02 ஜூலை 2011

தமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .

சமீபத்தில் ஜப்பானில் நிகழ்ந்த அணு உலை விபத்தினால் லட்ச்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர் .மேலும் விபத்து பாதிப்பை முற்றிலும் சரி செய்ய பத்து லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என ஜப்பான் அரசு மதிப்பிட்டுள்ளது .
எனவே மின்தேவையை பூர்த்தி செய்ய அணுமின்சாரம் சரியான வழி அல்ல என்றுணர்ந்து பல்வேறு நாடுகள் அணு உலைகளை மூடிவிட்டு  மாற்று வழிகளில் மின்சாரம்  தயாரிக்க  முடிவெடுத்துள்ளன .
இந்நிலையில் தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் கட்டப்பட்டு விரைவில் இயக்கப்பட இருக்கிறது .

கூடங்குளம் கடற்கரையில் அமைந்திருப்பதால் அணு உலையை சுனாமி தாக்கும் ஆபத்துக்கள் அதிகம் .அவ்வாறு சுனாமி தாக்கினால் 30  கிலோமீட்டர் சுற்றளவு பகுதிக்குள் வசிக்கும் மக்களை 24  மணிநேரத்திற்குள் வெளியேற்ற வேண்டியது வரும் .
கூடன்குளத்திலிருந்து 30 கிலோ மீட்டருக்குள் 5  லட்சம் பேருக்கு மேல் வசிக்கிறார்கள் .எனவே விபத்து காலங்களில் மக்களை வெளியேற்றுவது  என்பது இயலாத காரியம் .
வெளியேற்ற முடியாத பட்ச்சத்தில் மக்கள் கதிரியக்க தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளது .
எனவே கூடங்குளத்தில் அணு உலையை மூடிவிட்டு அதே இடத்தில் காற்றாலை ,கடலலை ,சூரியசக்தி போன்ற சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் மின்சாரம்  தயாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 1-7-2011 அன்று கூடங்குளத்தில் ஒரு நாள் உண்ணா விரதம் நடை பெற்றது 

 உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக கூடங்குளம் பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது .
உண்ணாவிரதத்தில் நான் ,டாக்டர் உதய குமார் ,கல்பாக்கம் டாக்டர் புகழேந்தி கலந்துகொண்டோம் .தொகுதி MLA மைகேல் ராயப்பன் சிறிது நேரம் கலந்து கொண்டார் .

7 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தொடர்ந்து விழிப்புணர்வுப்பதிவாகவே போடுவதற்கு வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

பிரச்சனைகள் இருதரப்பிலும் சுமூகமாக முடிந்தால் சரி...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அணுவின் ஆக்கம் இல்லாமல் இனி உலகம் இல்லை..
அணுதான் எதிர்காலத்தில் ஆக்க பூர்வமான சக்தியாக விளங்கப்போகிறது..

ஆனால் பாதுகாப்பு விஷயத்தில் எந்த வித சமாதானத்தையும் எற்க்க முடியாது

பாதுகாப்புதான் முக்கியம்..

சக்தி கல்வி மையம் சொன்னது…

விழிப்புணர்வு பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் + நன்றி.

மகேந்திரன் சொன்னது…

கழுத்தறுக்கும் கதிரியக்கம் வெளியேற்றும்
அணுஉலைகள் தேவைதானா??
சிந்தித்து செயபடட்டும்
சிம்மாசனம் ஏறியோர்!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எனவே கூடங்குளத்தில் அணு உலையை மூடிவிட்டு அதே இடத்தில் காற்றாலை ,கடலலை ,சூரியசக்தி போன்ற சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 1-7-2011 அன்று கூடங்குளத்தில் ஒரு நாள் உண்ணா விரதம் நடை பெற்றது //

ஆரம்பம் முதலே போராட்டம் நட்ன்துட்டுதான் இருக்கு ஆனால் ஒருத்தனும் கண்டுக்கிட்ட மாதிரியே தெரியலையே...!!!!

நிரூபன் சொன்னது…

பாஸ், இந்தப் போராட்டம் வெற்றி பெற்று, மக்களுக்கான சுமூகமான வாழ்விற்கேற்ற சூழல் அமைந்து கொள்ள வேண்டும் என்பதே என் அவாவும்.