05 பிப்ரவரி 2012

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 10000 பேர் பேரணி !

கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த சில மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன .

இதன் ஒரு பகுதியாக நேற்று (04-02-2012) கூடங்குளம் அருகிலுள்ள ஊரான கூட்டப்புளியிளிருந்து விஸ்வநாதபுரம் என்ற ஊர் வரை 3  கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு மிகப்பெரிய பேரணி  நடைபெற்றது .பேரணியில் பெண்கள், குழந்தைகள் உட்பட பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர் .

பேரணியின் நிறைவில் அணு உலைக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதனைத்  தொடர்ந்து அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் டாக்டர் உதயகுமார் உட்பட 146  பேர் மொட்டையடித்துக்கொண்டனர் .

இந்திய அரசு பாமர மக்களை மொட்டையடிப்பதைக் கண்டிக்கும்விதமாக மொட்டையடித்துக்கொள்வதாக போராட்டக்குழுவினர் கூறினர்.


பேரணியில் கலந்துகொண்டவர்களின் ஒரு பகுதி 


 மொட்டையடித்துக்கொண்ட டாக்டர் உதயகுமார்

17 கருத்துகள்:

மகேந்திரன் சொன்னது…

ஆயிரம் இடர் வரினும்
தயங்காத தளராத மனத்துடன்
போராடும் உள்ளங்களின் முயற்சி வெல்லட்டும்.

Admin சொன்னது…

போராட்டம் வெற்றியடைய வைப்பதற்கு என்னவெல்லாம் செய்வேண்டியிருக்கிறது.மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை.

Unknown சொன்னது…

கூலிக்கு மாரடிக்கும்
கூட்டம் இல்லை!-நெஞ்சம்
குமுறுகின்ற மக்களுக்கும்
உண்டோ எல்லை!
நீலிக்கிக் கண்ணீராம்
நெற்றி யிலே-அரசே
நினைத்தீரா?உமக்கென்றும்
வெற்றி யிலே

புலவர் சா இராமாநுசம்

Kousalya Raj சொன்னது…

ஒரு முடிவும் எட்டப்படாமல் தொடர்ந்து கொண்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது...

ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா என சந்தேகமாக இருக்கிறது.மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டதே !

எத்தனை விதமான போராட்டங்கள்... அத்தனையிலும் சிறிதும் சோர்வடையாத மக்கள்,கண்டு பிரமிப்படைகிறேன் !!

நம்பிக்கை இருக்கிறது என்றே நம்பிக்கை கொள்வோம்...வேறு என்ன சொல்ல ?!

Yaathoramani.blogspot.com சொன்னது…

தொடர் போராட்டம் நிச்ச்யம் வெல்லும்
வெல்ல வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நடக்கும் கண்ணாமூச்சி விளையாட்டில் நிறைய சேகுவேராக்கள் வீதியெங்கும்....மத்திய அரசைக் கண்டித்து மொட்டையும் போட்டாயிற்று......மீசையும் வழித்தாயிற்று.

அப்புறம் இன்னும் இரண்டு மாதம் கழித்து மாநில அரசுக்கெதிராக மொட்டையும் போட வேண்டும்..மீசையும் எடுக்க வேண்டுமே.... அப்ப என்ன செய்வது.....?......ரெண்டு மாதம் இருக்குதே.....நல்லா வளர்ந்து விடும்..

என்ன...இதுநாள் வரை...மாநில அரசை பாராட்டி பேட்டி கொடுத்தது அப்படியே எதிர்த்து கொடுக்க வேண்டும்...மாநில அரசும் தமிழர்களை கேவலமாக நடத்துகிறது என்று....பார்த்துக்கொள்ளலாம்

பெயரில்லா சொன்னது…

நெஞ்சு பொறுக்குதில்லையே ..இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்
அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே...
ஒப்பந்த நகலைக் கேட்பார்...உலையின் ப்ளு ப்ரின்ட்டும் கை மேலே வேணுமென்பார்
இங்கிட்டு கட்டாமல் அங்கிட்டு கட்டுவது ஏனென்பார்
கொத்துநாயகம் பேர் நல்லாயில்லை...சத்துநாயகம் வேணுமென்பார்
நெஞ்சு பொறுக்குதில்லையே ..இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்

ஆயிரம் சைக்கிளை ஒன்றாய் நிறுத்தி சுத்தினால்
அதன் டைனமோவே ரெண்டு ஊருக்கு போதுமென்பார்...
மூணாப்பு படிக்கிற படிக்கிற பையனெல்லாம், நான் முன்பு
ஐன்ஸ்டீனுக்கு வாத்தியார் என்பான்.
எல்லா சுயநலன்களுக்கும் இவர்கள் வைத்திருக்கும் பெயரைக்
கேட்டால் சத்தமாய் " வாழ்வாதாரம்" என்பார்
நெஞ்சு பொறுக்குதில்லையே ..இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்

புலவர் அணுமந்தராயன்

பெயரில்லா சொன்னது…

இந்த 10000 என்பது 100000 ஆக வேண்டும்....100000 என்பது 1000000 ஆக வேண்டும்.....1000000 என்பது 10000000 ஆக வேண்டும்... 10000000 என்பது 100000000 ஆக வேண்டும் எல்லோரும் சைபரை எண்ணிக்கொண்டிருக்கும் போது இந்த அணு உலையை திறந்து விடலாம்

பெயரில்லா சொன்னது…

ஜூலியஸ் சீசர் படுகொலை செய்யப்பட பின், சீசரின் இறுதி ஊர்வலத்தில் மார்கஸ் ஜூனியஸ் ப்ருட்டஸ் முதலில் பேசுகிறான்....நான் ஏன் சீசரைக் கொன்றேன்...என்று..."Not that I loved Caesar less, but that I loved Rome more." என்று ஆரம்பித்து அவன் பேசும் உரையைக் கேட்டு கை தட்டும் கூட்டம் சீசரைக்கொன்றது சரியே என்று ஆமோதிக்கும் வண்ணம் ஆரவாரம் செய்கிறது ..

புருட்டஸ் பேசி முடித்த பின் மார்கஸ் அந்தோனியஸ் என்கிற மார்க் ஆண்டனி அதே கூட்டத்திடையே பேசுகிறான்...
Friends, Romans, countrymen, lend me your ears; I come to bury Caesar, not to praise him. The evil that men do lives after them;The good is oft interred with their bones;
என்று ஆரம்பிக்கும் அவன் பேசி முடிக்கும் போது கூட்டம் புருட்டசுக்கு எதிராகத்திரும்பு கிறது . சீசரைக்கொன்றது அநியாயம் என்கிறது .

இதுதான் கூட்டத்தின் மனநிலை......

இந்த மனநிலையில் இருக்கும் இடிந்தகரை மக்களை என்னவென்று சொல்வது..... துரதிர்ஷ்ட வசமாக அங்கு புருட்டஸ்கள் தான் பேசித்திரிகின்றனர்..... இடிந்தகரை மக்களுக்கு மார்க் ஆண்டனியின் பேச்சைக்கேட்கும் சுதந்திரம் அற்று போயுள்ளது...... பாவம்

கூடிய விரைவில் நிலைமை மாறும் .

பெயரில்லா சொன்னது…

அன்பு உதயகுமாரனுக்கு அமெரிக்க விசாவும் ப்ளைட் டிக்கட்டும் தயாராக உள்ளன

பெயரில்லா சொன்னது…

அச்சம் என்பது மடமையடா..
அணு உலை அச்சம் என்பது மடமையடா..
அஞ்சாமை தமிழரின் உடமையடா..
அஞ்சாமை இடிந்தகரை தமிழரின் உடமையடா..

புலவர். சோ. ஹைட்ரஜன்தாசன்

பெயரில்லா சொன்னது…

போராட்டம் நிச்ச்யம் வெல்லும்...வாழ்த்துக்கள் நண்பரே...

பெயரில்லா சொன்னது…

கூடல் பாலண்ணன் அவர்களுக்கு, புதிய தலைமுறை டிவி யில் தமிழன் விருது கொடுக்கிறாங்க.....அதில் சமூக சேவை, அறிவியல் தொழில்நுட்பம் இரண்டு வகைகளிலும் டாக்டர்.சுப. உதயகுமார் அண்ணன் அவர்களை பரிந்துரை செய்து ஒட்டு போட எண்ணியுள்ளேன்....அதை எப்படி செய்ய வேண்டுமென விளக்குங்கள் அண்ணா

கூடல் பாலா சொன்னது…

@பெயரில்லாஎன்ன அண்ணாச்சி பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க !!!

பெயரில்லா சொன்னது…

என்.கந்தசாமி, மதுரையிலிருந்து எழுதுகிறார்: "தமிழகத்தில் மின் உற்பத்தியைப் பெருக்கவும், நிலுவையில் உள்ள மின் திட்டங்களை நிறைவேற்றி முடிப்பதற்காகவும், தமிழக அரசு, 6,455 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருக்கிறது' என, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் தெரிவித்திருக்கிறார்."தமிழகத்தில் நிலவும் கடுமையான மின் நெருக்கடியைச் சமாளிக்க, 1,000 மெகா வாட் மின்சாரம் தர தயாராக உள்ளோம். 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து, மின் உற்பத்திக்குத் தயாராக இருக்கும், கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட, தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்' என கெஞ்சுகிறார், நம் பாரதப் பிரதமர்.தொட்டதற்கெல்லாம், "மத்திய அரசு, தமிழக அரசிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது' என, குற்றம் சாட்டும் தமிழக அரசு, கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்குவதில், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதை தமிழக மக்கள் அறிந்தேயிருக்கின்றனர்.பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பாக படமெடுத்து, இன்று, அனைவரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார் உதயகுமார். இவரை, அடக்கி ஒடுக்க, தமிழக காவல்துறை ஏன் தயங்குகிறது?உதயகுமாரின் சுயநலக் கூட்டத்தின் அடாவடிப் போராட்டத்தை, தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியிருந்தால், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கப்பட்டு, தமிழக மக்கள் மின் வெட்டிலிருந்து தப்பித்திருப்பர். "மின்வெட்டேயில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம்' என்று சொன்னால் மட்டும், தமிழக மக்களின் துன்பம் நீங்காது."தானே' புயல் விஷயத்தில் ஆக்ரோஷமாகச் செயல்பட்ட தமிழக அரசு, கூடங்குளம் அணுமின் நிலைய விஷயத்திலும் விரைந்து செயல்பட வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

'தமிழக அரசு நேயமித்துள்ள இந்த வல்லுநர் குழுவை நாங்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கிறோம் ....இது ஒரு அப்பட்டமான புரட்டுத்தனம். வல்லுநர் குழுவுக்கு முன்னாள் அணுசக்தி கமிஷனின் தலைவரை நியமித்தது இடிந்தகரை தமிழர்களைக் கேவலப்படுத்துவதாகும். கலாம் ஒரு மூளையில்லாதவர் என்றால் இந்த சீனிவாசன் மூளை , கிட்னி எதுவுமே இல்லாதவர்.. உடனே இவரை நீக்கி விட்டு நாங்கள் சொல்லும் ஒரு நபரை வல்லுநர் குழுவுக்கு தலைவராக நியமஈக்க வேண்டும்...வல்லுநர் குழு உறுப்பினர்களாக பழ நெடுமாறன், கொளத்தூர் மணி , ஜவாஹிருல்லா, பீட்டர் பெர்னாண்டஸ், டக்லஸ் சிறியோன் , சிறில் நாடார், மைக்கேல் மதனகாமராஜ் ஆகியோரை நியமித்து அணு உலை அழிவுக்கானது என்று அறிக்கை தர வேண்டும்..அறிக்கை தரும் முன்னரே அணு உலையை புல்டோசர்கள் வைத்து இடித்து தரை மட்டமாக்க வேண்டும் அப்போத்டு தான் இடிந்தகரை மக்களுக்கு அச்சம் தீரும்' என்று உதைகுமார் தெரிவித்தாராராம்

பெயரில்லா சொன்னது…

உதயகுமாரிடம் அந்த ஜெர்மன்காரர் இலவசமாக எரிவாயு தருகிறேன் என்று சொல்லி இருக்கிறாராம். அதனால் அவர் லாட்ஜில் தங்கி எரிவாயு உற்பத்தி செய்து கொண்டு இருந்தாராம். இது தெரியாமல் அவரை எரிவாயு டேங்கோடு நாடு கடத்தியதால் நமக்கு கிடைக்க இருந்த எரிவாயு கிடைக்காமல் போய் விட்டது.