வெளியூர், வெளிநாடு பயணங்களுக்கு ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துபவரா நீங்கள் .அப்படியானால் இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான் .
ஜிப் சூட்கேசிலுள்ள பூட்டை திறக்காமலே ஜிப்பை திறந்து அதிலுள்ள விலை மதிப்பு மிக்க பொருட்களை களவாடவோ அல்லது தேவையற்ற பொருட்களை உள்ளே வைத்து விட்டு திறந்த சுவடே தெரியாமல் மூடிவிட முடியும் .
அதன் மூலம் மதிப்பு மிக்க பொருட்களையோ ,பணத்தையோ நீங்கள் இழக்கவோ அல்லது செய்யாத குற்றத்திற்காக நீங்கள் தண்டிக்கப்படவோ வாய்ப்புள்ளது .கீழ் காணும் வீடியோவை பாருங்கள் விளக்கமாகப்புரியும் .
எனவே எக்காரணம் கொண்டும் விலையுயர்ந்த பொருட்களையோ அல்லது பணத்தையோ ஜிப் சூட்கேசினுள் வைக்காதீர்கள் .சாதாரணமான துணிகள் போன்றவற்றை வைக்க பயன்படுத்தினாலும் ஜிப்பை நகர்த்தமுடியாத படிக்கு ஏதாவது ஒரு சாதனத்தால் லாக் செய்யுங்கள் .
சொந்த அனுபவம் :இத்தகவலை இரண்டு மாதங்களுக்கு முன்பாக துபாயில் வசித்து வரும் என் நண்பனிடம் கூறியிருந்தேன் .ஊருக்கு வரும்போது ஒரு விலையுர்ந்த செல்போன் வாங்கி வரவும் கேட்டிருந்தேன் .கடந்த வாரம் அவன் ஊருக்கு வந்தான் .மக்கா செல் வாங்கிட்டு வரச்சொன்னேனே வாங்கிட்டு வந்தியான்னு கேட்டேன் .அவன் சொன்னான் மக்கா உனக்கு விஷயமே தெரியாதா ஜிப் சூட்கேசுல உனக்கு வாங்கி வச்சிருந்த செல் இருந்துது ,எவனோ ஆட்டயப்போட்டுட்டான் .
பயபுள்ள செல் வாங்கிட்டுவராம எவ்வளவு நேக்கா அல்வா குடுக்குது .
பயபுள்ள செல் வாங்கிட்டுவராம எவ்வளவு நேக்கா அல்வா குடுக்குது .
13 கருத்துகள்:
தகவலுக்கு நன்றி பாலா.
என்ர நண்பன் ஒருவனுக்கு இலங்கை எயாப்போட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது ... புது செல்போனை திருடிவிட்டார்கள் ...
நல்ல உஷார் தகவல் நன்றி மக்கா....
ஹிஹி பகிர்வுக்கு நன்றிகள்...பாஸ்
பகிர்வுக்கு நன்றி....
@!* வேடந்தாங்கல் - கருன் *!நன்றி கருண்
@கந்தசாமி.நிறைய இடங்களில் இப்படி நடக்குது
@MANO நாஞ்சில் மனோநன்றி மனோ அண்ணா
@மைந்தன் சிவாஇன்னாய்யா..சீரியஸா பேசிகிட்டிருக்கேன் சிரிப்பு வருதா ......ரைட்டு
@குணசேகரன்...வருகைக்கு நன்றிகள் பாஸ்
பழைய காலத்து ட்ரங்க் பெட்டி தான் சரி போல...
விழிப்புணர்வுப் பதிவினைத் தந்திருக்கிறீங்க. நன்றி பாஸ்.
விழிப்புணர்வுப் பகிர்வுக்கு நன்றி....
கருத்துரையிடுக