29 ஏப்ரல் 2011

அணு உலைகளை எதிர்ப்பதற்கு 10 காரணங்கள் ...

       ஜப்பானில் நிகழ்ந்துள்ள அணு உலை விபத்திற்கு பிறகு அணு உலைகளுக்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றிருக்கின்றன .வழக்கம் போல பணம் சம்பாதிப்பதை மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்கும் முதலாளித்துவம் அணு உலைகளால் பாதிப்பில்லை என்று கூறி வருகிறது .ஆனால் சுற்று சூழல் ஆர்வலர்களும் விஞ்ஞானிகளும் இனியும் அணு உலைகளை மின் தேவைக்காக நம்பியிருப்பது முட்டாள்தனம் என்று கூறி வருகிறார்கள் .பல்வேறு விதத்திலும் ஆராயும்போது எந்த ஒரு வகையிலும் அணு உலைகள் நாட்டிற்கோ ,மக்களுக்கோ நன்மை தருபவை இல்லை என்பது விளங்குகிறது .

இப்போது அந்த பத்து காரணங்கள் .

1 . அணு மின் நிலையங்கள் என்றாலே முதலில் அனைவருக்கும் நியாபகத்திற்கு வருவது விபத்துதான். அதிகமான எண்ணிக்கையில் விபத்துக்கள் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு விபத்தும் பல நூறு ஆண்டுகளுக்கு ஆறாத ரணத்தை ஏற்படுத்திவிடுகின்றன .செர்நோபில் அணு உலை விபத்தால் இன்றளவும் பிறக்கும் குழந்தைகள் குறைபாட்டோடு பிறக்கின்றன .    ஜப்பான் அணு விபத்தால் ஏற்படும் பாதிப்புகள் இனி வரும் நாட்களில்தான் முழுமையாக தெரிய வரும் .விபத்துக்கள் இல்லாமல் அணு உலைகளை இயக்க முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது .
 
2 .அதிக அளவிலான விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன .ஒரு இடத்தில் அணு உலை அமைக்க 3000  முதல் 5000  ஏக்கர் வரை நிலம் கையகப்படுத்தப்படுகிறது .அணு உலைக்காக கையகப்படுத்தும் நிலத்தை அணு மின் நிலையம் அமைந்த பின்பு வேறு எந்த நோக்கத்திற்க்காகவும் பயன்படுத்த முடியாது .

3 . அணு உலைகளில் விபத்து நேராவிட்டாலும் கூட அணு உலைகளிலிருந்து 30  கிலோ மீட்டர் சுற்றளவுக்குள்  வசிக்கும் மக்களுக்கு புற்று நோய், மரபணு சம்மந்தப்பட்ட  வியாதிகள் அதிகரித்திருப்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது .

4 . அணு உலையில் விபத்து நேரும் பட்சத்தில் கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் சுற்றுப்பகுதிக்குள் வசிக்கும் மக்கள் தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்துவிட்டு இடம்பெயர வேண்டிய சூழ் நிலை உருவாகும் .அவ்வாறு இடப்பெயர்ச்சிக்கு உள்ளாகும் நடுத்தட்டு மக்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் நிலை அதோ கதிதான் .

5 . அணு உலை கட்டுவதற்கு ஆகும் செலவு (சுமார் 15,000 கோடி )மிக அதிகம் .மற்றும் கால அவகாசம் மிக அதிகம் (கிட்டத்தட்ட 15 வருடங்கள் )

6  .அணு உலையின் ஆயுள் மிக குறைவு .30 வருடங்கள் மட்டுமே மின்சாரம்  தரும் உலை பகுதியை வேறு எந்த உபயோகத்திற்கும் பின்னாட்களில் பயன்படுத்த முடியாது .

7 .விபத்து நடந்தால் ஊழியர்களை மட்டுமன்றி அருகில் வசிப்பவர்களையும் அதிக அளவு இம்சைக்குள்ளாக்குவது அணு உலை மட்டும்தான் .

8 . அணு உலைகளை விட ஆபத்து நிறைந்த இன்னொரு பெரிய ஆபத்து அணு கழிவுகள் .அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருட்களை 10,000 வருடம் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கவேண்டும் .இதில் அஜாக்கிரதை செலுத்தினால் அதோகதிதான் .மேலும் இதனை பாதுகாக்க ஆகும் செலவு அணு உலைகளை கட்ட ஆகும் செலவை விட அதிகம் .

9.           எதிரி நாடுகளுக்கோ ,தீவிரவாதிகளுக்கோ முதல் இலக்கு அணு உலைதான்

10.ஒவ்வொரு நாடும் அணு குண்டுகள் தயாரிக்க பயன்படுத்துவது அணு உலைகளிலிருந்து கழிவாக கிடைக்கும் ப்ளுட்டோனியம்தான் .ஒரு அணு உலையிலிருந்து ஆண்டொன்றுக்கு 500 அணு குண்டுகள் தயாரிக்கும் அளவிற்கு ப்ளுட்டோனியம் கிடைக்கிறது .அணு உலைகளை ஒழித்தால்தான் அணு ஆயுதங்களையும் ஒழிக்க முடியும் .
  
    உலக வெப்பமயமாதலுக்கு ஒரே தீர்வு அணுமின் நிலையங்கள்தான் என்று சிலர் கூறி வருகின்றனர் .ஆனால் அணு உலைகள் தீர்வு அல்ல .சுற்று சூழல் சீர்கேட்டுக்கு போடப்படும் அடித்தளம் .

பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் .பிடித்திருந்தால வாக்களிக்கலாம் .




கருத்துகள் இல்லை: