிரமாக முயன்று வருகின்றன. 

கூடங்குளத்திலிருந்து  7  கிலோமீட்டர் சுற்றளவுப் பகுதி தொடர்ந்து 6  மாதமாக 144  தடை உத்தரவின் கீழ் உள்ளது. இந்தியாவில் வேறெங்கிலும் இது போன்றதொரு மனித உரிமை மீறல் நடந்திருக்குமா என்பது தெரியவில்லை. 

இதன் காரணமாக போராட்டத்தை அதி தீவிரப் படுத்தும் விதமாக கூடங்குளம் அணு உலையை முற்றுகையிட ஒன்று சேருமாறு பல்வேறு இயக்கங்களுக்கும் ,மனித உரிமை ஆர்வலர்களுக்கும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. 


நேற்று மாலை பல்வேறு ஊர்களிலிருந்தும் பொதுமக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக இடிந்தகரை வரத் தொடங்கினர் .அவர்களை போலீசார் இடிந்தகரை செல்ல விடாமல் தடுத்தனர். உடனடியாக இடிந்தகரையிலிருந்து சுமார் 5000  பேர் போலீசார் தடுத்த இடத்திற்கு வந்தனர். உடனே போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். போலீசார் சாலையில் வைத்திருந்த தடுப்புகளை பொதுமகள் அகற்றினர் .

3 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

மக்கள் சக்தியே மாபெரும் சக்தி இவர்கள் எண்ணங்கள் விரைவில் ஈடேற வேண்டும்.இன்றைய படைபிற்கு தலை வணக்குகின்றேன் .மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் ....

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

இன்குலாப் ஜிந்தாபாத் .

”தளிர் சுரேஷ்” சொன்னது…

இதற்கு ஒரு விடிவு இல்லையா?!

இன்று என் தளத்தில்
காசியும் ராமேஸ்வரமும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html