சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் நினைத்துப் பார்க்காத ஓட்டு
வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றி பெற்றது .
ஏற்கெனவே நடந்து முடிந்த
உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது கூடங்குளம் அணு உலைப் போராட்டத்தில்
மக்களோடு நானும் இருப்பேன் என்று உணர்ச்சிமயமாக? முதல்வர் ஜெயலலிதா
பேசினார் .ஆனால் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் கூடங்குளம் பிரச்சனை பற்றி
வாயே திறக்கவில்லை .ஆனால் தி.மு.க.தலைவர் கருணாநிதி கூடங்குளம் அணு உலையை
உடனடியாக திறக்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்தார் .ஆனால் அப்பிரச்சாரம்
மக்களிடம் எடுபடவில்லை .வழக்கம்போல் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி மகத்தான
வெற்றி பெற்றது .
தேர்தல் முடிந்த மறுநாளே ஜெயலலிதாவின் உண்மை முகத்தை
கூடங்குளம் மக்களுக்கு தெரிய வைத்தார் .தான் ஏற்கெனவே கூடங்குளம் போராட்டம்
பற்றி தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு முற்றிலும் மாறாக கூடங்குளம் அணு
உலையை உடனடியாக செயல் படுத்தப் படவேண்டும் என்று அமைச்சரவையைக்கூட்டி
தீர்மானம் இயற்றினார் .
உடனடியாக இன்னொரு நாட்டுடன் யுத்தத்திற்கு
தயாராவதுபோல் கூடங்குளத்தில் போலீஸ் மற்றும் ராணுவம் குவிக்கப் பட்டது
.144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது .போராட்டத்தின் முக்கியப்
பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர் .மேலும் பலர் நள்ளிரவில் கைது செய்யப்
பட்டனர் .ஆனால் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்று ஜெ போட்ட திட்டம்
பலிக்கவில்லை .
போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் காலவரையற்ற
உண்ணாவிரதம் இருந்து வருகிறார் .பல்வேறு தடைகளையும் தாண்டி உண்ணாவிரதத்தில்
பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
உதயகுமாரை 24 மணி
நேரத்தில் கைது செய்துவிடுவோம் என்று கூறிய காவல் துறையினர் நான்கு
நாட்களாகியும் இடிந்தகரையை நெருங்கவில்லை .
தற்போது கூடங்குளம் பகுதியில்
குவிக்கப்பட்டுள்ள காவல் படையினருக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காததால்
பெரும்பாலானோர் திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றனர் .அதிலும் குறிப்பாக
பெண் போலீசார் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தின்
பல்வேறு பகுதிகளிலும் பிற மாநிலத் தலை நகரங்களிலும் கூடங்குளம் மக்களுக்கு
ஆதரவாக போராட்டம் வெடித்துள்ளது .
இதன் காரணமாக மீண்டும் கூடங்குளம்
மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய நிலைக்கு ஜெ தள்ளப்படும்
சூழ்நிலை உருவாகி வருகிறது.
11 கருத்துகள்:
உதயகுமார் ஏகப்பட்ட நக்சல் தீவிரவாதிகளை கையில் வைத்து இருக்கிறார் என்பதால் காவல்துறை அவசரபடாமல் பொறுமை காக்கிறது
அது என்னங்க வேளா வேளைக்கு நல்லா சாப்பிட்டுவிட்டு இருப்பது தான் உண்ணாவிரதமா?
@பெயரில்லா இந்திய மக்களின் சொத்துக்களை எல்லாம் அந்நிய நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் நம் தேசத்தை ஆளும் தலைவர்களுக்கும் ? நரம்பில்லாத நாக்கை உடைய உன்னைப் போன்ற நாதாரிகளுக்கும் காந்தியடிகள்கூட நக்சலாகத்தான் காட்சியளிப்பார் ....என்னே நம் தேசத்தின் தலை விதி.....
தாமதித்தாலும் வெகுஜனப் போராட்டமான கூடங்குளம் மக்கள் போராட்டம் வெல்வது உறுதி....இன்குலாப் ஜிந்தாபாத்!
தமிழ் நாடு போலிஸ் இந்த தளத்தில் ஏகப்பட்ட நக்சல் தீவிரவாதிகள் பின்னோட்டம் போடுகிறார்கள். இவனுங்களை பிடிச்சு முட்டிக்கு முட்டி தட்டுங்க
இன்குலாப் ஜிந்தாபாத்...
Vaayilaye vada sudarathu ithu thaan bala...
உதயகுமார் போராட்டம் அல்லது சாப்பாடு சாப்பிட்டுகொண்டு உண்ணாவிரதம் இருக்கவேண்டும்
என்றால் கூடங்குளத்தில் இருக்கவேண்டும் அதைவிட்டு எதற்க்கு இடிந்தகரையில் நாடகம் நடத்துகிறார்.
உண்மைதான் அண்ணா. மிகவும் வருத்தமாக இருக்கிறது. நிறைய மாற்று வழிகள் இருந்தும் அரசு எதையும் கண்டுகொள்ளவில்லையே. ஆனாலும் மக்களின் தொடர் அமைதி போராட்டம் நம்பிக்கை அளிக்கிறது.
இவ்வளவு அவதூறுகளுக்கும் மத்தியில் இந்த போராட்டம் நிலைத்திருப்பது நமது மக்களைக் குறித்து நிறைய நம்பிக்கையை கொடுக்கிறது. மதங்களைக் கடந்து அரசியல் கட்சிகளை ஒதுக்கி மக்களின் உழைப்பில் அவர்கள் பணத்தில் நடக்கும் இந்த போராட்டம் உலகம் முழுக்க போராடும் மக்களுக்கு சிறந்த உந்துசக்தியாக இருக்கும்.
போராட்டம் வெல்லும். வாழ்த்துக்கள்.
"கற்பனாசக்தி மிகுந்த பிளாக்கர் " - என்ற அவார்டை போட்டியே இல்லாத அளவுக்கு அறுதித்தகுதி பெற்று வென்றெடுத்துள்ளார் நமது கூடல் பாலா....அவரின் கற்பனாசக்தி மேலும் பெருகி மண்டையைப் பொத்துக்கொண்டு ஊற்ற ஏசப்பா அருள் புரிந்து அவர் மேல் இறங்க வேண்டுமாய் வேண்டுகிறேன் ஆண்டவரே...கூடல் பாலாவை சித்தப் பிரமையில் இருக்கச் செய்தவரே ..உமக்கு ஸ்தோத்திரம்
இப்படிப் பெயரில்லாத ஏகப்பட்ட அனானிகளை உருவாக்கி பிளாக்கர் உலகத்தை கலங்கடிப்பவரே ...உமக்கு ஸ்தோத்திரம்
கருத்துரையிடுக