நல்ல முறையில் இயங்கிக்கொண்டிருக்கும் கணினி திடீரென்று வைரஸ் மூலமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ பழுதடைந்துவிட்டால் உடனடியாக நாம் பின்பற்ற வேண்டியது விண்டோஸ் நமக்கு கொடுத்திருக்கும் ஓர் எளிய வழி SYSTEM RESTORE.
இதை நாம் செயல் படுத்துவதற்கு முன்பாக system restore என்றால் என்ன என்பதை அறியவேண்டும் .
உதாரணமாக இன்று பத்தாம் தேதி என்று வைத்து கொள்ளுவோம் நேற்று முதல் கணினி சரியாக இயங்கவில்லை அப்படியானால் எட்டாம் தேதி அல்லது அதற்கு முன்பிருந்த நிலைக்கு நமது கணினியை கொண்டு செல்ல வேண்டும் .
இதை நாம் செயல் படுத்துவதற்கு முன்பாக system restore என்றால் என்ன என்பதை அறியவேண்டும் .
system restore என்பது நமது கணினி பழுதடைவதற்க்கு முன்பு என்ன நிலையில் இருந்ததோ அந்த நிலைக்கு நமது கணிணியினுடைய settings களை மாற்றி அமைப்பது ஆகும் .
உதாரணமாக இன்று பத்தாம் தேதி என்று வைத்து கொள்ளுவோம் நேற்று முதல் கணினி சரியாக இயங்கவில்லை அப்படியானால் எட்டாம் தேதி அல்லது அதற்கு முன்பிருந்த நிலைக்கு நமது கணினியை கொண்டு செல்ல வேண்டும் .
system restore செய்ய கணினியை safe mode ல் on செய்ய வேண்டும் .safe mode ல் on செய்ய கணினியை on செய்தவுடன் F8 கீயை அழுத்தவேண்டும் .உடனே இப்படி ஒரு தோற்றம் வரும்
இதில் safe mode என்பதை தேர்ந்தெடுத்து enter பட்டனை அழுத்த வேண்டும்.இப்போது கணினி safe mode ல் இயங்க தொடங்கியிருக்கும் .இப்போது கீழ்க்கண்ட படத்தில் தொன்றுகிறவாறு system restore தேர்வு செய்ய வேண்டும் .
அதன் பிறகு கீழ்க்கண்டவாறுதேர்வுசெய்து next அழுத்தவேண்டும் எந்ததேதிகளுக்கு உங்கள் கணினியை restore செய்யமுடியுமோ அந்த தேதிகள் தடிமனாகதெரியும் .அதில் சமீபத்தில் உள்ள நாளை தேர்வு செய்து next அழுத்தவேண்டும் .உங்கள் கணினி அதுவாகவே restart ஆகும் .அதன் பின்னர் உங்கள் கணினியின் பிரச்சினை அநேகமாக சரி செய்யபட்டிருக்கும் .
இதில் கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால் நீங்கள் restore செய்யும் தேதிக்கு பின்பு கணினியில் copy செய்த தேவையான கோப்புகளை backup எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும் .
பயன்படுத்தி பாருங்கள் ,கருத்துக்களை கூறுங்கள். இத்தளத்தை நண்பர்களிடம் பகிருங்கள். ஓட்டளித்தால் பலபேருக்கு இது உபயோகமாக இருக்கும் . .
1 கருத்து:
நல்ல பதிவு, இந்த வசதி Xp-ல் இருப்பது எனக்குத் தெரியாது, நண்பர்களுக்கும் சொல்கிறேன், [Xp யில் கிராஷ் ஆனால் இதைப் பயன்படுத்த முடியுமா?] நன்றி.
கருத்துரையிடுக