சமீப காலமாக பள்ளிக் குழந்தைகள் இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்த
வண்ணம் உள்ளன. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழாமல் தடுக்கவேண்டுமானால்
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.
இரண்டு நாட்களுக்கு முன்பாக தொழில் நிமித்தம் நான் நாகர்கோவில் சென்றுவிட்டு வரும் வழியில் கன்னியாகுமரி அருகிலுள்ள அஞ்சுகிராமம் என்ற ஊரில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்து நின்றேன். அப்போது மாலை சுமார் 5 மணியளவில் ஒரு நகரப் பேருந்து, பேருந்து நிலையத்தினுள் நுழைந்தது. பேருந்து உள்ளே நுழையவும் சுமார் 30 மாணவர்கள் வேகமாக ஓடிச் சென்று கும்பலாக பேருந்தினுள் ஏற முற்பட்டனர். இத்தனைக்கும் அப்போது பேருந்து முழுமையாக நிறுத்தப் படவில்லை. பேருந்தில் ஏற முற்பட்ட மாணவர்களும் 5 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயில்பவர்கள் போல் தோற்றமளித்தனர். அவர்கள் முட்டி மோதிக்கொண்டு பேருந்தினுள் ஏற முற்பட்டபோது ஒரு கணம் எனது நெஞ்சு பட படவென அடித்துக்கொண்டது. நெரிசலில் ஏதாவது ஒரு மாணவன் தவறி வண்டி சக்கரத்தில் சிக்கினால் என்னவாகும்.
எனவே பள்ளிப் பேருந்துகளில் செல்லும்
மாணவர்கள் மீது கவனம் செலுத்துவது போல் இதர வாகனங்கள் மூலமாக பயணம்
செய்யும் மாணவர்களும் பாதுகாப்பாக பயணிக்க தகுந்த ஏற்பாடுகள்
செய்யப்படவேண்டும்.
வந்தபின் வருந்துவதை விட வருமுன் காப்பது சிறந்ததல்லவா.
8 கருத்துகள்:
எனவே பள்ளிப் பேருந்துகளில் செல்லும் மாணவர்கள் மீது கவனம் செலுத்துவது போல் இதர வாகனங்கள் மூலமாக பயணம் செய்யும் மாணவர்களும் பாதுகாப்பாக பயணிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். // ஆமாம்..
//வருமுன் காப்பது // இது நமக்குப் பழக்கமேயில்லையே..
பிரச்சனைகளும் இழப்புகளும் வந்தபின்தானே எச்சரிக்கையாய் இருப்பது வழக்கம்.
உண்மைதான் மாணவர்கள் படிகளில் தொங்கியும் செல்கின்றனர்! இதற்கு போதுமான பேருந்துகள் இல்லாமையும் ஒரு காரணம்! பூனைக்கு மணிகட்டுவது யார்?
இன்று என் தளத்தில்
தளிர்ஹைக்கூ கவிதைகள்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html
சரியா சொன்னீங்க .
உண்மைதான் பாலா!
அரசு இதில் உடனடி கவனம்
செலுத்துதல் அவசியம்.
உடல் நலம் எப்படி?
/// வருமுன் காப்பது சிறந்ததல்லவா. ///
உண்மை தான்...
"இதெல்லாம் ஒரு ஸ்டைல்...!" என்னும் எண்ணத்தை விட வேண்டும்...
கொள்ளை என்பதே பிரதானம் என்பது மாறனும்!
அவசியம் விரைவில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விழிப்புணர்வுப்
பகிர்வு !....மிக்க நன்றி பகிர்வுக்கு
தொடர வாழ்த்துக்கள் .
கருத்துரையிடுக