21 பிப்ரவரி 2012

அணு உலையை நிரந்தரமாக மூடு -இடிந்தகரையில் இன்று 10000 பேர் உண்ணாவிரதம் !

கூடங்குளம் அணு மின் நிலையம் மக்கள் போராட்டத்தையடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது .

இந்நிலையில் மாநில அரசின் வல்லுநர் குழு இரு தினங்களுக்கு முன் கூடங்குளம் வந்தது .ஆனால் மக்களை சந்திக்காமல் அணு உலையை மட்டும் சுற்றி பார்த்துவிட்டு அணு உலைக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டது .

இது கூடங்குளம் பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக நேற்று மாலை அவசரமாக அணு உலை போராட்டக்குழுவினர் ஆலோசனை நடத்தினர் .

அதன்படி தமிழக அரசின் வல்லுநர் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ,கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் நேற்று (20 -2 -2012 )நள்ளிரவு 12  மணியிலிருந்து 72  மணி நேரம் தொடர் உண்ணாவிரதம் தொடங்கப்பட்டுள்ளது .

கூடங்குளம் பகுதியைச் சார்ந்த 107  பேர் இந்த தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இவர்களுக்கு ஆதரவாக இன்று 10000  க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

உண்ணாவிரதத்தில் மாநில நிபுணர் குழு மக்களை சந்திக்க வேண்டும் எனவும் அவ்வாறு சந்திக்காமல் ஒரு தலைப் பட்சமாக ஆய்வறிக்கையை வெளியிட்டால் அதை  50000  க்கும் மேற்பட்டோர் கூடி  தீயிட்டு கொழுத்துவோம் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

9 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அணு உலையை நிரந்தரமாக மூடு...

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

புகைப்படங்கள் நாங்கள் நேரில் வந்திருந்த அந்த கணங்களை நினைவு படுத்துகின்றன..

அந்த வீரத்தாய்களுக்கு ஒரு ராயல் சல்யுட்....

குருத்து சொன்னது…

தொடர்ந்து செய்தி தாருங்கள். உங்கள் பணி தொடரட்டும்!

நீங்கள் சென்னையா? வருகிற சனிக்கிழமை அணு உலை எதிரான ஒரு பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது.

வாய்ப்பிருந்தால் கலந்துகொள்ளுங்கள். நன்றி.

Prabu Krishna சொன்னது…

நிச்சயம் உண்மை வெற்றி பேரும் அண்ணா.

இது மக்கள் போராட்டம். புகைப்படங்கள் அருமை.

Unknown சொன்னது…

நண்பரே!
தங்கள் உடல் நலம் எப்படி?
கவனம் தேவை!
போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

புலவர் சா இராமாநுசம்

பெயரில்லா சொன்னது…

கூடிய விரைவில் உதயகுமார் கோஷ்டிக்கு நல்லா அடி விழுவும் போல இருக்கே.

படிப்பறிவு இல்லாத கிழவிகளை சும்மா பயமுறித்து வைத்து 10000 என்று கணக்கு வேற. இருப்பது 1000 கூட தேறாது

rajamelaiyur சொன்னது…

இதற்க்கு முடிவுதான் என்ன ?

rajamelaiyur சொன்னது…

இன்றைய பதிவில்

விஜயின் துப்பாக்கி படம் கைவிடப்பட்டதா ? - விஜய் பரபரப்பு பேட்டி

Thennavan சொன்னது…

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

ஆபத்தான அணு உலை வேண்டாம்! அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும்!!


பொதுக்கூட்டம்
பிப்ரவரி 25, மாலை 6 மணி

எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், சென்னை.
தலைமை

தோழர் அ. முகுந்தன், தலைவர், பு.ஜா.தொ.மு, தமிழ்நாடு
சிறப்புரை

தோழர் மருதையன், பொதுச்செயலாளர், ம.க.இ.க தமிழ்நாடு

தோழர் ராஜூ, வழக்குரைஞர், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்,தமிழ்நாடு

புரட்சிகர கலைநிகழ்ச்சி, ம.க.இ.க மையக் கலைகுழு

பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் வருக