13 பிப்ரவரி 2012

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி தமிழக இயக்கங்கள் கூடங்குளத்தில் பேரணி!

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.


 நேற்று முன் தினம் (11-02-2011) மக்கள்  கலை  இலக்கிய  கழகம் ,புரட்சிகர  மாணவர் -இளைஞர்  முன்னணி ,விவசாயிகள் விடுதலை முன்னணி,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ,பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூடங்குளத்தில் ஒரு மிகப் பெரிய பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தினர் .


* இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக்கும் இந்திய  அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை கிழித்தெறிவோம்,

* வளர்ச்சி-வேலை வாய்ப்பு-வல்லரசு என்று ஆசை காட்டி தேசத் துரோக மக்கள் விரோத சதியில் ஈடு பட்டிருக்கும்காங்கிராஸ்,பாரதீய ஜனதா உள்ளிட்ட ஓட்டுப் பொறுக்கிகளைப் புறக்கணிப்போம் ,

* தனியார் மயம்,தாராளமயம் ,உலகமய-மறு காலனியாதிக்கத்தை முறியடிப்போம்
  
போன்ற கோஷங்களை எழுப்பினர்.போராட்டத்தில் 2000  பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தையொட்டி அணு மின் நிலையத்தின் முன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ள காட்சி

அணுமின் நிலையமா?பவர் கட்டா ? குழப்பத்தில் அரசியல் கட்சிகள் !

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டங்கள் தீவிரமடையத் தொடங்கின .

மக்கள் கூட்டத்தைக் கண்டதும் அரசியல் கட்சியினர் சும்மா இருப்பார்களா என்ன ..ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

பல தலைவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.ஏன் ...இன்று அணு உலைக்கு ஆதரவாகப்  பிரச்சாரம் செய்துவரும் முக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் கூட கலந்து கொண்டனர் .

போராட்டத்தை கலைக்க அரசு எத்தனை முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக வரலாறு காணாத வகையில் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது .இது தானாக நிகழ்கிறதா ..இல்லை திட்டமிட்டே மின்வெட்டு ஏற்படுத்தப் படுகிறதா என்பது மர்மமாகவே உள்ளது .

தற்போது மின்வெட்டைக் கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் தொடங்கியுள்ளது .போராட்டம் நடக்கும் சில இடங்களில் கூடங்குளம் அணு உலையை உடனடியாகத் திறக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப் படுகிறது .

இச்சூழ்நிலை அணு உலையை எதிர்த்து வந்த கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுபோல் தோன்றுகிறது.சில கட்சிகள் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன ...சில கட்சிகள் அணு உலை குறித்து வாயே திறப்பதில்லை..சில கட்சிகள் அணு உலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றன ..மேலும்  சில கட்சிகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கக் காத்திருக்கின்றன .

உண்மையிலேயே மக்களுக்கு தொண்டு செய்வதற்காக இக்கட்சிகள் உருவாக்கப் பட்டிருந்தால் இது போன்ற பிரச்சினைகளில்  தங்கள் நிலையை தெளிவு படுத்தி பிரச்சினைகள் உடனடியாகத் தீர முயற்சி செய்யவேண்டும்.

12 பிப்ரவரி 2012

ஒரு SMS ஜோக் !

தந்தை : ஏண்டா ரொம்ப நேரமா அழுதுகிட்டிருக்கிறே?
  
மகன்   :  அம்மா அடிச்சிட்டாங்கப்பா...
 
தந்தை : சீ ..சீ...இதுக்கெல்லாம் இப்படியா அழுவாங்க ...
 
மகன்  : அட போங்கப்பா நீங்க எவ்வளவு அடி பட்டாலும் தாங்கிடுறீங்க ...என்னால முடியல ...
 
தந்தை : சரி ...விட்றா...விட்றா ...பக்கத்துல யார் காதுலயும் விழுந்திடப் போகுது .

11 பிப்ரவரி 2012

மனித குழந்தைகளைப்போல் சண்டையிடும் பாண்டா குழந்தைகள் (கரடிகள்)

குழந்தைகளுக்கே உரித்தான குணம் ஒன்று உண்டு .அது என்னவென்றால் நாம் அவர்களுக்கு  வாங்கிக் கொடுக்கும் உணவுப் பண்டங்களை விட பிற குழந்தைகள் கையிலிருக்கும் பண்டங்களையே மிகவும் விரும்பும் .

சில வம்புக்கார குழந்தைகள் அடுத்த குழந்தையிடம் இருக்கும் பண்டத்தை தன திறமையால் ? பிடுங்கித்தின்பதும் உண்டு .

அது போல இரண்டு பாண்டாக் கரடிகள் சண்டையிடும் கண்கொள்ளாக் காட்சியைக் காணுங்கள் ....



05 பிப்ரவரி 2012

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 10000 பேர் பேரணி !

கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த சில மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன .

இதன் ஒரு பகுதியாக நேற்று (04-02-2012) கூடங்குளம் அருகிலுள்ள ஊரான கூட்டப்புளியிளிருந்து விஸ்வநாதபுரம் என்ற ஊர் வரை 3  கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு மிகப்பெரிய பேரணி  நடைபெற்றது .பேரணியில் பெண்கள், குழந்தைகள் உட்பட பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர் .

பேரணியின் நிறைவில் அணு உலைக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதனைத்  தொடர்ந்து அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் டாக்டர் உதயகுமார் உட்பட 146  பேர் மொட்டையடித்துக்கொண்டனர் .

இந்திய அரசு பாமர மக்களை மொட்டையடிப்பதைக் கண்டிக்கும்விதமாக மொட்டையடித்துக்கொள்வதாக போராட்டக்குழுவினர் கூறினர்.


பேரணியில் கலந்துகொண்டவர்களின் ஒரு பகுதி 


 மொட்டையடித்துக்கொண்ட டாக்டர் உதயகுமார்