20 மே 2014

பா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா?

1984-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய வெற்றியினை நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெற்றிருக்கிறது. அதே சமயம் காங்கிரஸ் வரலாற்றிலேயே மிகப்பெரும் தோல்வியை சந்திருக்கிறது.

1984-ல் காங்கிரஸ் பெற்ற வெற்றியை விட இது சிறப்பு வாய்ந்தது எனலாம். காரணம் அப்போது காங்கிரசின் வெற்றி இந்திரா காந்தியின் மரணத்தின் மூலம் கிடைத்த அனுதாப ஓட்டுக்களால் கிடைத்த வெற்றி.


பாரதிய ஜனதா கட்சியின் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் காங்கிரஸ் எதிர்ப்பு அலையா? அல்லது மோடி ஆதரவு அலையா? என்ற விவாதம் எழுந்துள்ளது.

காங்கிரஸ் எதிர்ப்பு அலை மட்டுமே காரணம் என்றால் காங்கிரஸ் கூட்டணி மட்டுமே மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கவேண்டும். 

ஆனால் இந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடாத சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகளும் பா.ஜ.க வால் பந்தாடப் பட்டுள்ளன.

எனவே காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த மிகப்பெரும் வெறுப்பு மட்டுமல்லாமல்  மோடி மீது மக்களுக்கு உள்ள மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஆகிய இரண்டும் சேர்ந்தே இப்பெரு வெற்றிக்கு காரணம் என எண்ணத் தோன்றுகிறது.

ஜெயலலிதா மற்றும் மம்தாவின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைப்பதற்கு மோடி புண்ணியம் செய்திருக்கவேண்டும்.

பகவான் வரம் கொடுத்துட்டார். மோடி பயன்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

6 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நல்லா சொன்னீங்க! பார்ப்போம்!

கும்மாச்சி சொன்னது…

நன்றாக சொன்னீர்கள், மோடியின் செயல்களை பொறுத்திருந்து பார்ப்போம்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மோடியின் வலது இடது ஐ ஏ எஸ் ஆபீசர்கள் மறத் தமிழர்கள் என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும் ?

மணவை சொன்னது…

அன்புள்ள அய்யா திரு.கூடல் பாலா அவர்களுக்கு,
வணக்கம்.

"பா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா?"
-ஆளுங்கட்சியின் எதிர்ப்பலையா இருக்குமா?
எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து தாங்கள் கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in

yathavan64@gmail.com சொன்னது…

தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr

Unknown சொன்னது…

நல்லா சொன்னீங்க! பார்ப்போம்!Discover Tamil news