15 அக்டோபர் 2011

கூடங்குளம் பிரச்சனை :நடுநிலை தவறும் ஊடகங்கள்

தங்கள் வாழ்வாதாரமும் சந்ததிகளும்  பாதிக்கப்படும் என்பதற்காக கூடங்குளம் பகுதி மக்கள் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக போராடி வருகிறார்கள் .அவர்கள்  போராட்டத்திற்கு  பல்வேறு  அரசியல்  கட்சிகள் ,சமூக  இயக்கங்கள் மட்டுமன்றி சமீபத்தில் தமிழக முதல்வரே ஆதரவு  தெரிவித்துள்ளார் .ஆனால் மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறது .
 
மத்திய அரசு எப்படிப்பட்ட அரசு என்பதை யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.ஆனால் சில தமிழ் ஊடகங்களின் நடவடிக்கைதான் இவர்களுமா இப்படி என சிந்திக்க வைக்கிறது .
 
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இப்போராட்டத்தில் ஒருநாள் கூட தலை காட்டாத ஒரு நபர்  போராட்டக்குழுவின்  நடவடிக்கைகள்  சரியில்லை  யாருடைய  தூண்டுதலின்  பேரிலோதான் செயல்படுகிறது என பேட்டியளித்தார் .இந்த பேட்டியை பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டன .போராட்டக்குளுவில் பிளவு போராட்டக்குளுவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது என்றெல்லாம் செய்தி வெளியிட்டு போராட்டத்தை குழப்பி விடப் பார்த்தன .
 
ஆனால் இது உண்மையிலேயே மக்கள் போராட்டம் என்பதால் ஊடகங்களின் பொய்யுரை போராட்டத்தை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை .
 
அனைத்து ஊடக நிருபர்களும் போராட்டம் நடக்கும் இடத்திற்கு தினமும் வருகிறார்கள் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும் ,மர்ம நபர்கள் தூண்டுகிறார்கள் என்றால் யார் யாரெல்லாம் தூண்டுகிறார்கள் என்பதை ஊடகங்கள் கண்டுபிடித்து வெளியிடலாமே .ஏன் தேவையில்லாமால் வதந்தி பரப்புகின்றன .
 
இதற்கும் ஒரு படி மேலே சென்றது நேற்று ஒரு தொலைகாட்சி சானல் .
 
நேற்று ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் திரு கோபால் சாமி அவர்கள் உச்ச நீதி மன்றத்தில் அணு உலைகளை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்பது  .இந்த சானல் இந்த செய்தியை எப்படி கூறியது என்றால் விபரமானவர்களே இப்படி செய்யலாமா என்று .
 
எந்த ஒரு மனிதனும் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வது குற்றம் என்று எந்த சட்டத்திலாவது சொல்லப்பட்டுள்ளதா ? அப்படி இருக்கையில் ஊடகம் இப்படி செய்தி வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம் ..இந்த ஊடகங்களை விட  அரசியல்வாதிகள் பரவாயில்லை என்று எண்ணுமளவிற்கு ஊடகங்களின் நடவடிக்கைகள் உள்ளன ..
 
நல்ல வேளை... இந்திய சுதந்திரப் போராட்டத்தின்  போது இதுபோன்ற ஊடகங்கள் இல்லை .இருந்திருந்தால் சுதந்திரம் கிடைக்கவிடாமல் ஆக்கியிருப்பார்கள் .
 
எனினும் கூடங்குளம் மக்கள் போராட்டம் வெல்லும் .

36 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

dna என்ற இனைய இதழில் காவல் துறை உண்ணாவிரத போராட்டம் இருந்த ஆறு மாற்று திறனாளிகளை அடித்ததாக செய்தி வெளியிட்டிருக்கிறதே அது உண்மையா?

கூடல் பாலா சொன்னது…

@suryajeevaஉண்மைதான் ....20 மாற்று திறனாளிகள் அணு மின்நிலையத்தின் நுழைவாயில் அருகிலிருந்து தர்ணா செய்துகொண்டிருந்தார்கள் ...நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தங்களை காவல்துறையினர் தாக்கியதாக கூறினார்கள் ...இதில் மணிகண்டன் என்பவர் தலையில் காயம் பட்டுள்ளது ....கூடங்குளம் கஸ்தூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

நிவாஸ் சொன்னது…

இந்தியாவின் பேணா முனை மழுங்கிவிட்டது, பத்திரிகை தர்மம் செத்துவிட்டது. காசுக்காகவும் மற்ற பத்திரிக்கைகளை விட சூடான செய்திக்காகவும், பல ஊடகங்கள் பொய்யாகவும், திரித்தும் எழுதி வருகின்றன. இதுபோன்ற தன்மானம் இழந்த ஊடகவியளாலர்களால் நேர்மையாய் இருக்கும் பலருக்கும், பத்திரிக்கைக்கும் கெட்ட பெயர்

நிவாஸ் சொன்னது…

//dna என்ற இனைய இதழில் காவல் துறை உண்ணாவிரத போராட்டம் இருந்த ஆறு மாற்று திறனாளிகளை அடித்ததாக செய்தி வெளியிட்டிருக்கிறதே அது உண்மையா?//

//@suryajeevaஉண்மைதான் ....20 மாற்று திறனாளிகள் அணு மின்நிலையத்தின் நுழைவாயில் அருகிலிருந்து தர்ணா செய்துகொண்டிருந்தார்கள் ...நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தங்களை காவல்துறையினர் தாக்கியதாக கூறினார்கள் ...இதில் மணிகண்டன் என்பவர் தலையில் காயம் பட்டுள்ளது ....கூடங்குளம் கஸ்தூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .//


இது உண்மை என்றால் போராட்ட மக்கள் விழிப்போட இருக்க வேண்டியது கட்டாயம். அரசாங்கமே போராட்டத்தை திசைத் திருப்ப இதுபோன்ற செய்களில் இறங்கக் கூடும் என்பதனை நினைவில்கொள்க. காவல் துறை தனிச்சையாக முடிவெடுத்தல் அது மக்களுக்கு சாதகமாகவே இருக்கும். அரசியல் தூண்டலில் காவல்துறை செயல்பட்டால் அது பாதகமாகவே அமையும். இதில் காவல் துறையை கண்டித்து புண்ணியமில்லை. போராடும் நாம் தான் அடக்கு முறைகளை தங்கிக் கொள்ள வேண்டும். இது போன்று போராட்டத்தை திசை திருப்பும் முயற்ச்சிகள் பல நடக்கலாம். கவனம் தேவை

Unknown சொன்னது…

ஒரே குழப்பம் அண்ணே என்ன பண்ணுறாங்கன்னே புரியல ? இதுக்கே இப்பிடி தடுமாறி நிக்குதே அரசு? யார்கிட்டேயாவது காசு வாங்கி இருப்பங்களோ இல்ல மக்களை குழப்பணும்ன்னு இதெல்லாம் பண்ணுவாங்களோ ?

கோகுல் சொன்னது…

திசை திருப்ப நினைக்கும் ஊடகங்களை நம்பிக்கைத்தன்மையை இழக்கின்றன!
அடக்கு முறை தாக்குதல் கண்டிக்கத்தக்கது!

பெயரில்லா சொன்னது…

உங்கள் ஊரில் நடக்கும் போராட்டம் குறித்து இருதயம் என்பவர் பதித்துள்ளார். அவர் பல கேள்விகளை கேட்டுள்ளார். உங்கள் பதில் என்னவென்று கூறுங்களேன். குழம்பி போய் உள்ளோம்

http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post.html

Prabu Krishna சொன்னது…

//நல்ல வேளை... இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது இதுபோன்ற ஊடகங்கள் இல்லை .இருந்திருந்தால் சுதந்திரம் கிடைக்கவிடாமல் ஆக்கியிருப்பார்கள் .//

100% உண்மை. செய்திகளை தர வேண்டிய சேனல்கள் கூட பணம் பண்ண ஆரம்பித்து விட்டன.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நல்ல வேளை... இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது இதுபோன்ற ஊடகங்கள் இல்லை .இருந்திருந்தால் சுதந்திரம் கிடைக்கவிடாமல் ஆக்கியிருப்பார்கள் .//

நிச்சயமாக சுதந்திரம் கிடைத்து இருக்காது என்பதே உண்மை...!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மத்திய சிங்கிடி அரசை பற்றி நமக்கு தெரியாதது அல்ல, இருந்தாலும் நம்மை அவர்கள் திசை திருப்ப முயல்வதை நுட்பமாக கண்டறிந்து போராடவேண்டும்...

கூடல் பாலா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஊடகங்கள் என்ன ஊடகங்கள், நம்ம பதிவர்களிலேயும் ஒரு சாரார் அப்படிதான் நடந்து கொள்கிறார்கள், அவர்களுக்கு புரியவைக்க தாவு தீருகிறது எனக்கு...

கூடல் பாலா சொன்னது…

@பெயரில்லாஅணு மின் நிலையத்தில் ஏசி அறையில் உட்கார்ந்து நோகாமல் மாதம் 50000 ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள்தான் இதுபோல எழுதிவருகிறார்கள் என நினைக்கிறேன் ....

இருதயம் சொன்னது…

@koodal bala

அப்படியா .. நீங்கள் எனக்கு அப்படி ஒரு வேலை தந்தால் மகிழ்வுடன் செய்வேன். மாதிரம்மல்ல கூடல்பாலா உங்களிடம் நேரிடையாக விவாதிக்கவும் சில காரியங்கள் உள்ளன. அணுமின் நிர்வாகத்திடம் பேசி ஏற்ப்பாடு செய்யுங்களேன் .

உங்களுடைய அழகான பதில் ஓன்று போதுமே ... இது எப்படிப்பட்ட உண்மை என்று ... ஹ... ஹா..

கூடல் பாலா சொன்னது…

@இருதயம்அனைத்து உண்மைகளும் விரைவில் அனைவரும் அறிவார்கள் ..... அது வரை காத்திருங்கள் இரு தயம்

rajamelaiyur சொன்னது…

//
ஆனால் இது உண்மையிலேயே மக்கள் போராட்டம் என்பதால் ஊடகங்களின் பொய்யுரை போராட்டத்தை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை .
//

உண்மைதான்

rajamelaiyur சொன்னது…

இன்று என் வலையில்

சிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்

Unknown சொன்னது…

மாப்ள நல்லதே நடக்கும்...அதிக நாளா தூங்கிட்டதால(!) தர்மம் எழுந்துக்க நாள் ஆகும்!

சக்தி கல்வி மையம் சொன்னது…

இவர்கள்(ஊடகங்கள்) உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதும்.,

suraavali சொன்னது…

கூடங்குளம்:இறுக்கம்+விரிவாக்கம்=வெற்றி.

கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டமாக உள்ளதை தமிழக,கேரள மக்களின் போராட்டமாக விரிவாக்கம் செய்வதின் அளவில்தான் போராட்டத்தின் வெற்றி அமையும் என்பதை போராட்டக்குழு கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும்.ஏனென்றால் போராட்டத்திற்கு இப்போதைக்கு ஜெயா ஏதும் இதுவரை இடையூறு செய்யாவிட்டாலும் அடிப்படையில் ஜெயாவின் கருத்து கூடங்குளம் அணுமின்நிலையத் திட்டம் தவறில்லை என்பதுதான் என்பதை போராட்டக்குழு மறந்துவிடக்கூடாது.
http://suraavali.blogspot.com/2011/10/blog-post_15.html

இருதயம் சொன்னது…

@koodal bala

// அனைத்து உண்மைகளும் விரைவில் அனைவரும் அறிவார்கள் ..... அது வரை காத்திருங்கள் இரு தயம்//

நன்றி நண்பரே .. நானும் காத்திருக்கிறேன் அந்த நாளுக்காக .... சத்தியம் ஜெயிக்கும் என்பதில் எனக்கும் நம்பிக்கை உள்ளது.

ராஜா MVS சொன்னது…

போராட்டத்தை திசைதிருப்ப பல சதிவேலைகள் நடப்பதுபோல் தெரிகிறது... தற்ப்போது கவனமாக எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகி இருக்கும் நிலை என்று நினைக்கிறேன்...
மக்களின் உண்மையான போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும்...

இன்குலாப் ஜிந்தாபாத்

Thozhirkalam Channel சொன்னது…

தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

உங்கள் தளம் தரமானதா..?

இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com

shanmugavel சொன்னது…

ஆமாம்,மக்கள் போராட்டம் வெல்லும் என்பதே உண்மை.

Unknown சொன்னது…

உண்மைதான் பாலா!சில
ஊடகங்கள் மாறுபட்டுத்தான்
உள்ளன தேர்தல் முடிந்ததும்
இன்னும் பல மாற்றங்கள்
வரும்
இன்று நானும் கவிதை ஒன்று
எழுதியுள்ளேன் பாருங்கள்!

புலவர் சா இராமாநுசம்

M.R சொன்னது…

தங்கள் கருத்து உண்மை தான் நண்பரே

பெயரில்லா சொன்னது…

கிறித்துவத்தினை ஆதிக்க நிலையில் அமர வைக்க இந்த இந்திய எதிரி உதயகுமார் என்னும் தேசத்துரோகியின் தலைமையில் அணிவகுத்திருக்கும் பாதிரிகளின் சதி வலையில் உண்மையான நோக்கத்தினை அறியாமல் உட்கார்ந்து போராடும் கிருத்துவ மீனவ மக்களின் போராட்டமே இந்த கூடன் குள அணு உலை எதிர்ப்பு போராட்டம்.....இந்துக்கள் போராடினால் வாயிலேயே உதைத்து அடக்கும் இந்த அரசியல்வியாதிகள், ஓட்டுப்பொறுக்கும் பிச்சைஎடுப்புக்காக நாக்கை தொங்கப்போட்டு அலையுதுகள்........எதோ சில ஊடகங்கள் நாட்டு நலன் மீது அக்கறை கொண்டு எழுதுவது உங்களுக்கு பின்னால் மிளகாய் வைத்தது போலுள்ளதா....?

பெயரில்லா சொன்னது…

இன்னும் நான்கு நாள் தான் .....உள்ளாட்சித்தேர்தலுடன் இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்து விடும்.....உதயகுமாரனின் தோல் உரிக்கப்பட்டு நாற்றமெடுத்த உள்நோக்கங்கள் வெளிவரத்தொடங்கும்....அதுவே என் வாழ்க்கையில் சந்தோஷமான நாள் ...

மகேந்திரன் சொன்னது…

நம்பகத்தன்மை இழந்த ஊடகங்கள்..
தங்கள் நிலையை காத்துக்கொள்ள
பத்தாம்பசலித்தனம் செய்கிறார்கள்.

காவல்துறையின் காட்டுமிராண்டித் தனம்
கண்டிக்கத் தகுந்தது.

கூடல் பாலா சொன்னது…

@பெயரில்லா \\\எதோ சில ஊடகங்கள் நாட்டு நலன் மீது அக்கறை கொண்டு எழுதுவது உங்களுக்கு பின்னால் மிளகாய் வைத்தது போலுள்ளதா\\\ பெயரில்லாதவரு உங்கள் கருத்துரையைப் பார்த்தால் உங்களுக்கு காந்தல் அதிகமாகிவிட்டது போல் தெரிகிறதே ...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

உண்மை தான் .

பெயரில்லா சொன்னது…

123 ஒப்பந்தம் போடறப்பவே உதயகுமார் அண்ணன் உஷாரா உண்ணாவிரதத்துக்கு பந்தல் போட்டிருக்கணும்....நாட்டுல இனிமேல எவனும் அனு ...அனுஷ்கான்னு பேசணுமே தவிர அணு அப்படிங்கற பேச்சை விட்ரனும் ..அப்படின்னு ரொம்ப தீவிரமா போராடி இருக்கணும் மனமோகனம் ரெம்ப மெனக்கெட்டு டெம்போ எல்லாம் வச்சு பில்ல பாஸ் பண்ண வச்சாரு ....அப்பல்லாம் உதயகுமார் அண்ணன் பாரீன்ல பாடம் நடத்திகிட்டு இருந்துட்டு ...அவரு பின்னால இருக்கிற ஒயிட் ட்ரெஸ் தேவர்களும் அமைதியா இருந்துட்டு இன்னிக்கி உலை ஆகாது ..ன்னு பேசறது ...ரோட்டுல முள்ளை வெட்டி போடறது நல்லாவா இருக்கு.......அமெரிக்காகாரன் 123 போட்டா இவனுக பைபிள் படிக்கிராணுக......ரஷ்யாக்காரன் ரிப்பன் வெட்ட வந்தா இவனுக பைபிளை மூடி வச்சிட்டு ..நாங்க மூடுன மாதிரியே நீங்களும் எல்லாத்தியும் மூடுங்கன்னா எப்படி ....

பெயரில்லா சொன்னது…

ஊடகங்கள் நடுநிலை தவறுதுன்னேல்லாம் அவரசப்பட்டு சொல்லாதீங்க.......புதியதலைமுறை ஒன்னு போதுமே.....அந்த டிவிக்கு எங்க ஊர்ல " கூடங்குளம் டிவி" ன்னு தான் பேர் வச்சிருக்காங்க......பாவம் அவனுக்கும் டிஆர் பி ரேட்டிங்நு இருக்குமில்ல

கூடல் பாலா சொன்னது…

@பெயரில்லாநான் போட்டிருக்கும் பதிவிற்கும் உங்கள் கருத்துக்கும் சம்மந்தமே இல்லை

Sathyan சொன்னது…

Hi Koodal Bala,

You are doing very good job by writing online about the KNPP protest.

Some, selfish fellows trying to navigate the issue by painting different colour to this people movement.

Onefellow, suddenly opened one blog and written all fake news against our fight. If he open one new blog during this struggle and trying to write against means, how we can consider this blog? May be a agent of KNPP. So ignore all these idiots comments. If you try to answer them, you can not write useful news to the public.

We are with you. Thank you once again.

arasu karur சொன்னது…

napar bala mannin makkalukkuthan porata vali therium peyar kuta ellatha tharuthalaikku enna therium