13 அக்டோபர் 2011

அணு உலைப் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

கூடங்குளம் அணு உலை தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று கூறி கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார  ஊர்களில் வசிக்கும் மக்கள் கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் .

தமிழக அரசும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மக்கள் அச்சம் தீரும் வரை அணு உலைப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது .எனினும் மத்திய அரசு அதை கண்டுகொள்ளாமல் அணு உலையை செயல்பட வைக்க முனைப்பு  காட்டி வந்தது .

இந்நிலையில் இன்று திடீரென மக்கள்  வெகுண்டெழுந்து அணு உலைப் பணிகளை இனி தாங்களே நிறுத்துவது என முடிவெடுத்தனர் .

அதன் படி இன்று காலை சுமார் 9  மணியளவில் ஆயிரக்கணக்கானோர் அணு மின் நிலையம் முன்பு திரண்டனர் .அனைவரும் இணைந்து அணு உலைக்கு பணியாளர்கள் வரும் வாகனங்களை  திருப்பி அனுப்பினர் .

மேலும்  இரு சக்கர வாகனகளில் வருபவர்களையும் தடுத்து நிறுத்தி அணு உலையால் நம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும் இனி நீங்கள் அணுமின் நிலைய வேலைகளை விட்டுவிட்டு வேறு வேலைகளுக்கு செல்லுங்கள் என்று அறிவுரை  கூறி அனுப்பி  வைத்தனர் .

இதன்காரணமாக அணு உலைப் பணிகள் முற்றிலும் தடை பட்டுள்ளது .

இதனிடையே இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொட முதல்வர் போராடும் மக்களில் தன்னையும் ஒருத்தியாக இணைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார் .இது மக்களுக்கு  மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது .

அணு உலையை மூடிவிட்டுத்தான் வீடு திரும்புவோம்  என்று அணு மின் நிலையத்திற்கு அருகில் தங்கியுள்ள மக்கள் 

எனினும் மத்திய அரசிடமிருந்து தங்களுக்கு சாதகமான அறிவிப்பு வரும் வரையில்  அணு உலை அருகிலிருந்து அகலப் போவதில்லை என்று கூறி பெரிய பந்தல் அமைத்து சுமார் 3000 பெண்கள் உட்பட சுமார் 5000 அங்கேயே தங்கியுள்ளனர் .

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு உணவு தயாராகிறது 

இதன் காரணமாக அணு உலைப் பணிகளை நிறுத்தியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு அரசு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது  .

மக்களின் இந்த  நியாயமான போராட்டம் வெற்றி பெற அனைவரும் உதவுங்கள் .

17 கருத்துகள்:

shanmugavel சொன்னது…

பொது மக்கள் பிரச்சினையை நன்கு புரிந்துகொண்டு விட்டார்கள் என்று தோன்றுகிறது.வாழ்த்துக்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

வாழ்த்துக்கள்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

போராட்டங்கள் முன்னேறுகிறது...

Thennavan சொன்னது…

நம்மால் களத்தில் அவர்களோடு நின்று போரடமுடியவிட்டலும் இணைய ஊடகங்களின் வாயிலாக ஆதரவை தெரிவிப்போம் .

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாலா அண்ணா,

நலமா?

நேற்றைய தினம் உங்கள் வலைக்குள் பிரவேசிக்க முடியவில்லை.
ப்ளாக் ரிமூப் பண்ணப்பட்டதாக அறிவிப்பு வந்தது.
அது தான் லேட்

நிரூபன் சொன்னது…

மக்கள் புரட்சியின் மறு வடிவம் இப்போது கூடங்குளத்தில்.

இம் மக்களின் போராட்டத்திற்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை

நிரூபன் சொன்னது…

டெம்பிளேட் டிசைனிங் கலக்கல்

கூடல் பாலா சொன்னது…

@நிரூபன் வணக்கம் நிரூ ...நலம் .நேற்று எனது பிளாக்கை முடக்க சதி நடந்துள்ளது .காலையில்தான் சரி செய்தேன் ....அணுசக்தி துறை ஆதரவாளர்கள் வேலையாக இருக்கலாம் ....நன்றி மாப்ள !

SURYAJEEVA சொன்னது…

அருமையான தகவல்கள்... நான் வேறு என்ன சொல்ல போகிறேன்... இன்குலாப் ஜிந்தாபாத்

kumaravel சொன்னது…

theeparavatum. anuulaikku ethirana poraatam vellattum.tamilnaadengum, poraatam nadathavendum . kumaravelmkvel@gmail.com

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் TM 7

M.R சொன்னது…

அவர்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள் நண்பா

ராஜா MVS சொன்னது…

மக்களின் இந்த உறுதியான முடிவே இப்போராட்டம் வெற்றியடையும் என்பதை துளியும் சந்தேகமின்றி நமக்கு காட்டுகிறது....

ராஜா MVS சொன்னது…

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்... நண்பா...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இதனிடையே இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொட முதல்வர் போராடும் மக்களில் தன்னையும் ஒருத்தியாக இணைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார் .இது மக்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது .//

முதல்வருக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளோம்...!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மக்களின் இந்த நியாயமான போராட்டம் வெற்றி பெற அனைவரும் உதவுங்கள் .//

நிச்சயமாக....

மாய உலகம் சொன்னது…

மக்களின் பலம் அரசுக்கு தெரிய ஆரம்பிக்கிறது... வாழ்த்துக்கள்