12 அக்டோபர் 2011

விஸ்வாமித்திரர் யாகம் செய்த இடத்தில் மீண்டும் யாகம் !

ராஜரிஷி பட்டம் பெறுவதற்காக விஸ்வாமித்திரர் யாகம் செய்ததாகவும் அதற்கு ராமரும் ,லக்ஷ்மணரும் காவல் புரிந்ததாகவும் அதற்கு இடையூறு செய்த தாடகையை ராமர் வதம் செய்ததாகவும் புராணங்கள் வாயிலாக தெரிய வருகின்றன .

அவ்வாறு யாகம் செய்ததாக கூறப்படும் இடம் திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி  அருகிலுள்ள தில்லை வனம் தோப்பில் அமைந்துள்ளது .உலகிலேயே விஸ்வாமித்திரருக்கு இங்கு மட்டும்தான் ஆலயம் அமைந்துள்ளது .

இவ்வாலயத்தில் நேற்று (11-10-2011)  ஒரு யாகம் நடத்தப்பட்டது .

யாகத்திற்கான நோக்கம் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி நடைபெறும் போராட்டம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக .

யாகத்தை கோயில் அர்ச்சகர் முத்துப்பட்டர் நடத்தினார் .கூடங்குளம் பகுதி மக்கள் பலர் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர் .சர்வமதத்தினரும் இதில் கலந்துகொண்டனர் .

 இவ்வாலயம் அணுமின் நிலையத்திலிருந்து 5  கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

14 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

யாகத்திற்கான நோக்கம் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி நடைபெறும் போராட்டம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக ./

நோக்கம நிறைவேற பிரார்த்திக்கிறோம்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம் ...

M.R சொன்னது…

யாகத்தின் நோக்கம் வெற்றிப் பெற பிரார்த்திக்கிறேன் நண்பரே

Unknown சொன்னது…

ரைட்டு...வெற்றிபெற வாழ்த்துக்கள் மாப்ள!

சம்பத்குமார் சொன்னது…

//யாகத்திற்கான நோக்கம் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி நடைபெறும் போராட்டம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக .//

கண்டிப்பாய் போராட்டம் வெற்றி பெற வேண்டும்

நன்றியுடன்
சம்பத்குமார்

SURYAJEEVA சொன்னது…

போராடும் உள்ளங்கள் தன்னம்பிக்கையுடன் இருந்தாலே வெற்றி தான், சிறு சல சலப்பு எழுவதை பார்த்தால் அரசின் உள்ளடி வேலை கொஞ்சம் வெற்றி அடைந்திருப்பதாக தோன்றுகிறது... ஆனால் பெரிய அளவில் சல சலப்பு எழுவதற்குள் அனைத்து கைகளும் ஒன்றாக இணைவது அவசியமே... ஊடகங்களில் பெரிய அளவில் பேசப் பட வில்லை என்றாலும் மக்கள் ஆதரவு இந்த போராட்டத்திற்கு உண்டு

மாய உலகம் சொன்னது…

யாகம் யோகம் பெறட்டும்.... பிரார்த்திக்கிறேன் நண்பரே!

rajamelaiyur சொன்னது…

//
யாகத்திற்கான நோக்கம் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி நடைபெறும் போராட்டம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக .

//

கண்டிப்பாக வெற்றி பெரும்

rajamelaiyur சொன்னது…

இன்று என் வலையில்


கிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா

ksundar சொன்னது…

மிக சரியான முடிவு. நான் சென்ற மாதம் விஜயபதி சென்று வந்தேன். இங்கு இருந்து கூடங்குளம் அணு உலை தெளிவாக தெரிகிறது.இந்த கோயில் ஒரு யகம் கடந்த கோயில். ராஜரிஷி அங்கு இருக்கும் வரை இவர்களின் ஆசை மண்ணாக போகும்.அங்கு உள்ள தில்லை காளி இதை செய்ய விடமாட்டாள்.

ராஜா MVS சொன்னது…

நோக்கம் நிறைவேற பிரார்த்திக்கிறேன்..நண்பா..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நல்லதே நடக்கட்டும்...

பெயரில்லா சொன்னது…

ஹி ... ஹி.. ஹி.. நல்ல சொன்னீங்க போங்க

மகேந்திரன் சொன்னது…

யாகத்தின் நோக்கம் நிறைவேற பிரார்த்திக்கிறேன் நண்பரே.