06 ஜூலை 2011

ராகுலின் பொது அறிவு

காங்கிரஸ் கட்ச்சியின் அடி மட்டத் தொண்டரிலிருந்து நாட்டை ஆளும் பிரதமர் வரை அனைவரும் அடிக்கடி சொல்லும் மந்திரம் அடுத்த பிரதமர் ராகுல். சமீபத்தில் பிரதமரும் காங்கிரசின் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கும் ராகுலுக்கு பிரதமராவதற்கு எல்லா தகுதியும் உண்டு என்று கூறினார்கள் .


கீழ் காணும் வீடியோவை பாருங்கள் .ராகுலின் பொது அறிவு எத்தகையது என்பதும் அவருக்கு பிரதமருக்கான தகுதி உள்ளதா என்பதும் தெரியும்  .




சமீபத்தில் அகமதாபாத்தில் உள்ள பைக்காகா கூடத்தில் தொழில் வல்லுனர்களிடம் கலந்துரையாடியபோது கூறிய கருத்துக்கள் இவை .

ராகுல் : யுனைடட் கிங்டம் ஐ விட குஜராத் பெரியது 

உண்மை நிலவரம் :ராகுல் கூறியது தவறு .யுனைடட் கிங்டம் ன் புவியியல் பரப்பு 245.000 சதுர கிலோமீட்டர் .குஜராத்தின் பரப்பளவோ 196024 சதுர கிமீ தான் .
 
ராகுல் :அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஒன்றாக சேர்ந்தாலும் அதை விட இந்தியா பெரியது.

உண்மை நிலவரம் :ராகுல் கூறியது தவறு .அமெரிக்காவின் மொத்த பரப்பு  9,631,418 சதுர கிமீ.ஐரோப்பாவின் பரப்பு 1,20,00000 சதுர கிமீ .ஆனால் இந்தியாவின் பரப்பளவோ 3,287,263 சதுர கிமீ தான்.

இதை வைத்துதான் காங்கிரஸ் ராகுலை அடுத்த பிரதமர் என்கிறது .ஒரு வேளை எதுவும் தெரியாமல் இருப்பதுதான் பிரதமருக்கான தகுதி என காங்கிரஸ் எண்ணுகிறதோ என்னவோ .

24 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

ரைட்டு..
சரியான கேள்விதான் கேட்டீங்க..
//ஒரு வேளை எதுவும் தெரியாமல் இருப்பதுதான் பிரதமருக்கான தகுதி என காங்கிரஸ் எண்ணுகிறதோ என்னவோ .//
ஹா..ஹா...

Unknown சொன்னது…

ha ha ha ....gd analysis buddy
i think at least he knows us and Europe may be dats enough

உணவு உலகம் சொன்னது…

அழகான பார்வை.

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *! ஹி...ஹி ..

கூடல் பாலா சொன்னது…

@ரியாஸ் அஹமது தொர என்னமா இங்க்லீஷ் பேசுது .....

சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…

இப்பவே நம்ப பாரத பிரதமர் - பிரதமருக்கு உரிய
தகுதி என்ன ? என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டிக் கொண்டிருக்காரே ?

அது போதாதா ?

தமிழ்நாட்டைப் போலவே மத்தியிலும் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்பது எம் கருத்து.


http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

கூடல் பாலா சொன்னது…

@FOOD
நீங்களே ரைட்டுன்னு சொன்னதுக்கப்புறம் ......

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சரிதான் எதிர் கால பிரதமர் என்று அழைக்கப்படுபவர்.. எங்கேயும் யோசித்து பேச வேண்டும்..

பெயரில்லா சொன்னது…

ரொம்ப காமெடி பண்ணுறார் போல )))

Mathuran சொன்னது…

//இதை வைத்துதான் காங்கிரஸ் ராகுலை அடுத்த பிரதமர் என்கிறது .ஒரு வேளை எதுவும் தெரியாமல் இருப்பதுதான் பிரதமருக்கான தகுதி என காங்கிரஸ் எண்ணுகிறதோ என்னவோ .///

ஹி ஹி இதுதான் அடிப்படைத்தகுதி போலும்

rajamelaiyur சொன்னது…

இவன்லாம் பிரதமர் ஆனால் ? நாடு என்ன ஆகும் ?


வலைசரத்தில் இன்று

வாழ்க.. ஒழிக… ஒழிக… வாழ்க

Mahan.Thamesh சொன்னது…

ரைட்டு அண்ணே

vidivelli சொன்னது…

nalla alasal...........
valththukkal...

Unknown சொன்னது…

மாப்ள எங்க தலைவர பத்தி பேசுறியா...இரு நான் போய் நாலு பேரோட வேட்டிய கிழிச்சிட்டு வரேன் ஹிஹி!

கூடல் பாலா சொன்னது…

@ # கவிதை வீதி # சௌந்தர் I AGREE WITH YOU

கூடல் பாலா சொன்னது…

@கந்தசாமி. காமெடி பீஸ்தானே

கூடல் பாலா சொன்னது…

@மதுரன் இப்போதைக்கு அப்படித்தான்

வித்யாசாகரன் (Vidyasakaran) சொன்னது…

Did he mean the POPULATION?

நிரூபன் சொன்னது…

இதை வைத்துதான் காங்கிரஸ் ராகுலை அடுத்த பிரதமர் என்கிறது .ஒரு வேளை எதுவும் தெரியாமல் இருப்பதுதான் பிரதமருக்கான தகுதி என காங்கிரஸ் எண்ணுகிறதோ என்னவோ//

ஆஹா...மக்களின் வாழ்வை முன்னேற்ற ஆட்சியேறவிருப்போருக்கு எத்தகைய விடயங்கள் தெரிந்திருக்க வேண்டுமோ, அவை தெரியாதிருப்பதில் இருந்து,

அவர்களின் ஆட்சியும் எப்படி அமைந்து கொள்ளும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

Vel Tharma சொன்னது…

இந்த மொக்கைக் காந்தியை முன்னாள் "வருங்காலப் பிரதமர்" ஆக்குங்கள்...

தடம் மாறிய யாத்ரீகன் சொன்னது…

ஒன்னும் தெரியாத புஸ் கூட அமெரிக்க அதிபர் ஆகிடர்னு நெனச்சு இந்த பயபுள்ளையும் அசைபடுது என்ன பண்ண.

Alivetamil சொன்னது…

கண்டவனையும் தூக்கி தலையில வைச்சு ஆடினா இப்படித்தான்..

YESRAMESH சொன்னது…

எந்த மாநிலத்தில் தேர்தல் நடக்கிறதோ அங்கேதான் அரசியல் பண்ணுவாரு. எதிர்கட்சி ஆட்சியை மட்டும் தான் விமர்சிப்பாரு...தன்னோட ஆட்சிஇல தலவிரிச்சி ஆடுற கருப்பு பணம் ஊழல் பத்தி வாய தொரக்கமாட்டாறு தொர.. இதுவும் ஒரு தகுதிதான் பிரதமர் ஆகறதுக்கு.

SeSa சொன்னது…

இதை போன்ற பொது அறிவு விஷயங்கள் தெரிந்தால்தான் ஒரு சிறந்த பிரதமராக இருக்க முடியுமா? அப்படி பாரத்தால் இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இதை போன்ற ஆயிரம் ஆயிரம் விசயங்களை தெரிந்தவர்தான். அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை நாம் அறிவோம். நல்ல தலைமை பண்பும், தொலை நோக்கு பார்வையும், தற்போதைய நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளும் அதை செயல்படுத்தும் வழிமுறைகளையும் வைத்து இருந்தாலே போதுமானது. அந்தந்த துறை சார்ந்த சிறப்பான அதிகாரிகளை, இயல்பாக செயல்பட அனுமதித்து, மேற்பார்வை செய்தாலே போதுமானது. புவியியல் அறிவெல்லாம் இருந்தால் நல்லதுதான். மற்றபடி அதை மட்டுமே முதன்மை காரணமாக ராகுலுக்கு கூற முடியாது. அனாலும் ராகுலுக்கு தலைமை பதவிக்குரிய எந்த பண்பும் வளரவில்லை. எனவே அவரது பொது அறிவை பற்றிய இந்த பதிவும் இந்த சூழ்நிலையில் அவசியமில்லாதது. நான் அறிந்தவரையில் இப்போதைக்கு மன்மோகன் சிங்-கு பதவி போகும் ஆபத்து ராகுலால் இல்லை. அவர் இன்னும் அமுல் பேபிதான்.