28 ஜூன் 2011

சாலை விபத்து அதிகரிக்க 10 காரணங்கள் + நிவாரணங்கள் !


இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 1,20,000 பேர்  சாலை விபத்துக்களில் பலியாகின்றனர் .இது கிட்டத்தட்ட ஆண்டுக்கு ஒரு அணு குண்டு இந்தியாவில் வீசப்பட்டால் பலியாவோரின் எண்ணிக்கைக்கு சமம் .உலக அளவில் முதலிடம் .இதற்கு காரணங்கள் என்ன இதற்க்கு தீர்வு  என்ன என்பது குறித்த ஓர் அலசல்.


1 .வாகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஒவ்வொரு வருடமும் வாகனங்களின் எண்ணிக்கை அளவுக்கதிகமாக அதிகரித்து வருகிறது .குறிப்பாக சிறிய ரக கார்கள் இரு சக்கர வாகனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட பல மடங்கு அதிகரித்துள்ளது .வாகன நெரிசல் காரணமாக அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன .

நிவாரணம் :பேருந்து வசதிகள் அனைத்து ஊர்களுக்கும் தேவையான அளவில் தேவையான நேரத்தில் செய்யப்படவேண்டும் .

2 .வேகம்
பல வாகன ஓட்டிகள் நிதானமான வேகத்தை கடை பிடிப்பதில்லை.வேகமாக ஒட்டுவதால் அவர்களுக்கும் அதை விட அதிகமாக பிறருக்கும்  பிரச்சினைகள் ஏற்படுகின்றன .

நிவாரணம் :அளவுக்கதிகமாக வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் ,வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு தேவை .


3 .ஓட்டுனர் உரிமம்

வாகனகள் ஓட்ட தெரியாதவர்களுக்கு உரிமம் அளிப்பதால் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன .அடிப்படையான சாலை விதிகள்கூட பலருக்கு தெரிவதில்லை .

நிவாரணம் : தகுதியில்லாதவர்களுக்கு  ஓட்டுனர் உரிமம் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .


4 . தூக்கம்

அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடப்பது இரவு 12 மணியிலிருந்து அதிகாலை மணிக்குள் .இதற்கு காரணம் போதிய ஓய்வின்றி ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டுவதுதான்.

நிவாரணம் :ஓட்டுனர்கள் தேவையான அளவு தூங்கி ஓய்வெடுக்கவேண்டும் .நீங்கள் ஓய்வெடுக்காவிட்டால் பலர் நிரந்தரமாக ஓய்வெடுக்கவேண்டியது வரும் .நீண்ட தூர பிரயாணங்களுக்கு கண்டிப்பாக இரு ஓட்டுனர்கள் இருக்க வேண்டும் .


5 .குடி போதை

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் அதிக அளவில் விபத்துக்கள் நிகழ்கின்றன .

நிவாரணம் : பல சாலை விபத்து வழக்குகளில் குடிபோதையில் வாகனம் ஒட்டிய விஷயம்  சேர்க்கப்படுவதில்லை என்பது பலரது புகாராக உள்ளது .குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சரியான தண்டனை வழங்கவேண்டும் .நெடுஞ்சாலைகளில் மதுபானக்கடைகளை அகற்றவேண்டும் .


6 . தரமற்ற வாகனங்கள்
 
காலாவதியான வாகனங்களை ஓட்டுவதால் ஓட்டுனர் திறமையானவராக இருந்தாலும் விபத்தை தடுக்க இயலாமல் போய் விடுகிறது .
 
நிவாரணம் : தகுதியில்லாத வாகனங்களின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்யவேண்டும் .காலாவதியான அரசுப்பெருந்துகளை இயக்குவதை தவிர்க்கவேண்டும்

7 .பழுதடைந்த சாலைகள்
 
குண்டும்  குழியுமான  சாலைகளும் பல விபத்துக்கு காரணமாகின்றன .
 
நிவாரணம் :பழுதடையும் சாலைகளை உடனடியாக துறை சார்ந்தவர்கள் சரி செய்ய வேண்டும் .
8 .பொதுமக்கள் அலட்சியம்   

சாலை விதிகளை பொதுமக்கள் மீறுவது போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடப்பது வளர்ப்புப் பிராணிகளை சாலையில் நடமாட விடுவதும் விபத்துக்களுக்கு காரணமாகிறது .
 
நிவாரணம் :பொதுமக்கள் விழிப்புணர்வு

9 .சாலைகள் வடிவமைப்பு
 
புதிதாக அமைக்கப்படும் சாலைகளின் வடிவமைப்பு குறை பாடுகளாலும் சில விபத்துக்கள் நேரிடுகின்றன .
 
நிவாரணம் :தேர்ந்தவர்களை கொண்டு சாலைகளை வடிவமைக்கவேண்டும்
10 . ஆக்கிரமிப்பு   சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கடைகள் கட்டுவதால் வாகன நெரிசல் அதிகமாகி விபத்துக்கள் நேரிடுகின்றன.பொதுமக்கள் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன .
 
நிவாரணம் : ஆக்கிரமிப்புகளை பார பட்சமின்றி அகற்றவேண்டும் .
 டிஸ்கி :நான் அறிந்தவற்றை பகிர்ந்துள்ளேன் .புதிய ஆலோசனைகளை பதிவர்களும் வாசகர்களும் கருத்துரை மூலமாக அளிக்கலாம் .

18 கருத்துகள்:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு .

Unknown சொன்னது…

the best and most needed விழிப்புணர்வு பதிவு....
tq tq tq

Unknown சொன்னது…

voted in all possible ways to support ur valuable post ...tq again

Mahan.Thamesh சொன்னது…

Useful information

பெயரில்லா சொன்னது…

விபத்தால் ஏற்ப்படும் இழப்புக்கள் உண்மையிலே அதிர்ச்ச்யாக உள்ளது ... நல்ல தீர்வுகள் இவை நடைமுறை படுத்தினால் பல மடங்கு இழப்புக்களை குறைக்கலாம் ....

சக்தி கல்வி மையம் சொன்னது…

இப்போது மிகவும் தேவையான பதிவு நண்பரே..

கூடல் பாலா சொன்னது…

@நண்டு @நொரண்டு -ஈரோடு நன்றி நண்டு

கூடல் பாலா சொன்னது…

@ரியாஸ் அஹமது thank you ....thankyou..

கூடல் பாலா சொன்னது…

@Mahan.Thamesh Right Boss

Admin சொன்னது…

சாலை விபத்துக்கள் அதிகரித்து வரும் இந்த நிலையில்.. நல்ல ஆலோசனைகள். நடைமுறைக்கு வருமா....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

மிக மிக அவசியமான விழிப்புணர்வு பதிவு பாலா! பகிர்வுக்கு மிக்க நன்றி!

கூடல் பாலா சொன்னது…

@சந்ரு
நாம பெரியவுங்க சொல்றோம் .....கேட்டாங்கன்னா நல்லது ..நன்றி சந்த்ரு

கூடல் பாலா சொன்னது…

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி நன்றி அண்ணாச்சி !

நிரூபன் சொன்னது…

காலத்திற்கேற்ற அவசியமான விழிப்புணர்வுப் பதிவு சகோ,
மிக மிக முக்கியமான ஒரு விடயம்,
மொபைல் போன் பேசிக் கொண்டு வண்டி ஓட்டுவது..
இது தான் இன்றைய கால கட்டத்தில் விபத்துக்களுக்குப் பெருங் காரணமாகின்றது.

மகேந்திரன் சொன்னது…

ஊக்கமளிக்கும் ஆக்கம்
தேவையான பதிவு,

தெரிந்தே தவறு செய்பவர்கள்
இருக்கும் வரை விபத்துகள்
தவிர்க்கமுடியாததாகிறது.

திருந்தட்டும் நம்மவர்கள்

Unknown சொன்னது…

அந்நியன் அம்பி ரேஞ்சுக்கு அட்வைசஸ் அள்ளி தெளித்திருக்கிரீர்களே, மிகவும் அருமை,,நன்றி

Mr.Madras சொன்னது…

உங்களது பதிவுகளை எல்லாமேதமிழ்.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் EllameyTamil.Com

இப்படிக்கு
EllameyTamil.Com

அல்ஃபோன்ஸ் சேவியர் சொன்னது…

நான் எனது சிந்தனை ஓட்டத்தை பதிவிட்டுள்ளேன். வாசிக்கவும்.

http://acham-thavir.blogspot.com/2011/02/blog-post.html

நன்றி...