சென்னை மவுண்ட்ரோடு ,மதியம் 12 மணி ,உடம்பு பற்றி எறிவது போல் வெப்பம் ,நாக்கு வறண்டு உடல் தளர்ந்து மயக்கம் வரும் வேளையில் ஒரு இளநீரோ அல்லது தர்பூசனியோ சாபிட்டால் கொஞ்சம் இதமாக இருக்கும் .ஆனால் இந்த நிலையில் ஒருவன் சூடா ஒரு கப் காப்பி வேண்டும் என்று கேட்டால் அவனை ஒருவேளை பைத்தியமாக இருப்பானோ என்று எண்ண தோன்றும். பாரத பிரதமர் மன்மோகன் சிங்கை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது .உலக வெப்பமயமாதலை தடுக்க அணுமின் நிலையங்களால்தான் முடியும் என்று சில நாடுகள் அணுமின் சக்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தன .அவற்றுள் சமீபத்தில் அணு விபத்தால் நிலை குலைந்திருக்கும் ஜப்பான் நாடும் ஒன்று .
ஜப்பான் அணு விபத்துக்கு பிறகு ஜப்பான் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளும் தங்கள் அணுசக்தி திட்டங்கள் குறித்து மறுபரிசீலனை செய்ய தொடங்கியுள்ளன .சீனா தற்போது கட்டப்பட்டு வரும் மற்றும் புதிதாக கட்ட திட்டமிட்டுள்ள அனைத்து அணுமின் நிலையங்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது ஜெர்மனி பழமையான 7 அணு உலைகளை தற்காலிகமாக மூடியுள்ளது இவற்றில் சிலவற்றை நிரந்தரமாக மூடவும் பரிசீலித்து வருகிறது .இங்கிலாந்து 30 பில்லியன் பவுண்ட் செலவில் விரிவாக்கத் திட்டமிட்டிருந்த அணு சக்தி திட்டங்களை மறு பரிசீலனை செய்ய தொடங்கியுள்ளது உலகில் அதிக அளவு அணு ஆற்றலை நம்பியிருக்கும் பிரான்ஸ் நாட்டின் பாராளு மன்றத்தின் இரு அவைகளிலும் அணுமின் திட்டங்களின் எதிகாலம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது .இந்த ஒரு சூழ்நிலையில் புதிய அணு மின் நிலையங்களை விரைவாக அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் ஒரே நாடு இந்தியாதான் .16-04-2011 அன்று பாரத பிரதமர் மன்மோகன் சிங் கஜகஸ்தான் நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளார் .மகாராஷ்டிர மாநிலம் ஜைதாபூரில் நிலநடுக்க ஆபத்து நிறைந்த பகுதியில் பத்து அணுமின் நிலையங்கள் அமைக்க வழங்கப்பட்டுள்ள சுற்று சூழல் அனுமதியை மறு பரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய சுற்று சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இரு நாட்களுக்கு முன் கூறியுள்ளார் .கூடங்குளத்தில் சுனாமி ஆபத்து நிறைந்த கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இரண்டு அணு உலைகள் போக மேலும் இரு அணு உலைகளுக்கான பணிகள் மக்கள் எதிர்ப்பையும் மீறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது .உலக நாடுகள் அனைத்தும் அணு சக்தி திட்டங்களை மறு பரிசீலனை செய்து வரும் வேளையில் மரபு சார எரி சக்தி வளங்கள் நிறைந்த இந்தியாவில் மத்திய அரசு அணு சக்தி திட்டங்களில் ஆர்வம் காட்டி வருவது சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக