19 செப்டம்பர் 2013

நரேந்திர மோடி நல்லவரா? கெட்டவரா?

கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணி அரசிடம் பெற்ற  மோசமான அனுபவங்கள் கண்டிப்பாக அடுத்த தேர்தலில் ஆட்சி மாற்றம் செய்தே தீரவேண்டும் என்ற எண்ணத்திற்கு பெரும்பாலான மக்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக சமூக தளங்களில் இக்கருத்து மேலோங்கி இருப்பதை காண முடிகிறது. 


ஆட்சி மாற்றம் வேண்டுமானால் அதற்கு நரேந்திர மோடியை பிரதமராக்குவதுதான் ஒரே வழி என்று ஒரு தரப்பினரும், ஆட்சி மாற்றம் வேண்டும்தான் ஆனால் அதற்காக நரேந்திர மோடியை பிரதமராக்கினால் நாட்டின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று ஒரு தரப்பினரும் கூறி வருகின்றனர். 

நரேந்திர மோடியை ஆதரிப்பவர்கள் கூறும் காரணம், குஜராத்தில் மோடியின் அபார நிர்வாகத் திறமையால் அம்மாநிலம் அபார வளர்ச்சியடைந்துள்ளது அவரை பிரதமராக்கினால் இந்தியா முழுமையும் அதே நிலைமையை எட்டும் என்பது. 

மோடியை எதிர்ப்பவர்கள் கூறும் காரணம் குஜராத்தில் வளர்ச்சி என்று ஊடகங்கள் பொய் பிரச்சாரம் செய்கின்றன என்றும் குஜராத் கலவரம் மன்னிக்கமுடியாதது என்றும் கூறுகின்றனர். மூன்றாவது அணி மூலமாகத்தான் இந்தியாவிற்கு நல்லாட்சி கொடுக்க முடியும் என்பதும் இவர்களின் கருத்து. 

காங்கிரசுக்கு எதிரானவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த கருத்து வேறுபாடு காங்கிரசுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

காரணம் பாஜக வை தவிர வேறு எந்த கட்சியையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்கிற தைரியம் காங்கிரசுக்கு உண்டு. 

கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றதில் கொண்டுவரும் தீர்மானங்களை தொடக்கத்தில் தீவிரமாக எதிர்க்கும்  மாநிலக்கட்சிகள் ஓட்டெடுப்பு என்று வரும்போது காங்கிரசுக்கு ஆதரவாக சென்றுள்ளதைப் பார்த்திருக்கிறோம். 

இதன்மூலம் காங்கிரசைப் போன்றே பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் மாநிலக் கட்சிகள் பலவற்றை காண முடியும். 

எனவே இந்த சுயநல மாநில கட்சிகளுக்கு ஓட்டளிப்பதும் காங்கிரசுக்கு ஓட்டளிப்பதும் ஒன்றுதான். 

நரேந்திர மோடி நல்லவரா? கெட்டவரா? என்று என்னிடம் கேட்டால் அதற்கு நான் கூறும் பதில் "நாயகன் கமல்" கூறும் பதில்தான்.

12 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஹா... ஹா... ஹே... ஹெஹெ... ம்..ம்...

Barari சொன்னது…

நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் தப்பு செய்ய வேண்டும் என்பது நாயகன் கருத்து.ஆக இந்தியாவுக்கு நன்மை செய்ய இரண்டாயிரம் பேரை கொன்று பல ஆயிரம் மக்களை வீடிழக்க செய்த மோடி வர வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பமா பாலா?

விஜய் சொன்னது…

ஆம் ஆத்மி என்ற ஒரு கட்சி இருந்ததே..

கூடல் பாலா சொன்னது…

@Barari தற்போது வேரூன்றியுள்ள ஊழல் களைகளை களைவதற்கு இது சிறந்த வழியாக இருக்கும் என எண்ணுகிறேன்....

கூடல் பாலா சொன்னது…

@விஜய் டெல்லி மாநில தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என கருதப்படுகிறார்கள்.....உடனடியாக அவர்கள் ஆட்சிக்கு வராவிட்டாலும் அவர்கள் முக்கியமானவர்கள்...

சக்தி கல்வி மையம் சொன்னது…

நரேந்திர மோடி நல்லவரா? கெட்டவரா? என்று என்னிடம் கேட்டால் அதற்கு நான் கூறும் பதில் "நாயகன் கமல்" கூறும் பதில்தான்.// சபாஷ்...

வெற்றிவேல் சொன்னது…

நல்லது நடந்தால் மகிழ்ச்சி தான்...

நல்ல பதிவு...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சொத்தை கத்திரிக்காய்க்கு முத்திய கத்திரிக்காய் மேல்! என்ன செய்வது நமக்கு இருப்பது இதுவா அதுவா? என்று ரெண்டு ஆப்ஷன் தான்!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கூடல் பாலா - அரசியலில் நல்லவர் கெட்டவர் என்றெல்லாம் இல்லை - எவ்வளவு தான் திறமை வாயந்தவராக இருந்தாலும் - நாட்டை ஆள்வதுடன் மட்டுமல்ல - உட்கட்சிப் பிரச்னைகள் - கட்சிக்காரர்களீன் ஆசாபாசங்கள் என் அனைத்தையும் எதிர் கொள்ள வேண்டும் . எல்லோரும் ஒன்று தான் - பொறுத்திருந்து பார்ப்போம் - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

Unknown சொன்னது…

இருவருக்கும் மாற்று நாம் காண வேண்டும்

சூனிய விகடன் சொன்னது…

கூடங்குளம் அனு உலய இழுத்து இழுத்து இழுத்து இழுத்து இழுத்து இழுத்து இழுத்து இழுத்து இழுத்து இழுத்து இழுத்து இழுத்து இழுத்து மூடும் கட்ச்ஹிக்கு மட்டும் தான் ஓட்டு என்ரு கூத்தன்குலி இடிஞ்சகரை மக்கள் முடிவு செய்ததைப் பொல இன்திய மக்களும் எல்லோரும் முடிவு செய வேண்டும். மட்ர ஊழல்கல், கொலைகல், முன்னேற்றங்கள் எல்லாம் னினைத்து குழப்பிக்கொள்ளக்கூடாது என்பது தான் என் கருத்து.

Dino LA சொன்னது…

அருமை