கூடங்குளம் அணு உலை கடந்த இரு மாதங்களாக நிறுத்தப்பட்டு வைக்கப் பட்டுள்ளது
.இந்நிலையில் தமிழக அரசு அமைத்துள்ள நால்வர் நிபுணர் குழு அணு உலையைப்
பார்வையிடுவதற்காக கூடங்குளம் வந்தது .
அதே வேளையில் நிபுணர் குழு அணு மின்
நிலையத்திற்குள் செல்வதற்கு முன்னதாக அணு மின் நிலைய அதிகாரிகள் நான்கு
வாகனங்களில் அணு மின் நிலையத்திற்குள் சென்றனர் .
இதை அணு மின்
நிலையத்திற்கு எதிரில் அமைக்கப் பட்டிருக்கும் அணு உலை எதிப்பு
அலுவலகத்திலுள்ள நபர்கள் பார்த்தனர் .அவர்கள் இதை உடனடியாக ஊர் மக்களுக்கு
தெரியப் படுத்தினர் .
உடனடியாக ஆலயங்களில் மணியடிக்கப் பட்டு மக்கள் திரண்டு
அணு உலை முன்பாக சென்று முற்றுகையிட்டனர் .தமிழக நிபுணர் குழுவை மட்டுமே
அணு உலைக்குள் அனுமதிப்போம் என்றும் ,பிரச்சினை முடியும் வரை அணு மின்
நிலைய ஊழியர்களை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்பது மக்களின் கருத்து
.
அதன் பின்னர் நிபுணர் குழுவினர் அணு மின் நிலையத்திற்குள் சென்றனர் .அணு
மின் நிலைய ஊழியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று(18 -2 -2012 )
மதியத்திலிருந்து இரவு 9 மணி வரை முற்றுகைப் போராட்டம் நடந்தது.
அணு மின் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்
5 கருத்துகள்:
Nallathey nadakkum....
Versatile Blogger Award தங்கள் வலைப்பூவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்று மகிழ்வீர் தோழரே!
அன்புடன் அட்சயா!
http://atchaya-krishnalaya.blogspot.in
வெல்லட்டும் தொடர் போராட்டம்...
ஆலயங்களில் மணி அடிக்கிற பிரச்னையினாலதான் ஆளுங்கட்சி இத்தனை நாளா யோசிக்குது பாலா....இல்லாட்டி என்னிக்கோ இந்த அணு உலையைத்தொரந்திருப்பய்ந்க. கோயில்களில் மணி அடித்திருந்தால் பொடனியில தட்டி உக்கார வச்சிருப்பானுக...மணி அடிக்கிறது ஆலயமல்லோ....எல்லாம் இந்த நாசமாப்போன ஒட்டு வங்கி சிறுபான்மை அரசியல் தான். அதனால தான் போராட்டம் வெள்ளி விழா கொண்டாடுகிறது
வெல்லட்டும் தொடர் போராட்டம்...
கருத்துரையிடுக