31 மே 2011

ஏழரை லட்சம் கோடி ரூபாய் .....!இந்தியா தாங்குமா ?

ஏழரை லட்சம் கோடி .

மறுபடியும் ஊழலா என்று யாரும் நினைத்துவிடவேண்டாம் .இது புகுஷிமாவில் ஏற்பட்டுள்ள அணு உலை விபத்தினால் உண்டான பாதிப்புகளை சரி செய்ய ஆகும் செலவிற்கு ஜப்பான் அரசு உத்தேசித்துள்ள தொகை .

ஜப்பானின் புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையங்களில் நிகழ்ந்த மோசமான விபத்தை கட்டுக்குள் கொண்டு வர ஜப்பான் அரசும் TEPCO நிறுவனமும் தீவிரமாக முயன்று வருகின்றன .

இந்நிலையில் ஜப்பான் பொருளாதார ஆராய்ச்சி மையத்தின் தலைவரான திரு கசுமசா எல்வாட்டா வெளியிட்டுள்ள செய்தியில் அணு உலை பாதிப்புகளை முற்றிலுமாக சரி செய்ய 10 வருடங்கள் ஆகும் எனவும் இதற்கு 250 பில்லியன் டாலர் அதாவது ஏழரை லட்சம் கோடி ருபாய் செலவாகும் என தெரிவித்துள்ளார் .

இந்தியாவை பொறுத்தவரையில் லட்சம் கோடியெல்லாம் பொதுமக்களுக்கு சாதாரணமாகிவிட்டது என்றாலும் பொருளாதார நிபுணர்களுக்குதான் அதன் உண்மையான மதிப்பு தெரியும் .

இந்தியாவில் இது போன்றதொரு அணு விபத்து நிகழுமானால் 50 ஆண்டுகளுக்கு இந்தியாவால் எழுந்திருக்கவே முடியாது .மறுபடியும் முதலில் இருந்துதான் வரவேண்டும் .

இந்தியாவில் உள்ள 20 அணு உலைகளில் இருந்து வெறும் 3% மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது .இவை அனைத்தையும் மூடிவிட்டால் பெரிய பாதிப்பு ஒன்றும் வந்துவிட போவதில்லை .


ஆனால் இத்தனை சொல்லியும் கேட்காமல் இந்திய அரசு பூகம்ப ஆபத்து நிறைந்த ஜைத்தாபூரில் 10 அணு உலைகளையும் .சுனாமி ஆபத்து நிறைந்த கூடங்குளத்தில் 8 அணு உலைகளை அமைக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது .

இவற்றிலெல்லாம் எந்த விபத்தும் ஏற்பட வாய்ப்பே இல்லை என உண்மை சொல்லுதல் புகழ் ?டாக்டர் மன்மோகன் சிங் கூறி வருகிறார் .

சமீபத்தில் ஜெர்மன் அரசு தான் அமைத்துள்ள 5 அதிநவீன அணு உலைகள் உட்பட 17 அணுமின் நிலையங்களை 10 வருடங்களுக்குள் மூட உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது .

12 கருத்துகள்:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

பெறுமதியான தகவல் சொல்லி இருக்கீங்க பாலா! ஒன்றை உருவாக்குவது பெரிய விஷயமே இல்ல! ஆனா பாதுகாக்கணும்! அதுதான் முக்கியம்!

கூடல் பாலா சொன்னது…

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
கருத்துக்கு நன்றி ராஜீவன் ஜி !

Unknown சொன்னது…

பட்டா தான் புத்தி வரும் போல இருக்கு, இல்ல அணு உலைன்னு சொல்லி ஊரை ஏமாத்துறாங்களோ??

மகேந்திரன் சொன்னது…

சிந்தித்து செயல்படும் நேரமிது
தீர்க்கமான முடிவெடுக்கட்டும் அரசு
உயிர்க்கொல்லியாம் அணுசக்தி
எம் மக்கட்கு தேவையில்லையென.

நன்றி.

கூடல் பாலா சொன்னது…

@ஜ.ரா.ரமேஷ் பாபுஆமா .நீங்க சொல்றது மாதிரி ஏமாற்று வேலைதான் .

கூடல் பாலா சொன்னது…

@FOOD
கண்டிப்பாக தேவை .

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன்கருத்துக்கு நன்றி மகேந்திரன் .

சக்தி கல்வி மையம் சொன்னது…

சரியான சவுக்கடி பதிவு சகோ..

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *!கருத்துக்கு நன்றி நண்பர் கருண் .

erodethangadurai சொன்னது…

விபரீத முயற்சி தேவையா ? யோசிக்க வேண்டும்

shanmugavel சொன்னது…

நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

பாளை.தணிகா சொன்னது…

kகூடல் பாலா உங்கள் கருத்துக்கு நன்றி.அதே வேலை அரசு அணு உலைகளை மூடிவிட்டு அதன் தொகையை கொண்டு காற்றாலை.சூரிய சக்தி.கடல் அலை போன்றவற்றில் மின்சாரம் உற்பத்தி செய்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது பாலா