ஆல் இண்டியா ரேடியோவா அப்படீன்னா என்று யாரும் கேட்டுவிடக்கூடாது. 20வருடங்களுக்கு முன்பு ரேடியோ பெட்டியுடன் கொஞ்சி விளையாடியவர்களுக்கு அதன் அருமை தெரியும் .
அது சரி ......இன்று பொழுது போக்கிற்கென்று எண்ணற்ற வசதிகள் வந்துவிட்டன .போதாத குறைக்கு பிளாக் எழுத வந்துவிட்டால் அத்தனை பொழுதும் இதற்கு மட்டுமே போதாது .
என்னதான் இருந்தாலும் அன்றைய நாட்களில் வானொலியில் ஒரு புதிதாக ரிலீசான பாடல் ஒலிபரப்பானால் அதற்கு இருந்த மதிப்பே தனி .வானொலியை ரசித்த சுகம் ரசித்தவர்களுக்கு நெஞ்சை விட்டு அகலாதது .
சரி இப்போது நான் சொல்ல வந்தது அகில இந்திய வானொலி அதுதாங்க ஆல் இண்டியா ரேடியோ இப்போது முன்பைவிடவும் நல்ல நல்ல நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வரு கிறது .
திருநெல்வேலி அகில இந்திய வானொலியில் தினமும் காலை 6 .35 க்கு சூழல் சிந்தனைகள் எனப்படும் சுற்று சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒலிபரப்ப படுகிறது .இதில் சுற்று சூழல் அறிஞர்கள் சூழலை காக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்கள் .
வருகிற 16,17,18-06-2011 ஆகிய மூன்று தினங்களில் இந்நிகழ்ச்சியில் நான் உரையாற்றுகிறேன் .ஆர்வமுள்ளவர்கள் கேட்டு மகிழுங்கள் .
அதுக்காக ரேடியோ பெட்டி வாங்கி தரச்சொல்லி எங்கிட்ட கேக்கப் புடாது சொல்லிட்டேன் .
14 கருத்துகள்:
முதல் பாடல்..
அட... கண்டிப்பாப கேட்டிடுவோம்...
நன்றாக உரையாற்ற என் வாழ்த்துக்கள் நண்பா!
வாழ்த்துகள் பாலா!முத்திரை பதியுங்கள்!
வாழ்த்துக்கள் தோழா..
வாழ்த்துக்கள் சகோ ...
வெற்றிக்கனி பல பறித்து எங்களுக்கும் பகிர்ந்து மகிழுங்கள்
@ # கவிதை வீதி # சௌந்தர் நல்ல பாட்டா போட்டுருவோம்
@Abdul Basith வருகைக்கு நன்றி பாசித் .நிகழ்ச்சி ஒலிப்பதிவு ஏற்கெனவே முடிந்துவிட்டது .ஒலிபரப்பு நாளையிலிருந்து மூன்று நாட்கள் செய்யப்படுகிறது .
@சென்னை பித்தன் வருகைக்கு நன்றி தலைவரே
கண்டிப்பா கேட்போம்
சகோ, ஆல் இண்டிய ரேடியோவை எங்களாலும் மறக்க முடியாது, 1990களின் தொடக்கம் 2002 வரை எமது பகுதிகளில் தனியார் வானொலிகளின் சேவைகள் விஸ்தரிக்கப்படும் வரை இவ் ஆல் இண்டியா ரேடியோ தான் எங்கள் வாழ்வோடு இணைந்திருந்தது சகோ.
இரவில் ஒலிபரப்பாகும் வயலும் வாழ்வும்,
ஞாயிற்றுக் கிழமைகளில் ஒலிபரப்பாகும் ஜொனி இன் புதிய பாடல் அறிமுகம், BCL ரேடியோ விளம்பர நிகழ்ச்சி என நினைக்கிறேன், ஞாபகம் இல்லை...
இவ் நிகழ்ச்சிகள் எல்லாமே அருமை. அத்தோடு தூத்துக்குடி வானொலி நிலையத்தின் திரை கடல் ஆடி வரும் தமிழ் நாதத்திற்கும் நாம் அடிமையாக இருந்தோம் சகோ.
ஆல் இண்டியா ரேடியோவில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய பகிர்வோடு உங்கள் குரலும் ஒலிக்கப் போகிறது என்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது சகோ.
வாழ்த்துக்கள் தோழா!
வானொலி ஒரு அற்புதமான
செய்தித்தொடர்பு சாதனம்.
அதன் சேவையை அதைக்கேட்டு
அறிந்தவர்கள் மறுக்கமுடியாத
ஒன்று.
தங்களின் உரை ஒலிபரப்பு என்ற செய்தி
தேனில் கிடக்கும் செவ்வாழை.
நிச்சயம் அதை கேட்டு பயன்பெறுவோம்.
நன்றி.
அன்பன்
மகேந்திரன்
அருமையான் தளமொன்று கிடைத்திருக்கிறது.சிறு வயதிலிருந்தே வானொலி அறிவிப்பாளர்கள் மேல் எனக்கு அலாதிப் பிரியம்.அதுவும் சுற்றுச் சூழல் பற்றி.மிக முக்கியமான நிகழவாய் அமையும்.வாழ்த்துகள் பாலா.இன்னும் தொடரட்டும் உங்கள் சேவை !
ஆல் இந்திய ரேடியோ வினை இலங்கையில் இருக்கும் போது கேட்டிருக்கேறேன்.
மிக சிறந்த படைப்புக்களை தாங்கி வரும் வானொலி .
இதில் நீங்கள் பங்குபெறுவது மகிழ்ச்சி தருகிறது . வாழ்த்துக்கள் பால அண்ணே
கருத்துரையிடுக