இந்தியாவின் தெற்கு முனையான குமரி மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தின் மளிகை கடையில் சென்று மளிகை பொருள் வாங்கினால் கூட பிளாஸ்டிக் பையில் பொருள் கிடைக்காது .

பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்து பல மாதங்களாகியும் அதற்க்கான செயல் பாட்டை எங்குமே காண முடியவில்லை .ஆனால் விதிவிலக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது .
இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ராஜேந்திர ரத்னு அவர்களின் அதிரடி நடவடிக்கை .அது மட்டுமல்லாமல் அங்குள்ள மக்களும் முக்கிய காரணம் .குறிப்பாக கிராமங்களில் வசிக்கும் மக்களிடம்கூட பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நன்றாக உள்ளது .எந்த ஒரு நல்ல திட்டமும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே செயல்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் .

எனவே தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் பொது மக்கள் குமரி மாவட்டத்தை பின்பற்றி தமிழகத்தின் சுற்றுசூழலை வளப்படுத்தவேண்டும் .
பலே கன்னியாகுமரி மாவட்டம்!
3 கருத்துகள்:
//கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது .//
Nice one..
கன்னியாகுமரியை போன்ற மற்ற ஊர்க்காரர்களும் பின்பற்றினால் எதிர்காலம் நல்லாருக்கும்...http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.
கண்டு பிடிச்சிட்டாங்க.இல்லாம ஆக்க எவ்ளோ கஸ்டம் !
கருத்துரையிடுக