31 மார்ச் 2012

தமிழக மின்வெட்டு -மத்திய அரசின் திட்டமிட்ட நாடகம் அம்பலம்!

கடந்த தி. மு. க  ஆட்சியில் தமிழகம் முழுவதும் இரண்டு மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை மின் வெட்டு அமல் படுத்தப் பட்டது .தி.மு.க. வின் தோல்விக்கு மின் வெட்டும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

ஆட்சி மாறியபின்னும் அதே மின் வெட்டு தொடர்ந்தது .இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் கூடங்குளம் அணு மின் நிலையைத்தை மூடக்கோறும் போராட்டங்கள் வலுவடைந்தன .போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் பெரும் ஆதரவு எழுந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதியிலிருந்து கூடங்குளம் அருகிலுள்ள இடிந்தகரையில் 127  பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர் .12  நாட்கள் நடந்த அந்த உண்ணாவிரதத்தில் தினமும் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் பேர் வரை கலந்துகொண்டனர்.கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர் .இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் ,தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் சரவண பெருமாள் ஆகியோரும் உண்டு.

போராட்டம் தீவிரமாவதை உணர்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் அகலும் வரை அணு உலையில் நடைபெறும் வேலைகளை நிறுத்தி வைக்கவேண்டும் என்று தமிழக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் இயற்றினார் .ஆனாலும் தொடர்ந்து அணு மின் நிலையத்தில் வேலை நடைபெற்றுக்கொண்டே இருந்தது.

அதைத் தொடர்ந்து கூடங்குளம் பகுதி மக்கள் அதிரடியாக அணு மின் நிலையத்தை முற்றுகையிட்டு பணிக்கு செல்பவர்களை தடுத்தனர்.தமிழக அரசும் இந்நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்ததால் வேறு வழியின்றி அணு உலைப் பணிகள் முடங்கின.

இதை சகித்துக்கொள்ளாத மத்திய அரசு மத்திய மின் தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வழங்கி வந்த மின்சாரத்தை பெருமளவு குறைத்தது .இதன் காரணமாக நான்கு மணி நேரமாக இருந்த மின்வெட்டு 11 மணி நேரமாக அதிகரித்தது.

இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழக காங்கிரசாரும் ஒருசில ஊடகங்களும் இணைந்து தமிழகத்தின் மின் பற்றாக்குறை தீர ஒரே வழி கூடங்குளம் அணு மின் நிலையத்தை செயல்படுத்துவதுதான் என்று பரப்புரை செய்தன .வழக்கம் போல ஏமாந்த தமிழர்கள் பலர் அணு உலையை எதிர்த்து வந்த தங்கள் போக்கை மாற்றி அணு உலைக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர் .

இதன் காரணமாக அணு உலையை எதிர்த்து போராடிய மக்களுடனோ போராட்டக்குழுவினர் அமைத்த நிபுணர் குழுவுடனோ எந்த ஒரு பேச்சு வார்த்தையும் மேற்கொள்ளாமல் தமிழக முதல்வர் ஜெயலலிதா அணு உலையை திறக்க ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார் .தொடர்ந்து கூடங்குளம்  பகுதியில்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு   போராட்டக்காரர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு கூடங்குளத்திளிருந்து வெகுதூரத்திலிருக்கும் கடலூர் மற்றும் திருச்சி மத்திய சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர்.


இந்நிலையில் சமீபத்தில் தென்கொரிய தலை நகர் சியோலில் நடைபெற்ற அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் பிரதமர் கிலானியை சந்தித்தார். அவ்வமயம் பாகிஸ்தானுக்கு 5000  மெகாவாட் மின்சாரம் வழங்க மன்மோகன் சிங் ஒப்புதல் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக உபரியாக மின்சாரமிருந்தும் கூடங்குளம் அணு உலையைத் திறக்கும் நோக்கத்திற்காக வேண்டுமென்றே தமிழகத்திற்கு மின்சாரத்தை நிறுத்தி வைத்திருப்பது  தற்போது அம்பலமாகியுள்ளது.

8 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அரசின் பித்தலாட்டங்கள் ஒவ்வொன்றாய் வெளியே வந்து நாறிகிட்டு இருப்பதை நினைத்தால் சிரிப்பும் வேதனையுமாதான் இருக்கு கொய்யால....!!!

Prabu Krishna சொன்னது…

கேவலமான அரசாங்கம். நம்ம மக்களுக்கு ஷாக், அவிங்களுக்கு கரண்டு. கேட்டா பக்கத்து நாட்டுடன் நல்லுறவு என்று சொல்லுவார்கள்.

Unknown சொன்னது…

நல்ல பதிவு!பாலா!
ஆனால் தலைப்பில் மத்திய
என்பதோடு மாநில என்பதையும்
சேர்த்திருந்தால் சிறப்பாக இருக்கும்
என் கருத்து!
முன்பே மறுமொழியில் சுட்டியுள்ளேன்
இன்றுதான் தங்கள் வலை
திறந்தது.

புலவர் சா இராமாநுசம்

சென்னை பித்தன் சொன்னது…

வெட்கக்கேடு

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

ஓட்டு போட்ட நாம் வெத்து வேட்டு ஆயிட்டோம்.....

MoneySaver சொன்னது…

நல்ல பதிவு...

http://www.dunkindonutscoupons.com

koodal kanna சொன்னது…

மிக மிக அருமையான அற்புதமான பதிவு நண்பரே !

koodal kanna சொன்னது…

மிக மிக அருமையான அற்புதமான பதிவு நண்பரே !