15 ஜூலை 2011

நூறாவது பதிவுலக நண்பர் :நண்பேண்டா தொடர் பதிவு

பதிவுலகத்தில் எதேச்சையாக நுழைந்த எனக்கு இன்று ஒரு நம்ப முடியாத நாள் .   

நான் வெப்சைட் வைத்திருக்கிறேன் என்று நண்பர்களிடம் பீலா விடுவதற்காக ஆரம்பித்ததுதான் இந்த பிளாக் .


ஆரம்பித்து ஆறு மாதங்களில் வெறும் ஐந்து இடுகைகளை மட்டுமே இட்டேன் ...அதுவும் வெற்று இடுகைகள் .

நான் அதிகாரப்பூர்வமான ( ஹி..ஹி ...வேறு வார்த்தை தெரியவில்லை ) பதிவரானதற்கு காரணம்  ஜப்பான் பூகம்பம் .

ஆச்சரியமாக இருக்கிறதா ....உண்மைதான் .ஜப்பான் பூகம்பத்தால் ஏற்பட்ட சுனாமியால் அணு உலைகள் வெடித்து சிதறின .அதைத் தொடர்ந்து அணு உலைகள் உலகிற்கு அவசியமா என்னும் விவாதம் பதிவுலகில் நடமாடியது .

அணு உலைகளுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் அடிக்கடி பங்கு கொள்பவன் என்பதால் அது பற்றிய பிற பதிவர்களின் இடுகைகளில் எனது கருத்துக்களை கூறி வந்தேன் .

அப்போது ஒரு பதிவருக்கும் எனக்கும் கருத்து மோதல் வந்தது .மிகவும் மோசமான சூழ்நிலைகளில் மட்டும் கோபப்படும் எனக்கு அப்போது கோபம் வந்தது .

அதன் காரணமாக அணு உலைகளுக்கு எதிரான கருத்துக்களை உதாரணங்களுடன் பதிவிட ஆரம்பித்தேன் .

இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை எல்லா விஷயங்களைப்பற்றியும் திடீரென பதிவிட ஆரம்பித்துவிட்டேன் .சில நாட்களாக தேடுவாரற்று இருந்த எனது பிளாகை ஒவ்வொருவராக ஆதரிக்கத்தொடங்கினர்..
 
நம்பவே முடியவில்லை எனக்கு இன்று பதிவுலகில் நூறு நண்பர்கள் .

இதற்கு வந்தாரை வாழ வைக்க மட்டுமே கற்றிருக்கும் பதிவர்கள் அனைவரும் காரணம் .நன்றிக்கடனாக நானும் என்னாலியன்ற ஆதரவினை பிற பதிவர்களுக்கு அளித்து வருகிறேன் .பதிவுலக நண்பர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதத்தில் என்னை கவர்ந்தவர்கள் .

இந்த நட்பு தொடரும் 

அனைவருமே நண்பர்களாக இருப்பது   பதிவுலகத்தில் மட்டுமே சாத்தியம் என்று நினைக்கிறேன் .

புதிய நண்பர்களை பாசத்துடன் வரவேற்கிறேன் .

நண்பேண்டா தொடர் பதிவை எழுத என்னை அழைத்த நிரூபனுக்கு நன்றி .


நண்பேண்டா தொடர்பதிவை இதுவரை எழுதாத  அனைத்து பதிவர்களையும் இதன் மூலம் அழைக்கிறேன்

44 கருத்துகள்:

விக்கியுலகம் சொன்னது…

நண்பேண்டா!

விக்கியுலகம் சொன்னது…

வாழ்த்துக்கள் மாப்ள!

நிரூபன் சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணச்சி, தொடர்ந்தும் கலக்கலான - காத்திரமான - இயற்கையின் பாதுகாப்பை உறுதி மேலும் வளப்படுத்தும் சுற்றுச் சூழல் சிந்தனைகள் நிறைந்த பல பதிவுகளை நீங்கள் பகிர்வ வேண்டும்!

Ramani சொன்னது…

நூறு படைப்பாளிகளை சமூக ஆர்வலர்களை
நண்பர்களாகப் பெற்றமைக்கும் தொடர்ந்து
ஆயிரம் பேரைப் பெறுவதற்கும் எனது
மனமார்ந்த வாழ்த்துக்கள்

koodal bala சொன்னது…

@விக்கியுலகம் நண்பேண்டா.....நன்றி மாம்ஸ் !

koodal bala சொன்னது…

@நிரூபன் இயன்ற அளவு இடுகிறேன் ...நன்றி மாப்ள !

koodal bala சொன்னது…

@Ramani வாழ்த்துக்கு நன்றி ஐயா...

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

வாழ்த்துக்கள் பாலா..

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

அடுத்த வாரம் கவிதை வீதியில் நண்பேண்டா எதிர்பார்க்கலாம்....

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Congratulation friend. . . Keep it upCongratulation friend. . . Keep it up

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் பாஸ்

M.R சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே


thulithuliyaai.blogspot.com

கிராமத்து காக்கை சொன்னது…

பயனுள்ள கருத்துகளை வெளியிடும் பாலா சார்
100 ஒன்றும் பெரிய விஷயமில்லை இன்னும்
பல 100 நண்பர்களை பெற வாழ்த்துக்கள்

மகேந்திரன் சொன்னது…

வாழ்த்துக்கள் தோழரே,

உங்கள் பணி சிறக்க
இறைவனை பிரார்த்திக்கிறேன்.

FOOD சொன்னது…

நூறு ஆறாய் பெருகட்டும்.சமுதாய சிந்தனை மிக்க பதிவுகள் மலரட்டும்.வாழ்த்துக்கள், நண்பரே.

ரியாஸ் அஹமது சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே

எஸ்.பி.ஜெ.கேதரன் சொன்னது…

யம்மாடி...
கோபம் வந்தவுடன் எழுத ஆரம்பித்துவிட்டாராமே...!!!!!
கருத்து சொல்லும்போது நாம கொஞ்சம் ஜாக்கிறதயாதான் இருக்கணுமோ..!

எஸ்.பி.ஜெ.கேதரன் சொன்னது…

நூறாவதென்ன.. நூற்று ஓராவதாவும் ஒரு நண்பர் இணைந்துவிட்டார்.
தொடர்ந்து எழுதுங்க.
எழுதிக்கொண்டே இருங்கள்.
வாழ்த்துக்கள்.

koodal bala சொன்னது…

@ # கவிதை வீதி # சௌந்தர் தங்கள் நண்பேண்டா பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் .....

koodal bala சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா Thank you...thank you.

koodal bala சொன்னது…

@கந்தசாமி. நன்றி ....நன்றி ...

koodal bala சொன்னது…

@M.R வருகைக்கும் ,வாழ்த்துக்கும் ,நண்பராய் இணைந்ததற்கும் நன்றி !

koodal bala சொன்னது…

@கிராமத்து காக்கை உங்கள் வாழ்த்து பலிக்கட்டும் !

koodal bala சொன்னது…

@FOOD எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் ..!

koodal bala சொன்னது…

@ரியாஸ் அஹமது நன்றி ரியாஸ்

koodal bala சொன்னது…

@எஸ்.பி.ஜெ.கேதரன் எனக்கும் கோபத்திற்கும் வெகு தூரம் ...ஆகையால் எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் .....ஆனால் சில சுற்று சூழல் பிரச்சினைகளில் காம்ப்ரமைஸ் ஆக முடியாது ...

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

வாழ்த்துக்கள் பாலா ..

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

மேலும் பல நல்ல பதிவுகள் கொடுத்து புகழின் உச்சிக்கு செல்ல வாழ்த்துகிறேன்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அசத்துங்க அசத்துங்க மக்கா...!!!

மைந்தன் சிவா சொன்னது…

வாழ்த்துக்கள் பாஸ்..தொடர்ந்து செல்லுங்கள்!

ஹேமா சொன்னது…

இன்னும் இன்னும் எழுதுங்க.மனம் நிறைந்த வாழ்த்துகள் பாலா.

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே... 101

மதுரை சரவணன் சொன்னது…

vaalththukkal....

கடம்பவன குயில் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே. தங்கள் சமுக ஆர்வம் மிக்க பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

கடம்பவன குயில் சொன்னது…

நீங்கள் சொல்லும் புதுபுதுவிஷயங்களும் அறிந்திராத செய்திகளும் ஆர்வமுடன் உங்கள் பக்கத்திற்கு வரவைக்கிறது நண்பரே. வாழ்த்துக்கள்.

Mahan.Thamesh சொன்னது…

வாழ்த்துக்கள் சகோ . தொடர்தும் எழுதுங்கள் / .
நாம் இருவரும் சம காலத்தில் வலையுலகில் நுழைந்தவர்கள் சகோ .

தமிழ்வாசி - Prakash சொன்னது…

அசத்துங்க.... வாழ்த்துக்கள்.

koodal bala சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி கருண் !

koodal bala சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ நன்றி அண்ணே !

koodal bala சொன்னது…

@மைந்தன் சிவா வாழ்த்துக்கு நன்றி மாப்ள !

koodal bala சொன்னது…

@ஹேமா நிறைய எழுதுகிறேன் ..நன்றி ஹேமா !

koodal bala சொன்னது…

@Reverie மிக்க நன்றி நண்பரே !

koodal bala சொன்னது…

@மதுரை சரவணன் நன்றி அண்ணே !

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள். சாரி ஃபார் லேட். இத்தனை நாளா நான் ஆல்ரெடி ஃபாலோயிங்க்னு நினைச்சேன்.. இபோதான் ஃபாலோ. அவ்வ்வ்வ்