17 ஜூன் 2011

பதிவர்களுக்கு Comment களால் கிடைக்கும் 10 பரிசுகள் !

பதிவர்களுக்கு   இடுகைகளை விட comment  மூலம் அதிக நன்மைகள் உள்ளன.சில வலைப்  பூக்களில்  இடுகை மிகச் சிறியதாக இருக்கும் ஆனால் கமெண்ட்கள் அதிகமாக இருக்கும் .

நல்ல இடுகைகளுக்கும் கமெண்ட்கள் கிடைக்கவில்லையே  என்று ஏங்கும் பதிவர்கள் இருக்கிறார்கள் .அதிக கமெண்ட்கள் கிடைக்க பதிவர்கள் என்ன செய்யவேண்டும் அதற்கு கிடைக்கும் பத்து பரிசுகள் என்னென்ன என்பதை பார்ப்போமா .

1 .முதலில் உங்களுக்கு 5  கமென்ட் கிடைக்க வேண்டுமானால் நீங்கள் குறைந்தது பத்து பதிவுகளுக்காவது கமென்ட் இட்டிருக்கவேண்டும் .

2 .கமென்ட் இடுவதால் உங்களுக்கு பல நண்பர்கள் கிடைப்பார்கள் .மேலும் நண்பர்களுக்கிடையே ஒரு பிணைப்பு இருந்துகொண்டே இருக்கும் .


3 . நீங்கள் கமென்ட் இடுவதன் மூலம் கமென்ட் பெறுபவர்கள் பலர் உங்கள் தளத்திற்கு வருவார்கள் .இதன் மூலம் வாசகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் .
டிஸ்கி :சில பதிவர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வரலாம் கவனம் தேவை

4 .Template  கமென்ட் அளிக்காமல் சுவாரசியமான கமெண்ட்களை அளியுங்கள் .அது உங்கள் அறிவை வளர்க்கும் .
டிஸ்கி :அறிவுள்ள பதிவர்கள் பலர் அதிகமாக சிந்தித்து கில்மா பதிவர்களாகவும் ஆகியிருக்கிறார்கள் .

5 .பதிவு எழுதும் போது வித்தியாசமான கமெண்ட்கள் எழுதத் தூண்டும் வகையில் எழுதுங்கள் .
டிஸ்கி :அதற்காக கெட்ட வார்த்தைகளாகவும் ஓவர் கில்மாவாகவும் எழுதாதீர்கள்

6 .சில நேரங்களில் நீங்கள் இடும் கமெண்ட்கள் புதிய இடுகைகளுக்கு ஆலோசனைகளை கொடுக்கும் .
டிஸ்கி :இப்ப புரியுதா சிலபேர் ஒரு நாளைக்கு ஐந்தாறு பதிவுகள் போடுவதன் ரகசியம்

7 .உங்கள் திறமையான கமெண்ட்களை பிற தளங்களில் வாசித்த பலர் உங்கள் தளத்திற்கு வர வாய்ப்பு உள்ளது .
டிஸ்கி :இவனைத்தான் தேடிக்கிட்டிருந்தேன் இவன்தானா அவன் என்று சிலர் எண்ணவும் வாய்ப்பு உள்ளது .

8 .உங்களுக்கு வரும் கமெண்ட்களுக்கு நீங்கள் பதில் கமென்ட் அளித்தால் இன்னும் அதிக கமென்ட் வர வாய்ப்புள்ளது .

9 .கமெண்ட்களை சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் அளியுங்கள் .
டிஸ்கி: பக்கம் பக்கமாக அறுவை கமெண்ட்கள் வாங்கி வாசகர்களை இழந்த பதிவர்களும் உண்டு .

10 .ஒரே தளங்களுக்கு கமென்ட் அளிப்பதோடு தினமும் புதியவர்களுக்கும் கமென்ட் அளித்து ஊக்கப்படுத்துங்கள் .
டிஸ்கி :ஊக்கப்படுத்துகிறேன் என்று சொல்லி ஒரே கமெண்டில் ஓட வைத்துவிடாதீர்கள் .


நான் கொடுத்த ஆலோசனைகளால் நாள் முழுவதும் கணினியே கதியாக கிடந்து வீட்டிலும் அலுவலகத்திலும் அடி வாங்குபவர்களுக்கு நான் பொறுப்பல்ல .

46 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

எல்லாரும் உஷாராத்தான் இருக்காங்க..

சக்தி கல்வி மையம் சொன்னது…

வடை பற்றி எதுவும் போடலியே?

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *!ஆமாங்க முக்கியமானத விட்டுட்டேன் .முதல் கமென்ட் போடுறவுங்களுக்கு வடை உண்டு .டிஸ்கி :வடை மட்டும்தான் உண்டு ஆளாளுக்கு இஷ்டத்துக்கு கேக்கப்படாது ....

S. Robinson சொன்னது…

உண்மைய சொல்லிட்டிங்களே.....................................
நான் இனுமேதான் கமென்ட் எழுத ஆரம்பிக்கணும்.
தகவலுக்கு நன்றி..........

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ஃஃஃஃஃஃஃ.முதலில் உங்களுக்கு 5 கமென்ட் கிடைக்க வேண்டுமானால் நீங்கள் குறைந்தது பத்து பதிவுகளுக்காவது கமென்ட் இட்டிருக்கவேண்டும் .
////////////


ரைட்டு...

நம்ம கலாச்சாரமே மொய்க்கு மொய்தானுங்க..
(இது சிபி சொன்னது..)

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

//////
நீங்கள் கமென்ட் இடுவதன் மூலம் கமென்ட் பெறுபவர்கள் பலர் உங்கள் தளத்திற்கு வருவார்கள் .இதன் மூலம் வாசகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் .
டிஸ்கி :சில பதிவர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வரலாம் கவனம் தேவை //////

டாய்.. மனோ கிண்டல்பண்ற பிச்சிபுடுவேன் பிச்சி....

கூடல் பாலா சொன்னது…

@சு. ராபின்சன்அதுதான் எழுத ஆரம்பிச்சுட்டீங்கல்ல நிறுத்திடாதீங்க ........

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

///////
Template கமென்ட் அளிக்காமல் சுவாரசியமான கமெண்ட்களை அளியுங்கள் .அது உங்கள் அறிவை வளர்க்கும் ./////////

டெம்பிளட் கமாண்ட என்பது நேரத்தின் கட்டாயமே தவிர வேறொன்றும் இல்லை...

கண்டிப்பாக புதிய பதிவர்கள் வி்ததியாசமான முறையில் பின்னுட்டம் தந்தால் பயன்தரும்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

/////
உங்கள் திறமையான கமெண்ட்களை பிற தளங்களில் வாசித்த பலர் உங்கள் தளத்திற்கு வர வாய்ப்பு உள்ளது .///////

இது உண்மைதான்..

அப்படிதான் நிறைய பேரை என்தளத்துக்கு இழுத்திருக்கிறேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

/////
உங்களுக்கு வரும் கமெண்ட்களுக்கு நீங்கள் பதில் கமென்ட் அளித்தால் இன்னும் அதிக கமென்ட் வர வாய்ப்புள்ளது .

//////////


பதிலலிப்பது மற்றவருக்கு மரியாதைதருவது போன்று இது கண்டிப்பாக அவசியம்..
அதேபோல் நம்முடைய கமாண்ட் எண்ணிக்கையும் அதிகரிக்கும்..

தமிழ்மணம் ரேங்க் போடும் போது கமாண்டும் கணக்கில் கொள்ளப்படுகிறது...

கூடல் பாலா சொன்னது…

@ # கவிதை வீதி # சௌந்தர் # என்னது மனோ அண்ணன் அரிவாளோட கிளம்பிட்டாரா....எஸ் கே..................ப்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

மற்றும் இன்னும் இருப்பதும் நல்ல அறிவுரைகள் தான் புதியவர்கள் பயன்படுத்தினால் கண்டிப்பாக பரிசு கிடைக்கும்....

வாக்குகள் மற்றும் வாழ்த்துகள்..

கூடல் பாலா சொன்னது…

@ # கவிதை வீதி # சௌந்தர் \\\நம்ம கலாச்சாரமே மொய்க்கு மொய்தானுங்க..(இது சிபி சொன்னது..)\\\ அவர் குடுக்கிற உதாரணத்தை அவரால்தான் பீட் பண்ண முடியும் ..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தமிழ்மணத்தில் மட்டும் ஓட்டு போடமுடியவில்லை பிறகு வந்து போடுகிறேன்...

சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…

வணக்கம் பாலா சார்,

//நான் கொடுத்த ஆலோசனைகளால் நாள் முழுவதும் கணினியே கதியாக கிடந்து வீட்டிலும் அலுவலகத்திலும் அடி வாங்குபவர்களுக்கு நான் பொறுப்பல்ல //

இதுதாம்ப்பா இப்போ நம்ப வீட்டுலே நடக்குது.

அருமையான பதிவுகளைக் கண்டேன் இனி தொடர்ந்து வருகிறேன் தோழரே..

நன்றி..

அன்பன் சிவ. சி.மா.ஜா

http://sivaayasivaa.blogspot.com

உலக சினிமா ரசிகன் சொன்னது…

நீங்க என்னோட வலைப்பக்கத்துக்கு வரவேண்டாம்.
கமெண்டும் போடவேண்டாம்.
ஆனா இதெல்லாம் நடந்துருமோன்னு பயமாயிருக்கு...

Unknown சொன்னது…

ஒவ்வொரு பதிவும் சும்மா கும்முன்னு இருக்கு மச்சி வாழ்த்துக்கள்

கடம்பவன குயில் சொன்னது…

அருமையான ஆலோசனைகள். அசத்தலான டிஸ்கிகள்.
நன்றி தோழரே.

கடம்பவன குயில் சொன்னது…

தமிழ்மணத்தில் no such post என்று வருகிறதே. சற்று கவனியுங்கள் தோழரே.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

ஆஹா அருமையான மேட்டர்! பாலா நீங்க பேசாம ‘ கமெண்டாலஜி’ அப்டீன்னு ஒரு புத்தகம் எழுதலாம்! ஹி ஹி ஹி !

நிரூபன் சொன்னது…

சகோ, உங்கள் பதிவில் தமிழ் மணம் ஏதோ திருவிளையாடல் செய்கிறது என்று நினைக்கிறேன், ஓட்டுப் போட முடியவில்லை.

நிரூபன் சொன்னது…

முதலில் உங்களுக்கு 5 கமென்ட் கிடைக்க வேண்டுமானால் நீங்கள் குறைந்தது பத்து பதிவுகளுக்காவது கமென்ட் இட்டிருக்கவேண்டும் .//

ஐயோ, ஐயோ...ஐயோ...
என்ன ஒரு டெரர் தனம். ஆனாலும் பதிவுலக யதார்த்தத்தினை அப்படியே படம் பிடித்து எழுதியுள்ளீங்க.

நிரூபன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நிரூபன் சொன்னது…

டிஸ்கி :இப்ப புரியுதா சிலபேர் ஒரு நாளைக்கு ஐந்தாறு பதிவுகள் போடுவதன் ரகசியம்//

அவ்....இதுவா மேட்டரு, அப்போ இனிமே நாமளும் ஒரு நாளைக்கு ஐந்தாறு எழுதத் தொடங்கிட வேண்டியது தான்.

நிரூபன் சொன்னது…

நான் கொடுத்த ஆலோசனைகளால் நாள் முழுவதும் கணினியே கதியாக கிடந்து வீட்டிலும் அலுவலகத்திலும் அடி வாங்குபவர்களுக்கு நான் பொறுப்பல்ல //

என்ன ஒரு உள் குத்து, என்ன ஒரு டெடர் தனம்,
கமெண்ட் போடுவது பற்றிய பல மர்மங்களை உங்களின் பதிவினூடாகப் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி சகோ.

கூடல் பாலா சொன்னது…

@சிவ.சி.மா. ஜானகிராமன்வாங்க வாங்க வந்துகிட்டே இருங்க ........

கூடல் பாலா சொன்னது…

@உலக சினிமா ரசிகன்நடந்திருச்சே ......

கூடல் பாலா சொன்னது…

@விண்வெளிஉங்க ஆதரவுதான் காரணம்

கூடல் பாலா சொன்னது…

@கடம்பவன குயில்தமிழ் மணம் கிடக்குது ....நீங்க வந்ததே பெரிய விஷயம் ....

கூடல் பாலா சொன்னது…

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிஇந்த சப்ஜக்ட் எழுதுறதுக்கு காரணமே நீங்க உள்ளிட்ட சில பதிவர்கள்தான் ......நான் விரும்பி படிக்கிற கமெண்ட்களில் உங்க கமெண்ட்களுக்கு முக்கிய இடம் உண்டு....

கூடல் பாலா சொன்னது…

@நிரூபன்\\\\சகோ, உங்கள் பதிவில் தமிழ் மணம் ஏதோ திருவிளையாடல் செய்கிறது என்று நினைக்கிறேன், ஓட்டுப் போட முடியவில்லை.\\\ ஓட்டா அண்ணே முக்கியம் ...உங்களோட ஒரு கமென்ட் பத்து ஓட்டுக்கு சமம் .

கூடல் பாலா சொன்னது…

@நிரூபன்\\\அவ்....இதுவா மேட்டரு, அப்போ இனிமே நாமளும் ஒரு நாளைக்கு ஐந்தாறு எழுதத் தொடங்கிட வேண்டியது தான்.\\\ படிக்கிறதுக்கு நாங்க ரெடி

கூடல் பாலா சொன்னது…

@நிரூபன்\\\என்ன ஒரு உள் குத்து, என்ன ஒரு டெடர் தனம், கமெண்ட் போடுவது பற்றிய பல மர்மங்களை உங்களின் பதிவினூடாகப் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி சகோ.\\\ சொந்த அனுபவம்ண்ணே..

Mahan.Thamesh சொன்னது…

ரைட்டு . பதிவுலக உண்மைகள் அப்படியே பகிர்துள்ளீர்கள்

K.s.s.Rajh சொன்னது…

கமெண்ட் போடுவது பற்றிய அருமையான அசத்தல் பதிவு நண்பரே.

Naseem சொன்னது…

ஐடியா நல்லா இருக்கு நண்பரே ! (உங்களுக்குக் கமென்ட்ஸ் போட்டு இந்த ஃபார்முலாவைத் தொடங்கியிருக்கிறேன் என நினைக்க வேண்டாம் !!!)

ஹேமா சொன்னது…

ம்...நல்லாத்தான் இருக்கு !

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>டிஸ்கி :அறிவுள்ள பதிவர்கள் பலர் அதிகமாக சிந்தித்து கில்மா பதிவர்களாகவும் ஆகியிருக்கிறார்கள் .



எனி உள்குத்து? ஹா ஹா

கூடல் பாலா சொன்னது…

@சி.பி.செந்தில்குமார்நோ டவுட் ...

கூடல் பாலா சொன்னது…

@ஹேமாகுட் கமென்ட்

கூடல் பாலா சொன்னது…

@Kss.Rajhவருகைக்கும் கருத்துக்கும் நன்றி .....இப்போ நான் போட்டிருக்கிறது டெம்ப்ளேட் கமென்ட் ....

கூடல் பாலா சொன்னது…

@ந‌ண்ப‌ன்நல்லது .....

குறையொன்றுமில்லை. சொன்னது…

கமெண்ட் போடுவதிலும் இவ்வளவு உள் விஷயங்கள்
இருக்கே. நல்ல விஷயம்தான்.

Riyaash சொன்னது…

ரொம்ப நன்றி

F.NIHAZA சொன்னது…

வளர்ந்த நீங்கலெல்லாம் ஈஸியா சொல்லிடுவீங்க...
புதிதாய் முளைத்த எங்களை யாரும் கண்டுகொள்வதே இல்லை...
என்ன பண்ண இந்த டிப்ஸ் உதவுமா????...தேரழா!!!!!
ட்ரை பண்ணிட்டேன்
...ம்ஹீம்....

velufeedback சொன்னது…

5 நன்றி