23 அக்டோபர் 2011

அணு உலை அரக்கனின் கொடூரம் :வீடியோ

ஜப்பானில் கடந்த 11-3-2011 அன்று நிகழ்ந்த சுனாமி தாக்குதலால் புகுஷிமா அணு உலைகள் கடும்   சேதமடைந்து  கதிரியக்கத்தை வெளியிட ஆரம்பித்தது .
அதை தொடர்ந்து அணு உலையை சுற்றி 30 கிலோமீட்டருக்குள் வசித்த மக்கள் உடனடியாக  வெளியேற்றப்பட்டனர் .

கதிர்வீச்சிலிருந்து தங்களை பாதுகாக்கவேண்டும் என்பதற்காக மக்கள் அனைவரும் பணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மட்டும்  கையிலெடுத்துக்கொண்டு  மீதமுள்ள உடைமைகள்  அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு வெளியேறினார்கள் .ஆனால் இந்த அவசரத்தில் தாங்கள் வளர்த்த செல்லப் பிராணிகள் மற்றும் கால் நடைகளை அவர்களுடன் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது .

கீழே காணப்போகும் வீடியோ புகுஷிமாவிலிருந்து 30 கிலோமீட்டருக்குள் இருந்த ஒரு கால்நடைப் பண்ணை .இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால் நடைகள் வளர்க்கப் பட்டு வந்தன .பசுவின் பாலில் கதிர்வீச்சின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால்  பண்ணையின் உரிமையாளர்கள் அவற்றை  அடைத்துப்  போட்டுவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டார்கள் .பசுக்களுக்கு உணவில்லாததாலும் ,வெளியேற முடியாததாலும் அவை ஒவ்வொன்றாக மடியும் காட்சிதான் இது .





இது போல மேலும் பல இடங்களில் பல்லாயிரக் கணக்கான வீட்டு விலங்குகள் மடிந்துள்ளன .

இது போன்ற சம்பவங்களால்தான் மனம் மாறிய ஜப்பான் அரசு அணு உலைகளை மூட முடிவெடுத்துள்ளது .


டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு

12 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

அந்த மாடுகளின் சத்தம் என் காதுகளில் இன்னும் இரண்டு நாட்களுக்கு ஒலித்து கொண்டே இருக்கும்...

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

கொடுமை...

ஆனாலும் ஜப்பான் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது.

ராஜா MVS சொன்னது…

பரிதாபமான சம்பவம்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பரிதாபமாக இருக்கிறது பாவம்....!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

https://www.facebook.com/Sureshonline/posts/2401173676198?notif_t=feed_comment_reply//

இதையும் கொஞ்சம் படியுங்கள்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

http://facebook.com/Sureshonline

M.R சொன்னது…

கொடுமை நண்பா ,மனம் வருந்துகிறது

வலிப்போக்கன் சொன்னது…

ஏற்கனவே போபால், அடுத்து அணுஉலை
தான் சந்தேகமேயில்லை. எனக்கு என்னமோ உன்னாவிரத போராட்டத்திலா
அசைந்து கொடுக்க போறாங்க?

shanmugavel சொன்னது…

அவசியமான நினைவூட்டல்.

சம்பத்குமார் சொன்னது…

அந்த பசுக்களின் சத்தம் இன்னும் காதுகளை விட்டு அகல மறுக்கிறது..

இது எங்கேயும் தொடரக்கூடாத விஷயம்

மகேந்திரன் சொன்னது…

கொடூரமான சம்பவம்...
குறைந்த பட்சம் இதைப்பார்த்தாவது
மனம் திருந்தினார்களே...
சம்பவங்களை பார்த்து பாடம்
கற்றுக்கொள்வதே மனித இனம்..
அதே சம்பவம் நடந்தால் தான் நானும் திருந்துவேன்
என்று அடம் பிடிக்க கூடாது.
நம்மவர்களும் திருந்தவேண்டும்.

நிரூபன் சொன்னது…

இவற்றையெல்லாம் பார்த்துமா மத்திய அரசும், தமிழக அரசும் மக்கள் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள்?