16 அக்டோபர் 2011

போராட்டம் எதிரொலி : ஊரை காலி செய்கின்றனர் அணுமின் நிலைய தொழிலாளர்கள்

கூடங்குளம்  அணு உலைக்கெதிரான  போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது .இடிந்தகரையில்  இரண்டாவது கட்டமாக 106 பேர்  எட்டாவது நாளாக  காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் அதே வேளையில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் அணு மின் நிலையம் அருகில்  பந்தலமைத்து இரவுபகலாக தங்கியிருந்து அணு உலைக்கு வேலைக்கு  செல்பவர்களை தடுத்து வருகின்றனர் .

தொடர் போராட்டங்கள்  காரணமாக பீகார் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை உதறிவிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர் .

இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வெளி மாநில தொழிலாளர் ஒருவர் கூறுகையில் தொடர்ந்து போராட்டம் நடை பெறுவதால் எங்களுக்கு போதிய வருமானமில்லை மேலும் கூடங்குளத்தில்  தொடர்ந்து கடைகள் அடைக்கப்பட்டு வருவதால் எங்களுக்கு சாப்பிட ,குடிக்க உணவுகள் கிடைக்கவில்லை எனவே இனிமேலும் இங்கிருக்க விரும்பவில்லை என்று கூறினார் .
ஊரை காலி செய்கின்றனர் அணுமின் நிலைய  தொழிலாளர்கள்

நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 2000  வெளி மாநிலத்தவர்கள் ஊர் திரும்பியுள்ளனர் .மேலும் எஞ்சியுள்ளவர்களும் விரைவில் வெளியேறிவிடுவார்கள் என்றே தெரிகிறது .

சமீபத்தில் டெல்லியில் நடந்த பேச்சு வார்த்தையின் போது அணு மின் நிலையத்தில் பெரிய அளவிலான வேலைகள் எதுவும் நடக்கவில்லை சில பராமரிப்பு பணிகள் மட்டுமே நடப்பதாக போராட்டக்குழுவினரிடம் பிரதமர்  கூறியிருந்தார் .ஆனால் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ஒப்பந்தப்பணியாளர்கள் வேலை செய்து வந்தது இப்போது தெரிய வருகிறது .

போலீஸ் வாகனத்தை சோதனையிட்ட பொதுமக்கள் 

அணு மின் நிலையத்திற்கு தொழிலாளர்கள் யாரும்  செல்லாததால் அணுமின் நிலையத்தினுள் வைக்கப்பட்டுள்ள யுரேனியத்தை பாதுகாக்கும் பொருட்டு ஒரு பெரிய போலீஸ் படை நேற்று முன்தினம் கூடங்குளம் வந்தது .ஆனால் அனைத்து சாலைகளும் அடைக்கப் பட்டிருந்ததால் அணு மின் நிலையத்திற்குள் செல்ல முடியவில்லை .அதைத் தொடர்ந்து அதிகாரிகள் போலீஸ் படை வந்ததற்கான காரணத்தைக் கூறி தங்களுக்கு வழி விடவேண்டும் என கோரினர் .அதற்கு பொது  மக்கள் போலீஸ் வாகனத்தில் தொழிலாளர்களை உள்ளே அழைத்து செல்ல வாய்பிருப்பதாகக் கூறி வழி விட மறுத்தனர் .

கூடங்குளம்  பைபாஸ் ரோட்டில்   பொதுமக்கள்  ஏற்படுத்தியுள்ள  தடுப்பு  

அதற்கு  அதிகாரிகள் எங்கள்  வாகனங்களில் தொழிலாளர்கள் யாருமில்லை வேண்டுமானால்  நீங்கள்  வந்து  சோதனை  செய்து பாருங்கள்  என்று கூறினார்கள்  .அதன்படி  பொதுமக்களில்  சிலர் வாகனங்களை சோதனையிட்டனர் .அதிகாரிகள் கூறிய படி தொழிலாளர்கள் யாருமில்லாததால் வாகனங்கள்  செல்ல அனுமதிக்கப்பட்டன .

போலீஸ் தாக்கியதால் காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் மாற்றுத் திறனாளி மணிகண்டன் .

9 கருத்துகள்:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

பகிர்வுக்கு நன்றி .

SURYAJEEVA சொன்னது…

ஊடக தர்மத்தை இனைய ஊடகமான நாம் கையில் எடுப்போம்..
உங்கள் பதிவில் பலர் கேள்வி கேட்க்க வாய்ப்பு உள்ளதால்..
இரண்டு மாத சம்பள பாக்கியம் தராததால் தான் காலி செய்கிறோம் என்று வெளி மாநில மக்கள் கூறியதும் செய்திகளில் ஒரே ஒரு நொடி பதிவானது

Admin சொன்னது…

வரவேற்கத்தக்க செய்தி. அந்த தொழிலாளர்கள் நம் நிலையை அறிந்து சென்றிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

போலிஸ் வாகனத்தையே சோதனையா?
:) :) :)

பகிர்வுக்கு நன்றி நண்பா!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சமீபத்தில் டெல்லியில் நடந்த பேச்சு வார்த்தையின் போது அணு மின் நிலையத்தில் பெரிய அளவிலான வேலைகள் எதுவும் நடக்கவில்லை சில பராமரிப்பு பணிகள் மட்டுமே நடப்பதாக போராட்டக்குழுவினரிடம் பிரதமர் கூறியிருந்தார் .ஆனால் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ஒப்பந்தப்பணியாளர்கள் வேலை செய்து வந்தது இப்போது தெரிய வருகிறது .//

அடங்கொய்யால, அப்போ ரகசியமா ஏதோ பிளான் பண்ணிட்டுதான் இருந்துருக்காங்க கொன்னியா சிங்'டி...!!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

போலீஸ் தாக்கியதால் காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் மாற்றுத் திறனாளி மணிகண்டன் .//

போலீசா மிருகமாய்யா...??? உருப்படுவானுகளா இவனுக...!!!

ReeR சொன்னது…

கூடங்குளம் பற்றிய செய்தியகளை அறிய ஒர் சரியான ஊடகம் இல்லையே என வருந்தினேன்... உங்கள் பதிவுகள் அக்குறையை தீர்த்தது நன்றி. நன்றி

படுகை.காம்

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,
மக்கள் எழுச்சிக்கு இப்போது தான் மெது மெதுவாகப் பலன் கிடைத்திருக்கிறது.

வெகு விரைவில் இப் போராட்டத்திற்கு கைம் மேல் பலன் கிடைக்கும் என நினைக்கிறேன்.

அம்பலத்தார் சொன்னது…

மக்கள்போராட்டம் வலுவடைவடையத் தொடங்குவதும் முன்னோக்கி நகர்வதும் மகிழ்வுதருகிறது. எமது வருங்கால சந்ததியினருக்கு எதனை விட்டுச் செல்லப்போகிறோம். அழிவுகளிற்கான அத்திவாரங்களையா? அல்லது பசுமையான உலகத்தையா? சிந்தித்து செயல்படவேண்டிய நேரமிது.

பெயரில்லா சொன்னது…

blog என்ற பெயரில் பல உண்மையற்ற மற்றும், தங்கள் கருத்துக்கூறும் உரிமை இருப்பினும், கருத்துக்கூறும் பொருள் சம்மந்தமாக, அடிப்படை மற்றும் ஆழ்ந்த அறிவு இல்லமை போன்ற பெருங்குறைகள் இதிலுண்டு.